பத்தோடு பதினொண்ணு. எப்படித் தான் துணிந்து இந்த மாதிரி படங்கள் எல்லாம் எடுக்கிறாங்களோ? சுசீந்திரன் பெயருக்காக படத்துக்குப் போறவங்க தான் இருப்பாங்க. வலுவில்லாத திரைக்கதையும் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன சண்டை காட்சிகளளும் அவர்களை நொந்து நூடுல்ஸ் ஆக்கி விட்டிருக்கும்! டப் டப் டப்பென்று தீபாவளி துப்பாக்கி வைத்து சுடுவது போல ஏகத்துக்கு போலிசும் கெட்டவர்களும் சுட்டுக் கொள்ளும் சண்டைக் காட்சியில் நம் கையிலே ஒரு துப்பாக்கி இருந்திருந்தால் நாமும் பக்கத்தில் இருப்பவரை சுட்டிருப்போம். அப்படி ஒரு mind numbing fight sequence.
விஷால் அண்ணே நீங்க திருட்டு விசிடிக்காகப் போராடறது எல்லாம் சுப்பர் தான். ஆனால் இந்த மாதிரி படத்தில் நடித்தால் யாரண்ணே திரை அரங்கில் போய் பார்ப்பான். கொஞ்சம் சோஷியல் ரெஸ்பான்சிபிலிடியோடு படத்தைத் தேர்வு செய்யுங்கள்.
மதுரை ஒரு காலத்தில் சங்கத் தமழ் வளர்த்ததற்கும் கலை நயமும் பக்திப் பரவசமும் பெருக்கும் கோவில்களையும் நினைவூட்டிக் கொண்டிருந்ததை வெறும் தாதாக்களின் ஊராக அடி தடி, கொலை, கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கும் ஊராக இன்றைய தலைமுறையினர் நினைக்கத் தொடங்கியிருப்பதற்கு, நன்றி சினிமா கதை எழுத்தாளர்களே!
காஜல் அகர்வால் ஹீரோயினி. அவர் சமீபத்தில் நடித்தப் படங்களில் ஹீரோவை வைத்து மட்டுமே எந்தப் படம் என்று கண்டுபிடிக்க வேண்டிய சூழல். அனைத்தும் ஒரே ரகம். D.இமான் இசை, ஒரே ஒரு பாடல் தவிர (சிலுக்கு மரமே) வேறு எதுவும் மனத்தில் நிற்கவில்லை. சமுத்திரக்கனி பாவம் அவரே கன்வின்ஸ் ஆகாத பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அப்போ நமக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள்.
விஷால் ட்ரிம் ஆக பாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி உள்ளார். நடனம், பைட், சூரியுடனான மொக்கக் காமெடி இவை அனைத்திலும் நன்கு பரிமளிக்கிறார். வாழ்க வளமுடன், நம்மை கழுத்தறுக்காமல். இந்தப் படத்துக்கு எதுக்கு ரஜினி பட டைட்டில் என்று புரியவில்லை. எந்த டைட்டில் வைத்திருந்தாலும் ஒகே தான்.
Sep 05, 2015 @ 04:32:30
பாவம் சுசீந்திரன். இதுக்கு மேல என்ன சொல்றது. சுசீந்திரனுடைய பலமே கதைதான். ஹீரோக்களை தூக்கிப் போட்டுட்டு கதையைத் தூக்கீட்டு வாங்க சுசீந்திரன் சார். உங்க மேல நிறையவே நம்பிக்கையிருக்கு.
Sep 06, 2015 @ 00:05:13
ஹிஹி