Tamil Tweeter Tweeting in English – Special Award 2019 – @spinesurgeon

J Mariano Anto Bruno Mascarenhas

Neurosurgeon, Paleo Doctor, LCHF Mentor, Brain Surgeon, Spine Surgeon, Minimally Invasive Neurosurgeon, HMIS, Senior Assistant Professor of Neurosurgery
Consultant (Research and Protocol), Tamil Nadu Health Systems Reforms Project
Technical Team Leader, Tamil Nadu Accident and Emergency Care Initiative

Minimally Invasive Neurosurgeon Specializing in Stereotaxy, Endoscopy, Percutaneous Spine Stabilisation from India with Interest and Experience in Neuro Surgery, Neurosciences, Trauma Care, Public Health, Health Economics, Heath HR and Health Management Information Systems

He is a practising General Physician, Neurologist, Neurosurgeon, Surgical Oncologist, Spine Surgeon, Spine And Pain Specialist, Immunologist, Pediatric Neurologist, Headache and Vertigo Specialist, Epilepsy Specialist and a Pediatric Neurosurgeon with an experience of 19 years. He is located in Chennai.

Domain Expert / Consultant in Central and State Government Health Programmes, Epidemiology, Biostatistics, Computers, Health Management Information System and Hospital Management System

Author of Medical Books, Blogger, Software and Web Designer and author of innumerable informative medical articles.

இவருக்கு இன்னொரு பெயரும் இருக்கு, ட்விட்டரில் 🙂 அது @spinesurgeon !! கற்றவர் தான் கற்றதை மற்றவர்களுக்குக் கற்பிக்கும்போது அறிவு பரவுகிறது. அதே சமயம் கற்பிப்பவரும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும், கற்பதை நிறுத்திவிடக் கூடாது. கற்பது என்பது ஒரு நிலையில் முடிந்து விடுகிற விஷயம் அல்ல, அது முடிவில்லாமல் தொடர்கிற விஷயம். அதற்கு மருத்துவத் துறை மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அதில் இவ்வாறு இருப்பவர் ஒருவர் உண்டென்றால் அதற்கு @spinesurgeon ஓர் உதாரண புருஷர். மருத்துவத் துறையில் டாக்டர் ப்ரூனோ பல வருடங்களாக பணி புரிந்து பல மிக மிக தேவையான, உயிரை காக்கும், நோய்களை தடுக்கும் மருத்துவம் சார்ந்த தகவல்களை நம்மிடம் ட்விட்டர் மூலம் பகிர்ந்து வருகிறார். தற்போது சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணி புரிந்து வரும் இவரைப் பற்றி எழுத இந்த ஒரு பதிவும் போதாது, எனக்கு அறிவும் பத்தாது. ஆனால் இவரை பாராட்டி விருது கொடுக்க மனம் நிறைந்த ஆவலும், அன்பும், மரியாதையும் உள்ளது. விருதுகள் இவருக்குப் புதிதல்ல. தமிழக அரசு சிறந்த மருத்துவர் விருதை அளித்து கௌரவித்துள்ளது. மற்ற விருது பட்டியல்கள் கீழே!

  • Best Doctor Award

    Government of Tamil Nadu

    Awarded the Best Doctor Award by Government of Tamil Nadu

  • KK Bisaria Award for Best Paper in Allied Neurosciences

    NSI : Neurological Society of India

    KK Bisaria Award for Best Paper in Allied Neurosciences awarded by the Neurological Society of India for the original research on the Microneurosurgical Anatomy of Superior Sagittal Sinus and Draining Veins

  • Certificate of Appreciation for Designing Web Based Interface for Monitoring and Evaluation

    Government of Tamil Nadu

    Certificate of Appreciation by Government of Tamil Nadu for Designing Web Based Interface for Monitoring and Evaluation

