படத்தின் டிரெயிலரிலேயே கமல் ஒரு போலீஸ், அவர் மகனை ஒரு போதை பொருள் கடத்தும் கும்பல் கடத்திவிடுகிறது, மகனை மீட்க கமல் போராடுகிறார் என்பது நமக்குத் தெரிந்து விடுகிறது. இப்படி இருக்கும்போது கமல் தன் மகனை காப்பாற்றாமல் இருப்பாரா என்பதும் பார்க்கும் ரசிகனுக்குத் தெரிந்திருக்கும். இவ்வளவு தெரிந்த பின், படத்தைப் பார்ப்பவரை கட்டிப் போடும் வகையில் திரைக்கதையை சுவாரசியமாக்க காதாசிரியர்/இயக்குநர் சிந்தித்து இருக்க வேண்டுமா வேண்டாமா? மொக்கப் படம் என்று சொல்ல வேண்டாம் என்று தான் நினைக்கிறேன் ஆனால் சொல்ல வைத்து விட்டார்களே என்று வேதனைப் படுகிறேன்.
என்னா ஸ்டார் காஸ்ட்! த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷா சரத், உமா ரியாஸ், கிஷோர், யூகி சேது, சம்பத், மது ஷாலினி, சந்தான பாரதி, ஜகன் மற்றும் பலர்! பிரகாஷ் ராஜ், கிஷோர், த்ரிஷா யூகி சேது தவிர மற்றவர்கள் எல்லாரும் ஓரிரு சீன்களில் தான் தலையைக் காட்டுகிறார்கள். இவர்களுக்குப் பதிலாக அந்தப் பாத்திரங்களில் எந்த துணை நடிகர் நடித்திருந்தாலும் சரியாகவே இருந்திருக்கும். அதுவும் யூகி சேது அவர் பாத்திரத்துக்கு சரியான தேர்வே இல்லை. நடிகர் கிஷோர் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் வருகிறார். அதுவே ஒரு வித நடிப்பு என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
இதில் குறிப்பிட்டு சொல்லும்படி மனத்தில் நிற்பது கமலின் மகனாக வரும் அமன் அப்துல்லா தான். மிகையில்லாத நடிப்பு. பாத்திரத்தை சரியாக உணர்ந்து நன்றாக நடித்துள்ளார். மொத்தப் படத்தில் ஒரே ஒரு சீன் மனத்தை தொடுகிறது. அது மகனுக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் ஒரு தொலைபேசி உரையாடல். மது ஷாலினியுடன் சில முத்தக் காட்சிகள் உள்ளன. அவையும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கமலுக்கு வயதாகிவிட்டதா இல்லை இயக்குநருக்கு அந்தக் காட்சியை சரியாகக் கையாளத் தெரியவில்லையா என்று தெரியவில்லை.
இது ஒரு பிரெஞ்ச் படத்தின் தமிழாக்கம். பிரெஞ்ச் படமே இவ்வளவு மொக்கையான திரைக்கதை உள்ளதாக இருந்திருந்தால் அதை தேர்வு செய்ததே தவறு. இல்லை இவர்கள் எடுத்த விதத்தில் தான் தவறு இருந்தது என்று எடுத்துக் கொண்டாலும் இயக்குநர்-தயாரிப்பாளர் குழு மொத்தப் பழியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரே இரவில் நடக்கும் காட்சிகள், ஒரே பப்பில் நடக்கும் காட்சிகள். அதனால் வித்தியாசமாக எதுவும் செய்ய இயலாதது புரிகிறது. ஆனாலும் ஒரே இடத்தை ஹீரோவும் வில்லன்களும் சுத்தி சுத்தி வருவதும், பப்பின் strobe விளக்குகளினால் நமக்கு உண்டாகும் தலைவலியும் சொல்லி மாளாது. முதல் பாதியாவது சகித்துக் கொள்ள முடிகிறது. இரண்டாவது பாதி, படம் எப்போ முடியும் எப்போ எழுந்து போகலாம் என்று தவிக்க வைக்கிறது.
அவ்வளவு பெரிய ஹோட்டல்/pub, ஆனால் கரெண்டின் மெயின் சுவிட்சை அணைத்தால் ஜெனரேட்டர் மூலம் கரண்ட் வராமல் உள்ளது. கொஞ்சமாவது ரசிகனுக்கு மூளை உண்டு என்று யோசியுங்கப்பா!
கடைசி சீனில் அமன் அப்துல்லா தன் அம்மாவிடம் போனில் பேசும் காட்சியில் உள்ள வசனம் தசாவதாரம் கடைசி வசனத்தை நினைவு படுத்துகிறது. அங்கு மட்டும் சுகா தெரிகிறார். வேறு எங்கும் இல்லை. ஜிப்ரான் இசையும் இல்லை என்றால் இது த்ரில்லர் படம் என்று மாமியார் நாகம்மா மேல சத்தியம் பண்ணா கூட யாரும் நம்பமாட்டாங்க.
கமல் நடிப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை. அவர் நடிப்பின் இலக்கணம். இந்த ரோல் எல்லாம் அவருக்கு ஜுஜுபி. படத்தைப் பார்த்ததில் எனக்கு ஏற்பட்ட தாக்கம் ஒன்றே ஒன்று. தாய் தந்தையர் பிரிந்து அதன் நடுவில் வளரும் பிள்ளைகள் பாவம்.
Nov 11, 2015 @ 15:25:57
நீங்க மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். எனக்கு படம் OK வாகத்தான் இருந்தது. அதிக விறுவிறுப்பு இல்லை அதே சமயம் தொய்வாகவும் இல்லை. ஒன்றுமட்டும் புரிந்து கொள்ளமுடியவில்லை கமல் இந்த கதையில் என்னத்தை புதிதாக கண்டார் என தெரியவில்லை.
Nov 11, 2015 @ 16:42:41
🙂
Nov 11, 2015 @ 15:59:55
என்னம்மா.. இப்படி பயமுறுத்துறீங்களேம்மா… பாக்கலாமா வேண்டாமான்னு யோசிக்க வெச்சிட்டீங்களே.
கிஷோர் எந்தப் படத்துல நடிச்சிருக்காரு. வெறப்பா முகத்தை வெச்சுக்குற ஒரே வேலையத்தான எல்லாப் படத்துலயும் பண்றாரு.
//மாமியார் நாகம்மா//
படத்துல இவங்க யாரோட மாமியார்னு சொல்லவே இல்லையே :)))))
Nov 11, 2015 @ 16:42:15
அது வடிவேலு டயலாக் ஜிரா 🙂 வடிவேலு டயலாக் இப்போ ட்விட்டரில் நமக்கு எல்லாம் மனப்பாடம் ஆச்சே 🙂 🙂
Nov 11, 2015 @ 16:01:52
ஜுஜுபி… + பாவம்…
Nov 11, 2015 @ 16:42:27
🙂
Nov 11, 2015 @ 18:17:32
Expectations always hurt! Has Kamal got carried away with heir sentiment or as the review says, his aging got reflected even in sensational scenes? He has to do the retrospect.