முதலில் குற்றம் கடிதல் என்றால் என்ன பொருள் என்று பார்த்துவிடுவோம். கடிதல் என்ற சொல்லுக்கு ஒன்று தவிர்த்தல், இரண்டாவது கடிந்துகொள்ளுதல் அல்லது தண்டித்தல். இதில் இரண்டாவது பொருள் கதைக்குப் பொருந்துகிறது.
நிறைய செய்திகள்/கருத்துகளை ஒரே படத்தில் சொல்ல முயன்று எதை முக்கியமாக சொல்ல வருகிறார் என்று நமக்குப் புரியாமல் போய்விடுகிறது. புதுமுகங்களை வைத்து இயக்குநர் பிரம்மா நன்றாக இயக்கியுள்ளார். மதம், கம்யுனிசம், சந்தர்ப்ப சூழ்நிலைகள், அதனால் ஏற்படும் நம்பிக்கைகள், மனித உணர்ச்சிகள், பள்ளிகளில் பாலியல் கல்வி, ஆசிரியர்கள் பள்ளியில் குழந்தைகளை அடிக்கும் பழக்கம், தாய்மையின் பல பரிமாணங்கள், இவை அனைத்தையும் படத்தில் தொட்டிருக்கிறார் இயக்குநர். பல விருதுகளை அதற்குள் இப்படம் பெற்றுள்ளது. என்னைப் பொறுத்த வரையில் பாராட்ட வேண்டிய முயற்சி என்றளவில் தான் இப்படம் என்னை ஈர்த்துள்ளது.
நடிகர்கள் அனைவரும் வெகு நன்றாக நடித்துள்ளனர். படம் ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு கதாப்பாத்திரமும் தனித் தனியாக நின்று சிறிது நேரத்திலேயே அவர்கள் யாவரும் ஒரு சூழ்நிலையால் இணைய வைத்திருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். சந்தர்ப்ப சூழ்நிலை எப்படி ஒவ்வொருவரையும் மாற்றுகிறது என்பதை சற்றே மிகைப் படுத்திக் காட்டுகிறார் இயக்குநர். பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே பாடலை இன்னும் நல்ல முறையில் படத்தில் பயன்படுத்தி இருக்கலாம்.
முதலில் நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு படம் முடியும் தருவாயில் சப்பென்று முடித்துவிட்டார். அவருடைய இரண்டாவது படம் இன்னும் நன்றாக அமைய வாழ்த்துகள் 🙂
Sep 26, 2015 @ 02:03:32
அருமை அருமை.
நிறைகுறையில், எப்போதும் நிறை 90%, குறை 10% காணும் உங்களின் திரை விமர்சனம், படிக்க இதமாக இருப்பதில் வியப்பில்லை. குற்றம் கடிதல் – தவிர்த்தல் என்பது பொதுவான உங்கள் பாணி :))
அப்படியும் சில படங்கள் உங்களை சோதித்து விடுவதுமுண்டு என்பதையும் வாசகர்கள் அறிந்தே உள்ளனர்.
முத்தாய்ப்பா, டைரக்டரின் அடுத்த படத்திற்கு வாழ்த்து சொன்னீங்க பாருங்க, அங்க நிக்கிறீங்க :))
வாழ்த்துகள்