கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற பார்த்திபன் இயக்கிய படத்தின் இன்னொரு பதிப்பு தான் உப்பு கருவாடு. ஆனால் நாடக பாணியில் வெறும் துணுக்குத் தோரணமாக அமைந்துள்ளது இப்படம். இரண்டு கோடிக்குள் படம் எடுக்க வேண்டும் என்பது இந்தப் படக் கதையின் கதைக்குள் வரும் படத்தை எடுப்பதில் ஒரு கண்டிஷன். அதுவே இந்தப் படத்துக்கும் இருந்திருக்கும் என்று நன்றாகத் தெரிகிறது. சிறிய பட்ஜெட் படம் தவறே இல்லை. இன்னும் சொல்லப் போனால் நஷ்டத்தைத் தடுக்க முதல் படி செலவை குறைப்பது தான். ஆனால் திரைக் கதையில் சுவாரசியமே இல்லாமல் ஒரு படம் எடுத்தால்? இடைவேளையின் போது எழுந்து போய்விடலாமா என்றளவில் இருந்தது படம். ராதா மோகன் படம் என்று நம்பிப் போனேன்!
கருணாகரன் தான் படத்தின் கதாநாயகன். கொடுத்த ரோலை நன்றாக செய்துள்ளார். நாயகி நந்திதா. அசட்டு கதாப் பாத்திரத்துக்கு நன்றாக செட் ஆகிறார். இளங்கோ குமாரவேல், ராதா மோகன் படங்களின் அத்தியாவசிய நடிகர், நன்றாக நடித்துள்ளார். ஆனால் ஒரே மாதிரி கேரக்டர் ரோலில் அவரை திரும்பத் திரும்பப் பார்க்க அலுப்பாக உள்ளது.
எம்.எஸ்.பாஸ்கர் தான் மீன் வியாபார காந்தம். அவர் தான் மகளை ஹீரோயின் ஆக்கப் படம் எடுக்கிறார் . அதை செயல்படுத்த, எப்படியாவது ஒரு படத்தை நன்றாக எடுத்துப் பேர் வாங்கத் துடிக்கும் கருணாகரன் மாட்டுகிறார். அவர்கள் டீம் செய்யும் மொக்க ஸ்டோரி டிஸ்கஷன் தான் முக்கால் வாசிப் படம். இப்படி ஸ்டோரி டிஸ்கஷன் செய்யும் போது அவர்கள் வைக்கும் சீனில் உள்ள ஓட்டைகளைக் காட்டும் கேரக்டராக வரும் இளங்கோ குமாரவேல் மாதிரி ராதா மோகனுக்கு நிஜத்தில் யாரும் கிடைக்கவில்லை என்பதே பரிதாபம்.
பாப்பாரப் பேச்சுடன் மீன் குழம்பையும் சுறா புட்டையும் வெட்டும் கேரக்டராக சாம்ஸ். மயில்சாமிக்கு நீண்ட பாத்திரம். படம் முழுவதும் வருகிறார். இந்தப் படத்தின் சர்ப்ரைஸ் கேரக்டர் ஆதித்தியா டிவியின் டேடி எனக்கொரு டவுட்டு செந்தில் 🙂 ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார். சிரிப்பை வரவழைக்கும் இவரின் டயலாக் டெலிவரியும் அவருக்கான வசனங்களும் படத்தின் பெரும் ஆறுதல்! இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா டைப்பில் அவர் ரோல் நன்று 🙂
குறும்படமாக எடுத்திருக்க வேண்டியதை இரண்டு மணி இருபது நிமிடங்களா நீட்டி நம்மை சோதித்து விட்டார் ராதா மோகன். சினிமா என்பது ஒரு விஷுவல் மீடியம். அவ்வாறு செய்யாமல் வெறும் பேச்சு பேச்சு என்றே படத்தை நகர்த்தியிருப்பது ஆயாசத்தைத் தருகிறது. கேரக்டர்கள் நன்றாக செதுக்கப் பட்டிருந்தன. நல்ல நடிகர்கள். இருந்தும் கருவாடே இல்லாமல் வெறும் உப்பைத் தொட்டுக் கொண்டு என்ன செய்வான் ரசிகன் பாவம்?
Dec 01, 2015 @ 08:59:43
கருவாடே இல்லாமல் வெறும் உப்பைத் தொட்டுக்கொண்டு – இதுதான் டக்கர் விமர்சனம்
இராதாமோகன் படங்கள்னா பெரும்பாலும் வசனங்கள்தான். பழைய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பாணி.
ஆனாலும் படத்தை நானும் பாக்கலாம்னு எண்ணம். மழை கொறைஞ்சா நாளைக்குப் போகனும். 🙂
Dec 01, 2015 @ 11:20:17
please do :-)) Yes he is like KSG only 🙂
Dec 01, 2015 @ 11:40:32
அடை மழையில் உப்பு தனியா கருவாடு தனியாக போயிருக்கும்