நல்ல மனம் படைத்த மருத்துவர்கள் தங்கள் தொழிலை இன்றும் சேவையாக தான் செய்கிறார்கள். நோயாளிகளின் நலனை மட்டுமே மனத்தில் வைத்து நோயை தீர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி பணம் சம்பாதிப்பதற்காக மருத்துவத் தொழிலை தேர்ந்தெடுக்காதவர்கள் இவர்கள். அரிது அரிது இம்மாதிரி மருத்துவர்கள் அரிது! ஆனால் நம்மிடையே இப்படி அரிதான ஒருவர் இருப்பது பெரும் வரம். அவர் மருத்துவர் ஆன காலம் தொடங்கி ஆயிரக்கணக்கில் நோயாளிகளை குணப்படுத்தியிருப்பார். அனால் இங்கே நான் குறிப்பிடப் போவது ட்விட்டர் மூலம் தெரிந்தவர்களுக்கு இவர் உதவியிருப்பது பற்றி. சமூக வலைத்தளங்கள் கத்தி மாதிரி. காய் நறுக்கவும் பயன்படுத்தலாம், தலையை கொய்யவும் பயன்படுத்தலாம். டாக்டர் ப்ரூனோ ட்விட்டர் தளத்தை மருத்துவம் சார்ந்த அறிவுரைகள், குறிப்புகள் கூறி, அவரிடம் சந்தேகம் கேட்பவர்களுக்கு விளக்கம் அளித்து, பொய்யான நம்பிக்கைகளை அறிவியல் பூர்வமாக விளக்கி அவற்றை தகர்த்து, எளிமையான முறையில், துளியும் தலைக் கனம் இல்லாமல், கோபப்படாமல், முட்டாள்த்தனமான விஷயங்களுக்கும் பொறுமையுடன் விளக்கம் கொடுப்பதால் நாம் இவரின் அறிவை, உதவியை நாடி பயன் பெறுவது நமக்கு நல்லது. இங்கு அறிமுகம் ஆன பலருக்கும் அவர் கொடுத்த மருத்துவ அறிவுரையினால் உறவினர்கள் உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கின்றன. தன் தொலைபேசி எண்ணை கூட அவர் பொதுவெளியில் பகிரத் தயங்கியதில்லை. ஓயாது உழைக்கும் அட்டவணையிலும் நாம் கேட்கும் உதவிகளை தயங்காமல் உடனே செய்து தருபவர்!

நல்ல தகவல்தொடர்பு திறன்களைக் கொண்ட கண்ணியமான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், சமீபத்திய சிகிச்சை முறைகள், மருந்துகள் மற்றும் விசாரணைகள் குறித்து புதுப்பித்த நிலையில் வைத்திருக்கிறார். மூளை மற்றும் முதுகெலும்பு அதிர்ச்சி, மூளை மற்றும் முதுகெலும்பு கட்டிகள், முதுகெலும்பு கருவி, ஸ்டீரியோடாக்ஸி, கிரானியல் & ஸ்பைனல் எண்டோஸ்கோபி, பெர்குடேனியஸ் முதுகெலும்பு சரிசெய்தல் போன்ற குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு நடைமுறைகளை நன்கு அறிந்தவர். இதில் எண்டோஸ்கோபி, ஸ்டீரியோடாக்ஸி மற்றும் பிற மேம்பட்ட நுட்பங்களின் உதவியுடன் மூளை அல்லது முதுகெலும்பில் ஒரு சிறிய திறப்பு மூலம் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. மூளை மற்றும் முதுகெலும்புகளில் 2500 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை அவர் செய்துள்ளார். (பிப்ரவரி 2017 நிலவரப்படி) அவரை அணுகும் நோயாளிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் அறுவை சிகிச்சைகள் இல்லாமல் வெற்றிகரமாக நிர்வகிக்கப்பட்டுள்ளனர். அவரது கொள்கை என்னவென்றால், அவசரகால நிலைமைகளைத் தவிர, மூளை மற்றும் முதுகெலும்பு சிக்கல்களை நிர்வகிப்பதற்கான கடைசி முயற்சியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படவேண்டும் என்பதே. மேலும் சிகிச்சையானது முதலில் டயட் மாற்றங்களுடன் தொடங்குகிறது. உணவு மூலம் பிரச்சினை சரி செய்யப்படாதபோதுதான் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன மற்றும் மருந்துகளால் பிரச்சினைகள் சரி செய்யப்படாதபோது மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பது அவர் நடைமுறை மருத்துவ அணுகுமுறை. கூடுதலாக, நோயாளிகளுக்கு அவர்களின் எடையைக் குறைக்க உதவும் முதல் மருத்துவர் ஆவார், மேலும் நீரிழிவு நோய், பாலிசிஸ்டிக் கருப்பைகள், (பி.சி.ஓ.டி, பி.சி.ஓ.எஸ்), தைராய்டு செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் (இரத்த அழுத்தம்) ஆகியவற்றை அறிவியல் உணவு அட்டவணைகள் மூலம் கட்டுப்படுத்துகிறார்.

