கஜனி படத்தில் அசின் மூணு அம்பாசடர் கார் வாங்கிய பின் தான் திருமணம் என்று சூர்யாவிடம் தன் சபதத்தைச் சொல்வது போல இங்கு நயனும் விஜய் சேதுபதியிடம் அவர்களின் காதல் நிறைவேற ஒரு வித்தியாச விண்ணப்பம் வைக்கிறார். படம் காமெடி என்பதால் மிகவும் ரசித்துப் பார்க்க முடிகிறது. பல இடங்களில் சிரித்து சிரித்து சற்றே வயிறு வலியும் வருகிறது 🙂
இயக்குநர் கையில் தான் நடிகர்கள் பங்களிப்பு பிரகாசிப்பது உள்ளது என்பது இப்படத்தின் மூலம் இன்னொரு முறை நிருபணம் ஆகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரிடம் இருந்தும் நல்ல நடிப்பை வாங்கியிருக்கிறார். கூட நடிக்கும் ஆர்ஜே பாலாஜியும் அவரின் பாத்திரத்திற்கு வெகு பொருத்தம். ஒவ்வொரு படத்துக்கும் விஜய் சேதுபதிக்கு வித்தியாசமான வேடம் கிடைப்பது/தேர்ந்தெடுப்பது அவர் கெரியரை சிறப்பாக்குகிறது. இதில் தாடி இல்லாமல் இளமையாகக் காட்சி அளிக்கிறார். தாடியை எடுக்க வைத்த இயக்குநருக்குப் பாராட்டுகள் 🙂
நயனுக்கு நல்ல பெர்பார்ம் பண்ணக் கூடிய ரோல். சோகம், இயலாமை, கெத்து, காதல், வெகுளித்தனம், வைராக்கியம் என்று பலதும் காட்டக் கூடிய ஒரு பாத்திரம். இப்போ தமிழ் சினிமாக்களில் ஹீரோயினுக்கு எங்கே நடிக்க வாய்ப்பு உள்ளது! நாலு நடனம், நாலு வசனம் அவ்வளவே! ஆனால் இந்தப் படத்தில் ரெகுலரா வரும் டூயட் கூட இல்லை.
இப்படத்தில் பின் பாதியில் வரும் ஹீரோவுக்கு உதவும் கதாபாத்திரங்கள் செம ரகளை ரகம். அதில் ஒரு தாத்தா பெயர் ராகுல்! அவர் செய்யும் காமெடியும் நேர்த்தி! 🙂 வில்லன் பார்த்திபன். நல்ல சாய்ஸ்! அவரும் ரொம்பக் கோணங்கி பண்ணாமல் வில்லனாக நடித்திருக்கிறார். ராதிகா விஜய் சேதுபதியின் அம்மாவாக வருகிறார். பெரிய ரோல் இல்லை. படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை எந்தப் பாத்திரத்தின் தன்மையையும் மாற்றாமல் கதையைக் கொண்டு செல்வது இப்படத்தின் வெற்றிக்குக் காரணம். அது தான் நம்மை படத்தை அங்கு ரசிக்க வைக்கிறது. எப்படியாப்பட்ட சொங்கி ஹீரோவும் கடைசியில் வில்லனை ஒரு கை பார்ப்பான். அதெல்லாம் இப்படத்தில் இல்லை. விஜய் சேதுபதி முதலில் இருந்து கடைசி வரையில் ஒரே மாதிரி வருகிறார்.
பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே ரொம்ப நன்றாக உள்ளன. அனிருத் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். படம் முடிந்த பிறகும் கிரெடிட்சுடன் தொடரும் பகுதியைக் கத்திரித்து விடலாம். படத்துக்குத் தேவையே இல்லை. சற்று எரிச்சலைத் தருகிறது. படத்தின் நடுவிலும் சில இடங்களில் தொய்வு உள்ளது.
பாண்டிச்சேரியில் தான் பெரும்பாலுமானக் கதை நடப்பதால் படம் கண்ணுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. ரொம்ப சிம்பிள் படம், லோ பட்ஜெட். நயன்தாரா தவிர பெரிய தொகை வாங்கும் கலைஞர்கள் படத்தில் இல்லை. அதனால் தனுஷுக்கு படத் தயாரிப்பு நன்றாக கை வந்திருக்கிறது என்று சொல்லலாம். வாழ்த்துகள் “நானும் ரவுடி தான்” டீமுக்கு 🙂
Oct 23, 2015 @ 12:23:45
நகைச்சுவைப் படம்னு சொன்னாங்க. நீங்களும் அதுதான் சொல்றீங்க. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படமும் நகைச்சுவைன்னு மக்கள் எல்லாரும் சொல்லிப் பாராட்டுறாங்களேன்னு போய் பாதியில ஓடி வந்த அனுபவம் இன்னும் பயத்தக் கொடுக்குது. சரி. பொறுமையாப் பாத்துக்கலாம் 🙂
Oct 23, 2015 @ 13:08:40
நீங்க என்ன விமர்சனம் செய்தாலும் அது சரியாத்தானிருக்கும் :))
படம் பார்த்துவிட்டு வந்து சொல்றேன் :))
நன்றி. வாழ்த்துகள்
Oct 23, 2015 @ 14:48:31
வர வர விமர்சனம் மெருகேறிக் கொண்டே வருகிறது! நல்ல படம் என்று பலரும் சொல்லுகிறார்கள். பார்த்திடணும்!
Oct 24, 2015 @ 06:06:54
இயக்குநர் யார் என்று பார்க்கவே வேண்டியதில்ல..விஜய் சேதுபதி படம் என்றால் நிச்சயம் பார்க்கலாம் கதைக் களம் நன்றாக இருக்கும் என்றொரு நம்பிக்கை வந்திருக்கிறது..அவரும் அதைக் காப்பாற்றுகிறார் என்றே இப்படமும் நிரூபித்து இருக்கும் போல..நிச்சயம் படம் பார்க்கணும்..:)
Nov 08, 2015 @ 05:38:45
தோகாவில் ஏசியா டவுன் திரையரங்கில் சென்ற வெள்ளியன்று(தான்) பார்த்தேன். பெரிய திரையரங்கம், படம் வந்து ஒரு வாரம் கடந்துவிட்டதால் கூட்டம் கம்மி. ஆனால், வந்திருந்தஅனைவரும் வெகுவாக ரசித்தார்கள். அதிலும் பலருக்கு இது இரண்டாவதோ, மூன்றாவதோ முறை. மிகவும் சுவாரஸ்யமாகப் படத்தைக் கொண்டு செல்வதற்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ஒரு பெரிய தாங்க்ஸ்.