My Dear Desperado என்ற கொரியன் படத்தின் தழுவல் தான் க க போ! நலன் குமாரசாமியும் விஜய் சேதுபதியும் மறுபடியும் இணைந்து கொடுக்கும் படம் இது. சூது கவ்வும் படத்தின் தரத்தை எதிர்ப்பார்த்துப் போனால் ஏமாற்றமே. சூது கவ்வும் ஒரு மாறுபட்ட கதையாலும், கதை சொல்லும் விதத்தாலும் அனைவரையும் மிகவும் கவர்ந்தது.
ரவுடிகளின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களில் அடியாட்கள் பாதிக்கப் படும் பக்கத்தைக் காட்டுவதில் இந்தப் படமும் ஒரு புதுக் கதையை சொல்கிறது என்றாலும் திரைக் கதையில் சுவாரசியம் குறைவாக இருப்பது படத்தின் தொய்வுக்குக் காரணமாகிறது.
இப்படத்தில் ஒளிப்பதிவு {தினேஷ் கிருஷ்ணன்} என்னை மிகவும் கவர்ந்தது. நிறைய மழை வரும் சீன்கள் உள்ளன, படம் முடியும்போதும் மழை தான். அரங்கத்தை விட்டு வெளியே வரும்போது என்ன வெளியே மழை இல்லையே என்று ஒரு நொடி தோன்றுகிறது. அந்த அளவு அருமையான ஒளிப்பதிவு! பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்கு மிகவும் அழகாகப் பொருந்துகிறது. சந்தோஷ் நாராயணனுக்கு இந்தப் படமும் ஒரு ஹிட் தான்.
ப்ரேமம் படத்தில் செலினாக நடித்த மடோன்னா செபாஸ்டியன் செமையாக ஸ்கோர் செய்திருக்கிறார். நல்ல அழகு, தெளிந்த நடிப்பு. சரியான பொருத்தம் பாத்திரத்துக்கு. அவருக்கு உடைகளை தேர்ந்தெடுத்தவர் அற்புதமாக தேர்வு செய்திருக்கிறார். ஒவ்வொரு சீனிலும் அவரே ஸ்கோர் செய்கிறார். கதாநாயகி யாழினியைச் சுற்றி கதை அமைந்திருப்பதும் இப்டத்தில் பாராட்டக் கூடிய ஓர் அம்சம்.
விஜய் சேதுபதிக்கும் பொருத்தமான ஒரு பாத்திரமே. பெற்றோர் இல்லாத, வழிகாட்டுதல் இல்லாத ஒரு அடி வாங்கும் அடியாள் பாத்திரம் சேதுபதிக்கு. ஏமாற்றப் படுகிறோம் என்று தெரிந்தும் எதுவும் செய்ய வலுவில்லாத ஒரு நல்ல ரவுடி கதாப் பாத்திரம் அவருடையது. நடிப்பு என்று சொல்ல முடியாத அளவுக்கு வெகு இயல்பாக செய்திருக்கிறார்.
நாயகன் நாயகி இருவரின் பாத்திரமும் நன்றாக செதுக்கப் பட்டுள்ளது. முதலில் இருந்து கடைசி வரை அவர்கள் பாத்திரத் தன்மையில் பிறழ்ச்சி இல்லை. இருவருக்கும் இடையே ஏற்படும் நட்பும் ஒரு கவிதை போல் உள்ளது.
பிரச்சினை கதையில் தான் வருகிறது. எந்த குறிக்கோளுக்காக யாழினி சென்னையில் அவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார் என்று புரியவில்லை. விழுப்புரத்தில் இருந்தும் கூட அவர் மறுபடியும் வேலை தேடிக் கொண்டிருக்கலாம். அதே மாதிரி கடைசியில் காவல் நிலையத்தில் நடந்தது என்ன என்று புரியவில்லை. சமுத்திரக் கனியை கொல்ல முடிவெடுத்ததும் ஏனென்று தெரியவில்லை. அதையும் தவிர அவ்வளவு கெட்டவனான சமுத்திரக்கனி வேலையை முழுதும் முடிக்காமல் போவதும் ஏனோ?
க்ளைமேக்சில் நடக்கும் சம்பவங்களில் நம்பகத் தன்மை இல்லாததால் எரிச்சல் ஏற்படுகிறது. ஆனாலும் விஜய் சேதுபதி, மடோன்னா செபாஸ்டியன் பங்களிப்பால், ஒரு பீல் குட் மூவியை பார்த்த எண்ணம் அரங்கை விட்டு வெளியே வரும்போது வருகிறது.