அவர் ட்விட்டர் பக்கத்தைப் பார்த்தீர்களானால் அவர் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்பதும் தெரியும். அது ஒரு மனிதனின் வெற்றிக்கு மிக முக்கியம். மருத்துவம் தவிர பல துறைகளிலும் அவருக்கு ஈடுபாடும் ஆர்வமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அவரின் முக்கிய குறிக்கோள் நாம் அனைவருமே பொது மருத்துவமனைகளை நன்றாக பயன்படுத்தவேண்டும் என்பதாகும். அனாவசியமாக லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி தனியார் மருத்துவமனைகளில் போய் ஏமாறுவதை விட தமிழக அரசின் இலவச பொது மருத்துவமனையிக்ளில் தேர்ந்த மருத்துவர்கள், மருத்துவ வசதிகளை நாடி செலவின்றி மருத்துவ உதவி பெற்று நலம் பெற பல தகவலை அவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டே இருப்பார். நவீன மருத்துவ உபகரணங்கள், நவீன சிகிச்சை முறைகள், பொது மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டவுடன் நமக்கு அவர் மூலம் தெரியவருகிறது. மிக மிக கடினமான அறிவியல் சிகிச்சைகள் தனியார் மருத்துவமனையில் சில லட்சங்கள் செலவை வைக்கக்கூடியவை எப்படி வெற்றிகரமாக எந்த செலவும் இல்லாமல் நோயாளிகளுக்கு செய்யப்படுகின்றன என்பதை அவர் பகிர்வதால் நமக்கும் கொஞ்சம் பொது மருத்துவமனையை அணுகி உதவி பெறவேண்டும் என்கிற எண்ணத்தை வரவழைக்கிறது. நம் தமிழகத்தைப் போல சிறந்த சுகாதாரத் துறை இந்தியாவிலேயே இல்லை என்பதை இவர் பதிவுகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அதே சமயம் ஏழை எளியவர்களுக்கு உடனடியாக உதவும் வண்ணம் அவை இருப்பதும் நம் தமிழகத்தின் சாதனை. அதற்கு இவரைப் போன்ற நல்ல மருத்துவர்களுக்கும் அரசுக்கும் நாம் நன்றி செலுத்தக் கடமை பட்டுள்ளோம்.

இவர் ட்விட்டர் பக்கத்துக்கு சென்றீர்களானால் அது தகவல் தகவல் களஞ்சியமாக இருப்பதை காணலாம். அதனால் குறிப்பிட்டு இவை இவை பற்றி சொல்கிறார் என்று நான் பட்டியலிட்டால் அது பதிவாக இருக்காது. பெரிய இராமாயணமாக தான் இருக்கும் 🙂 மருத்துவக் காப்பீட்டில் நடக்கும் ஏமாத்து வேலைகள் முதற்கொண்டு ஏழை நோயாளிகள் எதில் கவனம் செலுத்தி எந்த மாதிரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பது வரை அவர் தொடாத விஷயங்களே இல்லை என்று கூறலாம்.

  1. கீச்சுக்கள் யார் மனத்தையும் புண்படுத்தாமல் பொழுது போக்கு அம்சத்தோடு இருத்தல்.
  2. கீச்சுபவர் பொது அறிவுத் திறனுடன் இருத்தல்.
  3. இனிமையானத் தன்மையை உடையவராக இருத்தல்.
  4. ட்விட்டரில் தன் இருப்பை நிலை நாட்டிக் கொள்பவர்.

ஆகியவை இந்த விருதுக்கான விதிமுறைகள். (நானே ஏற்படுத்தியது தான் :-)) அதில் இதில் தமிழில் ட்வீட்டுபவர்களுக்கு தான் விருது என்பது எழுதப்படாத விதி. அதை தளர்த்தி ஆங்கிலத்தில் ட்வீட்டும் இத்தமிழருக்கு ஸ்பெஷல் அவார்ட் கொடுப்பது அவருக்கான பெருமையை விட விருதுக்கான பெருமைஅது! வாழ்த்துகள் டாக்டர். வளரட்டும் உங்கள் தொண்டு. பரவட்டும் உங்கள் புகழ் திக்கெட்டும்.

https://in.linkedin.com/in/spinebrainsurgeon

 

