காணவில்லை : திரைக்கதாசிரியர், இயக்குநர், எடிடர். கண்டுபிடித்துக் கொடுப்போருக்கு பெரிய சைஸ் பாப்கார்னும் பப்சும் ப்ரீயா அனைத்துத் திரையரங்குகளிலும் இந்தப் படம் ஓடும் இரண்டு நாட்கள் வரை கொடுக்கப்படும்!
ஜீவா, நயன் என்ற பெயர்களை நம்பி படத்துக்குப் போனோம். வெச்சு செஞ்சிட்டாங்க! கெட்டவனின் அடியாள்/அநாதை ஜீவா. ஒரு சிறு தொழில் முதலாளியின் மகள் நயன். அப்போ கண்டிப்பா இவர்கள் இருவரும் காதலிப்பார்கள் என்று மழலைப் பேச்சு பேச ஆரம்பிக்கும் தமிழ்க் குழந்தை சொல்லிவிடும். அடிதடி வெட்டுக் குத்துன்னு ரவுடியிசம் பாத்திரத்தில் எவ்வளவு முறை நடித்திருக்கிறார் ஜீவா! கொஞ்சம் மாறுதலா படத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கூட அவருக்குத் தோணாதா? நயனுக்கு மேக்கப் கூட பல காட்சிகளில் போடவில்லை. எல்லாம் போதும் என்று விட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை. ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது இந்த மாதிரி படத்திலும் சின்சியராக நடித்திருக்கிறார் நயன். அதற்குப் பாராட்டுகள்! தாவணியில் ரொம்ப அழகாக இருக்கிறார்.
இந்தப் படத்துக்கு எப்படி கதையைச் சொல்லி தயாரிப்பாளரை உஷார் பண்ணினார் இயக்குநர்/கதாசிரியர் பி.எஸ்.இராம்நாத் என்று தெரியவில்லை. பத்து நிமிஷத்துக்கு ஒரு பாட்டு. அது தேவையா தேவை இல்லையா என்கிற கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது. இதைவிட கொடுமை படம் முடியும் சமயத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு நடனம். கொஞ்சமும் கதைக்கு சம்பந்தம் இல்லாமல் திணிக்கப் பட்டுள்ளது. சில பாத்திரங்கள் மீது கேமரா நிறைய போகஸ் செய்கிறது. ஏதோ அவர் பின்னால் செய்யப் போகிறார் என்று பார்த்தால் அந்தப் பாத்திரங்களே காணாமல் போய் விடுகின்றன.
கும்பகோணத்தில் கதையை வைத்தால் செண்டிமெண்டா படம் ஹிட் ஆகிவிடும் என்று நினைத்துக் கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஆனால் கதையைப் பார்த்து மனம் வருந்தி கும்பகோணமே ஹோ என்று அழுகிறது. படம் முழுதும் மழை சீன்கள் எக்கச்சக்கம். அதான் குறியீடு! திருநாள் டைட்டில் போடும்போதே குறியீடு ஆரம்பமாகி விடுகிறது. ப்ளேட் துண்டுகள் தான் திருநாள் என்று கிராபிக்சில் பாரம் ஆகிறது! அப்பவே சுதாரிச்சிருக்கணும்.
இந்தப் படத்தில் கருணாஸ் எதற்கு திக்கணும் என்று தெரியவில்லை. கேரக்டரைசேஷன் போல! கோட் கோபி நிறைய சீன்களில் நடித்து பின் கட் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். வரும் சொற்ப சீன்களில் கெத்தான போலீசா வருகிறார். நம்பி இவருக்குப் பெரிய பாத்திரம் கொடுக்கலாம்.
திரைக்கதையை ஸ்பாட்டில் எழுதி படம் எடுத்திருக்கிறார்கள். பெரிய நடிகர்களின் கால்ஷீட்டை இப்படி வீணடித்து இருக்கவேண்டாம்!
Aug 05, 2016 @ 17:42:10
படம் நல்லா இல்லைன்னாலும் விமர்சனம் நல்லா இருக்கு!
Aug 06, 2016 @ 02:22:11
நன்றி.
நீங்க பேஷ் பேஷ்னு சொன்ன படங்களையே நான் இன்னும் பாக்கல. இந்த படமா…. நோ சான்ஸ் :))
Aug 06, 2016 @ 02:53:21
போச்சா இதுவும் போச்சா
Aug 06, 2016 @ 02:53:44
விமர்சனம் ஏ ஓன் 👌🏽
Aug 08, 2016 @ 06:46:47
வன்முறை காட்சிகள் அதிகம். படம் சுமார் ரகம்தான்.