புஷ்கர்-காயத்ரி இருவரும் இணைந்து இயக்கி இருக்கும் இருவர் பற்றிய படம் விக்ரம்-வேதா! அம்புலிமாமாவின் விக்ரமாதித்தன் வேதாளம் கதையின் நீட்சியாக திருடன் போலிஸ் கதை இது. வேதாளம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டால் விக்கிரமாதித்தனின் தலை சுக்கு நூறாக உடைந்து விடும் அதனால் இக்கதையிலும் கேங்க்ஸ்டர் வேதாவின் கேள்விகளுக்குப் பதில் தேடி முடிச்சை அவிழ்க்கிறார் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரம். அருமையான திரைக்கதை மற்ற போலிஸ் கேங்க்ஸ்டர் கதைகளிலிருந்து இதனை மாறுபடுத்திக் காட்டுகிறது. முதல் பாதி முடிவுக்கு சற்று முன்பேயிருந்து சதுரங்க விளையாட்டைப் போல போலிஸ் மாதவனும் தாதா விஜய் சேதுபதியும் ஒருவரை ஒருவர் எதிராளியை அசர அடிக்கும் காய் நகர்த்தல்கள் மூலம் வெற்றிக் கொள்ள பார்க்கின்றனர். கடைசியில் இருவருமே செக்மேட் என்கிறார்களா இல்லை ஒருவர் வெற்றி பெறுகிறாரா என்பாதை வெள்ளித் திரையில் பார்க்கவேண்டும்.
மிகவும் அனுபவுமள்ள நடிகர் மாதவன். அவருக்கு ஈடு கொடுத்து மட்டுமல்லாமல் அசால்டாக {சென்னை தமிழ்} அவரை நடிப்பில் மிஞ்சப் பார்க்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்தின் வெற்றிக்குப் பெரும் பங்கு இவர்கள் இருவரின் நடிப்பு தான் என்றால் மிகையாகாது. மாதவன் ஒரு நல்ல போலிசாக வருகிறார். அவருக்கு எந்தக் கிரிமினலும் குற்றவாளி தான். ஆனால் குற்றவாளிகள் வேறு வடிவத்திலும் இருப்பார்கள் என்று அறியும்போது அவர் வெள்ளை கருப்பு என்று பகுதிபடுத்தி இருந்த பிம்பம் உடைகிறது. கெட்டவனான விஜய் சேதுபதியிடம் அவர் கதை கேட்பதும் அதன் மூலம் விடை தேடப் போவதும் நல்ல யுக்தி.
மாதவன் மனைவியாக வக்கீலாக வரும் ஷ்ரத்தா பாத்திரத்துக்கு கன பொருத்தம். குற்றவாளி வேதாவுக்கு அவரே வக்கீலாக வருவதும் அதனால் கணவன் மனைவிக்குள் ஏற்படும் சண்டைகளும் அழகு. டைட்டிலில் வரலட்சுமி பெயர் வருகிறதே எங்கே காணோம் என்று இடைவேளையின் போது யோசித்ததற்கு இடைவேளைக்குப் பின் சந்திரா என்னும் பாத்திரத்தில் வந்து நடிப்பில் அசத்துகிறார் வரு சரத்குமார். தாதா கதை என்பதால் வரும் பெரும்பாலான அடியாள் பாத்திரங்கள் ஜடா முடியுடன் அழுக்கு உடைகளுடன் வலம் வருகின்றனர். விஜய் சேதுபதியின் தம்பி பாத்திரத்தில் வரும் கதிர், இன்னொரு ரவுடி பாத்திரத்தில் சேட்டா என்று வரும் ஹரீஷ், போலிஸ் சக அதிகாரி சைமனாக வரும் பிரேம் நடிப்பினால் மனத்தில் நிற்கின்றனர். எல்லா பாத்திரங்களின் தன்மையையும் முதலில் இருந்து கடைசி வரை மாறாமல் வைத்திருப்பது இயக்குநர்களின் வெற்றி.
ஒவ்வொரு முறையும் மாதவன் கையில் அகப்பட்டு பின் தப்பிக்கும் விஜய் சேதுபதி, அதற்கான காரணம், கடைசியில் க்ளைமேக்ஸ் அனைத்தும் விறுவிறுப்பாக, சுவாரசியமாக அமைக்கப்பட்டிருக்கு. ஆனால் க்ளைமேக்ஸ் நெருங்கும் சமயத்தில் நமக்கே பல விஷயங்கள் யூகிக்க முடிகிறது. அந்த வகையில் பெரிய சஸ்பென்ஸ் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் திரைக்கதையில் எங்கும் தொய்வில்லை.
இசை சாம். ஒரு பாடல் நன்றாக உள்ளது. பின்னணி இசை காட்சி நிகழும்போதே, அதற்கு சற்று முன்பேயே அதன் தன்மையை நமக்கு உணர்த்திவிடுகிறது. எடிடிங் & ஒளிப்பதிவு பக்கா! நல்ல ஒரு த்ரில்லர் படம். கதையைப் பொறுத்த வரையில் ஆங்கிலப் படங்களின் சாயல் உள்ளது. ஆனால் தமிழில் வந்திருக்கும் நல்லதொரு படைப்பு. டீம் விக்ரம் வேதாவுக்குப் பாராட
Aside
Jul 26, 2017 @ 07:16:57
நீண்ட நாட்களுக்கு அப்புறம் உங்களிடமிருந்து ஒரு திரை விமர்சனம். நேற்றுதான் படம் பார்த்தேன். வழக்கம்போல போலிஸ் , டான் கதை போல இருந்ததால் முன்பகுதி கொஞ்சம் போர் அடித்தது. ஏன் மனைவிக்கு பிடிக்கவில்லை. மேலும் மதியம் 2.30 ஷோ என்பதால் கல்லூரி மாணவர்களின் கூச்சல் ஆர்ப்பாட்டத்திற்கு இடையே டால்பி சவுண்ட் சிஸ்டத்தில் வசனங்கள் தெளிவா கேட்கவில்லை. மீண்டும் ஒருமுறை வீட்டில் காணவேண்டும். மற்றபடி உங்கள் விமர்சனம் அருமை. முதன்முதலா வரு வின் டெட் பாடியை காண்பிக்கும்போது முகத்தை காண்பிக்கவில்லை. தம்பியும் வரு வும் மும்பையில் இருக்கிறார்கள் என்றே நினைக்கிறோம். பிற்பாடுதான் விளங்குகிறது. ஆனால் கொஞ்சம் சலிப்பும் சோர்வும் ஏற்பட்டது உண்மை . நன்றி. வாழ்த்துகள். சமீப படங்களில் நான் என்ஜாய் செய்தது மரகதநாணயம் :))
Jul 26, 2017 @ 09:33:34
படம் நல்லாருக்குன்னு எல்லாரும் சொல்லீட்டாங்க. நீங்களும் சொல்லீட்டீங்க. பாத்துறனும்.