பாடகர்கள் :பம்பா பாக்கியா,
விபின் அனேஜா மற்றும்
அபர்ணா நாராயணன்
பாடல் ஆசிரியர்: விவேக்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
படம்: சர்கார்
ஆண் : பல்டி பாக்குற
டர்ல வுடனும் பல்து
வோர்ல்டு மொத்தமும்
அரள வுடனும் பிஸ்து
பல்டி அடிக்கறதைப் பார்த்து மத்தவங்க பயத்துல டர் ஆகிடணும்
உலகம் மொத்தத்தையும் மிரள உடனும் பிஸ்தா மாதிரி
பிசுறு கெளப்பி
பெர்ள வுடனும் பல்து
பிச்சுப் பிச்சுப் போட்டு எல்லாரையும் பயத்துல பிரளவிடனும்
ஆண் : ஏய்ய் நிக்கலு பிக்கலுமா
ஓ…. தொட்டனா தூக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்கருமா
ஏய் ஒழுங்கா ஓரிடத்தில நில்லு அப்பத்தான் தொட்டு தூக்க முடியும்.
உடஞ்ச குக்கர் மாதிரி மக்கர் பண்ணினா உன்னை தூக்க மாட்டேன்
போய் தரைல உட்காருன்னு சொல்லிடுவேன்.
ஆண் : ஏய்ய் நிக்கலு பிக்கலுமா
ஓ…. தொட்டனா தூக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்கருமா
முன்னாடி சொன்னதே தான்.
ஆண் : சிம்டான்காரன்
எங்கனா நீ சீரன்
நிண்டேன் பாரேன் முஷ்டு
அப்டிகா போறேன்
ஓ..ஓ..ஓ..ஓ (4)
கண்ணை சிமிட்டி சீறினேனா நின்னுக்கிட்டே பாரேன்
என் முஷ்டி மட்டும் அந்தப் பக்கமா போய் ஆளை அடிச்சிட்டு வரும்.
ஆண் : சிம்டான்காரன்
சில்பினுக்கா போறேன்
பக்கில போடேன்
விருந்து வைக்கபோறேன்
ஓ..ஓ..ஓ..ஓ (4)
கண்ணை சிமிட்டி முடிக்கறதுக்குள்ள சிலுப்பிக்கிட்டு வந்துடுவேன்.
அப்புறம் பெல்டுக்குப் பக்கிளை போடவும்.
இல்லேனா நான் வைக்கிற இசை நடன விருந்தில் எங்கியோ காணாம போயிடுவீங்க!!
ஆண் : அந்தரு பண்ணிகினா தா…..
இந்தா நா… தா ….
ஓ..ஓ..ஓ..ஓ (4)
அடியில போய் ஒளிஞ்சிக்கிட்டா நான் இதோ ஓடிவந்து கண்டுபிடிச்சிடுவேன்
பெண் வேறு தேசம் போலிருக்கு. தமிழ் மொழியில் பாடுகிறார்.
அதற்கு விசேஷ மொழிப்பெயர்ப்புத் தேவையில்லை.
பெண் : மன்னவா நீ வா வா வா
முத்தங்களை நீ தா தா தா
பொழிந்தது நிலவோ
மலர்ந்தது கனவோ…ஓ…ஓ….
பெண் : ஹா ஹா ஹா ஹா ஹா..(4)
ஆண் : குபீலு பிஸ்து பல்து
குபீர்னு பிஸ்தாவா பல்டியடிப்பேன் ஜாக்கிரதை!
குழு : விக்கலு விக்கலு
ஹே தொட்டனா தொட்டனா
விக்கலு விக்கலு
ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ….
விக்கல் வந்தா கூட தொடர்ந்து பாடுவோம் ஆடுவோம்.
ஆண் : கொக்கலங்க கொக்கலங்க
கொக்கலங்க குபீலு
ஹைட்டுலிருந்து டைவு அடிச்சா
டம்மாலு
ஹம்ப்டி டம்படி சேட் ஆன் அ வால்.
ஹம்ப்டி டம்படி ஹேட் அ கிரேட் ஃபால்.
ஆண் : நம்ம புஷ்டிருக்க கோட்டையில்ல
அல்லா ஜோரும் பேட்டைல
சிரிசினுகுறோம் சேட்டையிலகுபீலு
நாம பிடிச்சிருக்கிற கோட்டையில எல்லாரும் சிரிச்சிக்கிட்டு இருக்கோம் ஜாலியா.
ஆண் : பிசுறு கெளப்பு
பிசுறு கெளப்பு
கொக்கலங்க கொக்கலங்க
கொக்கலங்க குத்த போடு
சுணுங்காம குத்தாட்டம் போடு!
சுணுங்காம குத்தாட்டம் போடு!
நீங்க நினைக்கிறா மாதிரி ஒன்னும் புரியாத பாடல் இலை இது. கொஞ்சம் மெனக்கெட்டா புரிஞ்சிடும்!!
Sep 26, 2018 @ 01:37:16
கண்றாவி கண்றாவி..சகிக்க முடியல😢சரியாண சட்டையர் 😊
இதுக்கு ஒரு பொழிப்புரை எழுதி உங்களின் எரிச்சலுக்கு வடிகால் தேடிக்கொண்டு விட்டீர்கள். எங்களை போன்றவர்கள் எங்கிட்டு போக ? இவ்வுலகம் உய்ய மொழி பெயர்த்து நீங்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டீங்க. எங்களின் கதி ? இனி வரும் காலங்களில் எத்தனை முறை கேட்கனுமோ ?
20 வருடங்களுக்கு முன்னால் வந்த கோழிக்கூவுது படத்தில் ராஜா இசையில், அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே என்ற பாடலை ஒரு கர்ணகடூரமான குரலில் ரிலீஸ் ஆனப்போ அதர்ச்சியாக இருந்தது. But அது இசையோடும் கதையோடும் ஒட்டியிருந்ததால் ஓகே ஆச்சு. TMS கூட இப்பெல்லாம் எருமைகளை பாட வைத்து இசையமைக்கிறார்கள் என்று கருத்து சொல்ல, ராஜாவுக்கு கோபம். நல்ல வேளை டிஎம்எஸ் இன்றில்லை..
“ஈன்ற தாயைய் நான் கண்டதில்லை
எனது தெய்வம் வேறெங்குமில்லை
உயிரை கொடுத்தும் உனை நான் காப்பேன், உதய நிலவே கண்…” போன்ற பாடல்கள் பல பல வரு. கழித்தும் இன்றும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. சிறுவர்களை பாட வைத்து வீட்டில் பெரியவர்கள் அகமகிழ்வார்கள். நல்ல தமிழ் சொற்களை தாங்கள் அறியாமலேயே அக்கால சிறுவர்கள் பயின்றார்கள். ஆனால் இன்றோ ? இறைவா இன்னும் எத்தனை கொடுமைகளை தாங்க வேண்டுமோ 😢 உங்களின் இந்த பதிவுக்கு பின்னால் ஒரு கேலி கிண்டல, கோபம், ஆதங்கம் எல்லாம் எதிரொலிக்கிறது. என்ன செய்து தொலைக்கிறது சகிச்சிக்கிட்டு போறதைத்தவிர. காலம் ரொம்ப கெட்டுப்போச்சு. ரொம்ப சிலாகிச்சோம்னா, வயாசாயிருச்சும்பாங்க 😊😊 நன்றி.