Tamil Tweeter of The Year 2019 @tskrishnan

வரலாறு முக்கியம் அமைச்சரே என்கிற வடிவேலு காமெடி பிரபலம்! இன்றைய காலகட்டத்தில் வரலாற்றை அறிந்திருந்தால் தான் மறுமுறையும் முன்பு செய்த அதே பிழைகளை செய்யாமல் இருக்கவும் வருங்காலத்தில் ஏமாறாமல் இருக்கவும் முடியும். அதோடு தமிழின் வரலாறு, தமிழனின் வரலாறு தமிழகத்தில் பிறந்த அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். வரலாற்றின் மூலம் தான் பண்டைய கால அரசியல், மக்களின் வாழ்வு நெறி, சமயம், பண்பாடு, வளமை, நாகரீகம், படையெடுப்புகள், அறிவியல் வளர்ச்சி, இன்னும் முக்கியமான தகவல்கள் பற்றி நாம் அறிய முடியும். அதைத் தெரிந்து கொள்வதால் மட்டுமே நம் பாரம்பரியத்தைப் பற்றி பெருமை கொள்ள முடியும். சிலர் எழுதிய வரலாற்றில் வரலாற்றின் சிலசில பகுதிகள் மட்டும் ஒருவாறு தெரியும். அப்படி தெரிந்தவற்றை மட்டுமே வைத்து அவர்களை மிகச் சிறந்தவர்களாக எண்ணிப் பாராட்டி வருகின்றோம். நடந்த விஷயங்களை நடந்தபடியே சொல்லுவதை சரித்திர ஆசிரியர்கள் பின்பற்றினால் நன்றாக இருக்கும். ஆனால் பலரும் பின்பற்றுவதில்லை அல்லது விரும்புவதில்லை. தங்கள் தனிப்பட்ட அபிமானம் காரணமாக சாதி, மதம், தொழில், ஊர் முதலியவற்றை மாறுபாடாகக் கூறி அதற்குப் பொய்யான ஆதாரத்தையும் காட்டி சாதிக்கிறவர்கள் உண்டு. ஒருகாலத்தில் இருந்தவரை வேறொரு காலத்தவராகக் கூறுவதும் பிறவுமாகிய தடுமாற்றங்கள் வரலாறுகளில் மலிந்திருக்கின்றன. கொடுங்கோலனை நல்லவனாக காட்டியும் நல்லவனை தீயவனாக காட்டியும் வரலாறு புனையப்பட்டுள்ளது. முக்கியமாக நம் இந்திய வரலாறு மிகவும் தொன்மையானதும் பற்பல படையெடுப்புகளாலும், பல போராட்டங்களாலும், பல சமயங்களின் தோற்ற பூமியாக விளங்குவதா லும், எண்ணிலடங்கா முக்கிய சம்பவங்கள் நிறைந்த நிகழ்ச்சிகள் மயமானவை. எழுதப்பட்ட வரலாற்றில் எது உண்மை எது பொய் என்று தெரிந்து கொள்ள தனித் திறமையும், தேடலும், அதற்கான உழைப்பும், பொறுமையும், அறிவும், திறனும் தேவை. நம்மிடம் அது இல்லாவிட்டால் அவை இருப்பவரிடம் இருந்து தெரிந்து கொள்ளுதல் மிகவும் எளிதான வேலை. அப்படிப்பட்ட ஞானம் உள்ளவர் தான் ட்விட்டரில் இருக்கும் திரு @tskrishnan அவர்கள். தமிழ் மொழியில்-இலக்கியம், இலக்கணத்திலும், தமிழர் வரலாற்றிலும் ஒரு சேர புலமை பெற்ற அவரிடம் இருந்து நாம் நிறைய தெரிந்து கொள்ள முடியும். தினம் பல நல்ல தகவல்களை தருகிறார். நாம் கேட்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கிறார்.