Mar 11, 2016 @ 18:16:01
நன்றி. நீங்காக் சொன்னா அது சரியாத்தானிருக்கும்.:)
படம் பார்த்திட்டு வந்து சொல்றேன்.:))
நன்றி வாழ்த்துகள்
Mar 12, 2016 @ 03:27:10
விமர்சனத்தில் ஓப்பனிங்கிலேயே ஒரு படம் அவுட்னு சொல்லிடக்கூடாது, நெட் தமிழன் ஸ்கிப் ஆகிடுவான், கடைசி பேரா/லைனிலும் சொல்லக்கூடாது, கடைசி லைன் மட்டும் படிச்சுட்டுப்போய்டுவான் ( ஒரு வேளை நான் உளர்றனோ? )
விமர்சனம் எப்பவும் போல குட், இங்கே கேரளாவில் ரிலீஸ் ஆகலை,நான் படிக்கும் முதல் காகபோ விமர்சனம் இது 😉
Mar 12, 2016 @ 05:27:17
நன்றி செந்தில், சின்னப் பையன் :-}
Mar 12, 2016 @ 05:18:03
ஆகா பகிர்வுக்கு நன்றிம்மா எங்களைக் காப்பாற்றியதுக்கும் கோட்ட்டானு கோட்டி நன்றீஸ்
Mar 12, 2016 @ 05:26:28
ha ha ha
Mar 13, 2016 @ 05:41:41
superb
Mar 13, 2016 @ 14:00:00
Now a day vimarsanangal ellam padangalin vilambaramakavE varukinRana.. periyaperiya companykalin films entral ithu 100/100 truth. oru paththirikai aasiriyaridam thayarippaalar sonnaar, “ungal paththirikaiyin last page’l full page vilamparam tharukiren enathu padaththukku nalla vimarsanam ezhuthungal endru..” that editor refused to do so. that editor was away by getting VISA…
Apr 22, 2016 @ 01:52:59
நேற்றுதான் படம் பார்த்தேன். உங்கள் விமர்சனம் அருமை
“ரவுடிகளின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களில் அடியாட்கள் பாதிக்கப் படும் பக்கத்தைக் காட்டுவதில் இந்தப் படமும் ஒரு புதுக் கதையை சொல்கிறது என்றாலும் திரைக் கதையில் சுவாரசியம் குறைவாக இருப்பது படத்தின் தொய்வுக்குக் காரணமாகிறது.”
“ப்ரேமம் படத்தில் செலினாக நடித்த மடோன்னா செபாஸ்டியன் செமையாக ஸ்கோர் செய்திருக்கிறார். நல்ல அழகு, தெளிந்த நடிப்பு. சரியான பொருத்தம் பாத்திரத்துக்கு. அவருக்கு உடைகளை தேர்ந்தெடுத்தவர் அற்புதமாக தேர்வு செய்திருக்கிறார். ஒவ்வொரு சீனிலும் அவரே ஸ்கோர் செய்கிறார். கதாநாயகி யாழினியைச் சுற்றி கதை அமைந்திருப்பதும் இப்டத்தில் பாராட்டக் கூடிய ஓர் அம்சம்”
“விஜய் சேதுபதிக்கும் பொருத்தமான ஒரு பாத்திரமே. பெற்றோர் இல்லாத, வழிகாட்டுதல் இல்லாத ஒரு அடி வாங்கும் அடியாள் பாத்திரம் சேதுபதிக்கு. ஏமாற்றப் படுகிறோம் என்று தெரிந்தும் எதுவும் செய்ய வலுவில்லாத ஒரு நல்ல ரவுடி கதாப் பாத்திரம் அவருடையது. நடிப்பு என்று சொல்ல முடியாத அளவுக்கு வெகு இயல்பாக செய்திருக்கிறார்.”
நல்லா கூர்ந்து கவனித்து விமர்சித்துள்ளீர்கள். ஒருபடித்த பெண் வேளை போய்விட்டால் உடனே ஊர் திரும்பாமல் அங்கேயே இவ்வளவு தூரம் சிரம்பப்பட்டுக்கொண்டிருக்கமாட்டாள். அதுவும் ஒரு படு ஏழை என்றில்லாமல் சுமாரான பேக் கிரவுண்ட் உள்ள குடும்பம்தான். ஒரு வேளை சக ஊழியர் காதல் நிறைவேற வெளியே சொல்ல முடியாமல் இப்படி செய்தாரோ தெரியவில்லை.
சில டாப் நடிகர்களின் நடிப்பை பார்க்கும்போது அவர்களின் பேஸ் எக்ச்பிரசன் இதற்கு முன்னமே பார்த்த ஒரு சலிப்பு ஏற்படும். ஆனால் விஜய் சேதுபதி அப்படி தெரியவில்லை. ஒரு வேளை கதை, கதாபாத்திரம், வசனம் கூட இருக்கலாம் சலிக்காமல் போவதற்கு.
நன்றி வாழ்த்துகள். I enjoyed :))
.
Apr 22, 2016 @ 03:03:44
thank you very much :-}