முன் காலத்து இந்திய சரித்திர எழுத்தாளர்கள் பொதுவாகவே மூலம், ஆதாரம், சான்று இல்லாமல் எதையும் எழுதும் வழக்கம் கொண்டிருக்கவில்லை. அதாவது படித்தவர்கள் படித்ததை உண்மையா இல்லையா என்பதனை தாராளமாக சரிபார்த்து தெரிந்து கொள்ளலாம். அதனால் சரித்திரம், மிக்கப் பொறுப்பு, கடமை, பாரப்படசமின்மை முதலிய கொள்கைகளுடன் எழுதப்பட்டன. ஆனால் பிற நாட்டு எழுத்தாளர்கள் நம் நாட்டின் வரலாற்றை எழுதும்போது அவ்வாறு எழுதவில்லை. தம்மை உயர்த்தி எழுதிக் கொண்டது மற்றுமன்றி, பாரத மக்களை குறைவாகவே, தாழ்த்தி, இழிவுபடுத்தியே எழுதி வைத்தனர. அதனால் தான், இந்திய சரித்திரத்தில் ஒவ்வாதவை என்று பல விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சரித்திரம் என்பது என்ன எழுதப்பட்டுள்ளது, என்ன எழுதப்படுகிறது அல்லது என்ன எழுதப்படப்போகிறது என்பதல்ல. உண்மையில் என்ன நடந்தது என்பது தான் சரித்திரம் ஆகும். அதில் எந்தவித பாரபட்சமும் இருக்கக் கூடாது. இதை எல்லாம் ஆய்வு செய்து தெரிந்து கொள்ள நம்மில் பலருக்கும் பொறுமையும் இல்லை, ஆய்வு செய்யும் திறனும் இல்லை. பொய்யை பரப்புபவர்களும் அவர்களுக்கென்று தனி இலக்கு வைத்து அதை அடைய முயன்ற அளவு தவறான செய்திகளை அரப்புகின்றனர். அதனால் உண்மை வரலாற்றை நமக்கு தங்கத் தாம்பாளத்தில் கொடுக்கும் ஒருவரை பின் தொடர்ந்து சரியான தகவல்களை அறிந்து கொள்ள உதவி  செய்கிறது ட்விட்டர். @tskrishnan இவரை தொடர்வதால் நான் பல புதிய நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டிருக்கிறேன். பாண்டியர்கள் தமிழுக்குச் செய்த அளவில்லா தொண்டுகளை, சோழர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பாண்டியர்களின் பெருமையை மீட்டெடுத்த மாறவர்மன் சுந்தரபாண்டியன், மூன்றாம் குலோத்துங்கனால் பட்ட அவமானத்தைத் துடைக்க சோழ நாட்டில் கடும்போர் செய்தது, முதலியவை பற்றி அவர் நேரக் கோட்டில் படித்து நான் தெரிந்து கொண்டவை. இராஜ இராஜ சோழனின் உன்னத பெருமைகள், அவர் மகன் இராஜேந்திர சோழனின் தனிப் பெரும் சாதனைகள், சாளுக்கியர்கள் வரலாறு, பல்லவர்கள் கீர்த்தி, விஜயநகர வம்சத்தினர் சேவைகள், மற்ற அரச பரம்பரைகள் சரித்திரத்தை இவர் ட்வீட்களில் பார்க்கலாம். இவருடைய இன்னொரு ஆர்வம் வானிலை பற்றிய ஆராய்ச்சி. இந்து சமயம் பற்றி தவறான தகவல்கள் பரப்படும் இக்காலத்தில் இவர் தரவுடன் தரும் சமயம் சார்ந்த பல தகவல்கள் பாலைவனத்தில் பெய்யும் மழை போன்று தமிழ்ச் சமூகத்துக்கு செய்யப்படும் பெரும் உதவி! எடுத்துக்காட்டு இந்த ட்வீட்கள். https://twitter.com/tskrishnan/status/1195147174977294337

 

நம் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் புதிதாக கற்றுக் கொள்வதற்கும் அவற்றை சரியாக கடைபிடிப்பதற்கும் செலவிடுவது அவசியம். வெட்டியாக இணையத்தில் சாதிச் சண்டை, மத சண்டை, நடிகர்களுக்காக சண்டை போடுவதை விட நல்ல முறையில் அறிவை வளர்த்துக் கொள்வது நமக்குப் பயன் தரும், சுய முன்னேற்றம் ஏற்படும்.

விளையாட்டாக தான் நான் இந்த Tamil Tweeter Of The Year விருது கொடுக்க ஆரம்பித்தேன். இதைத் தொடர்ந்து கொடுப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

2013ஆம் வருட விருது @kanapraba திரு கானாபிரபாவிற்கு  

2014 ஆம் ஆண்டு விருது @RagavanG திரு இராகவனுக்கு

2015 ஆம் வருட விருது @iamVariable திரு அமருக்கு

2016 ஆம் ஆண்டு விருது @savidhasasi திருமதி சவிதாசசி

2017 ஆம் வருட விருது திரு ஜக்குவுக்கு

2018 ஆம் ஆண்டு விருது @selvachidambara திரு செல்வசிதம்பராவிற்கு

இவ்விருதிற்கான விதிகளை மறுபடியும் முன் வைக்கிறேன்.

  1. கீச்சுக்கள் யார் மனத்தையும் புண்படுத்தாமல் பொழுது போக்கு அம்சத்தோடு இருத்தல்.
  2. கீச்சுபவர் பொது அறிவுத் திறனுடன் இருத்தல்.
  3. இனிமையானத் தன்மையை உடையவராக இருத்தல்.
  4. ட்விட்டரில் தன் இருப்பை நிலை நாட்டிக் கொள்பவர்.

இவரை இந்த வருட தலைச் சிறந்த தமிழ் ட்வீட்டர் ஆக திரு கிருஷ்ணன் அவர்களை தேர்ந்தெடுத்து வாழ்த்துவதில் நீங்களும் கலந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இது பெரிய புலிட்சர் விருதோ ஆஸ்கர் விருதோ அல்ல, அன்பினாலும் மரியாதையினாலும் கொடுக்கும் ஓர் அங்கீகாரம் 🙂