இஞ்சி இடுப்பழகி – திரை விமர்சனம்

inji

தெலுங்கு தமிழ் இரண்டிலும் ஒரே சமயத்தில் எடுத்தப் படம் இது. தெலுங்கில் சைஸ் ஜீரோ, தமிழில் இஞ்சி இடுப்பழகி. க்ளோஸ் அப் சீன்களில் தமிழ் உச்சரிப்பு சரியாக உள்ளது. லாங் ஷாட்களில் தெலுங்கு வாயசைப்புக்குத் தமிழ் வசனம் சரியாக ஒட்டவில்லை. லாங் ஷாட்ஸ் எல்லாம் ரீ ஷூட் பண்ணாமல் ஒப்பேத்தி விட்டார்கள். மேலும் தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடித்தமான ஸ்டேப்சுடன் குத்து டேன்ஸ், நிறைய தெலுங்கு நடிகர்கள் படத்தில் இருப்பது, ஆந்திர மாநிலத்தில் படப்பிடிப்பு நடத்தியிருப்பது, இவையால் படத்தில் தெலுங்கு வாடை அதிகம் வீசுகிறது.

ஒரு குண்டு பெண்ணின் இன்னல்களையும்,  அதனால் அவளின் திருமணத்திற்கு ஏற்படும் தடைகளையும் காட்டுகிறது இப்படம். படத்தில் நல்ல மெஸ்சேஜ் உள்ளது. அனுஷ்காவும் ரொம்ப நன்றாக நடித்துள்ளார். அனுஷ்காவின் தொண தொண அம்மாவாக ஊர்வசி. அனுஷ்காவும் ஊர்வசியும் தான் படத்தின் இரு தூண்கள் {figuritively also, pardon my pun 🙂 }ஆனால் திரைக்கதை தான் பயங்கரமாக சொதப்பி விடுகிறது. காமெடி என்று அவர்கள் நினைத்து சேர்த்திருக்கும் வசனங்கள் எல்லாம் மருந்துக்குக் கூட சிரிப்பை வரவழைக்கவில்லை.

வெகு விரைவில் உடல் எடையை குறைக்க உதவும் சைஸ் ஜீரோ நிறுவனத்தின் முதலாளியாக வரும் பிரகாஷ் ராஜ் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான நடிப்பைத் தருவது சலிப்பூட்டுகிறது. மாஸ்டர் பரத்துக்கு (போக்கிரியில் உப்புமா பையன்) அனுஷ்கா தம்பியாக, நல்ல ரோல். வேறு நல்ல இயக்குநரிடம் இன்னும் நன்றாக சோபிப்பார் என்று நம்புகிறேன்.

முதல் பாதி பெட்டரா இரண்டாம் பாதி பெட்டரா என்று யோசிக்கும்போது அது அவரவர் ரசனையைப் பொறுத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் மொத்தத்தில் படம் பல இடங்களில் விறுவிறுப்பு இல்லாமல், சுவாரசியம் இல்லாமலும் தொய்கிறது. ஒரு நல்ல திரைக் கதையும் நல்ல எடிட்டரும் இருந்திருந்தால் இப்படம் ஹிட் படமாகியிருக்கும்.

அனுஷ்கா இப்படத்திற்காக எடை கூடினார் என்று செம பில்ட் அப் கொடுத்தார்கள். அதெல்லாம் ஒன்றும் எடை கூடவில்லை. எல்லாம் பாடி சூட் தான். அது நன்றாகத் தெரிகிறது. ஆ மறந்துவிட்டேனே, படத்தின் ஹீரோ ஆர்யா! நல்ல பிட் பாடி. மத்தபடி நடிக்க ரொம்ப வாய்ப்பில்லை, அவரும் பெருசா மெனக்கெடவும் இல்லை.

இசை மரகத மணி. இனிமையான இசை. நிறைய நல்ல விஷயங்களைச் சொல்ல வருகிறார்கள், அனால் தடுமாறி விட்டார் இயக்குநர் பிரகாஷ் கோவெலமுடி. ஒரு சண்டை காட்சியோ, டாஸ்மாக் காட்சியோ இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக அமைந்தும் நம்மை சீட்டில் கட்டிப் போடத் தோற்று விடுகிறார் இயக்குநர். தெலுங்கில் ஓடுமோ என்னமோ.

inji1

என்னை அறிந்தால் – திரை விமர்சனம்

 

YennaiArindhaal

எதுவுமே ஒருவருக்கு இயல்பா வருவதை முன்னிறுத்திச் செய்யப்படுவது வெற்றிப் பெறும். அஜித்துக்கு 7 வயது பெண்ணின் அப்பாவாக இருப்பது வெகு இயல்பாக வருகிறது. Action ஹீரோவாக நடிப்பதோ அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி! இரண்டும் சேர்ந்த கலவை தான் “என்னை அறிந்தால்” சத்யதேவ். அதனால் பாத்திரப் படைப்பிலேயே கௌதம் மேனன் ஸ்கோர் செய்து விடுகிறார். வெறும் ஆக்ஷன் மட்டும் இல்லாமல் அன்பு, பாசம், கொஞ்சம் தத்துவம் என்று நல்ல விகிதத்தில் கலந்து அளித்திருப்பதால் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் நல்லதொரு விருந்து.

அஜித் பளிச்சென்று இருக்கிறார். He is definitely handsome 🙂 த்ரிஷாவுடனான சீன்களில் இருவரின் ஜோடிப் பொருத்தமும் ரொம்ப அழகாக உள்ளது. படம் முழுக்க அவர் ஆளுமை தான். நடிப்பு மிக நன்று! அனுஷ்கா லிங்காவில் இருந்ததை விட ரொம்ப better. விவேக்கும் கெக்கபிக்கே காமெடி இல்லாமல் அவருக்கு அளிக்கப்பட்டப் பாத்திரத்தை நன்றாகச் செய்திருக்கிறார். சிறுமியாக நடித்த அனிகாவை அவர்  வயதுக்குத் தகுந்தாற்போல நடிக்க வைத்திருப்பதால் நம்மை மிகவும் ஈர்க்கிறார். அருண் விஜய்க்கு வில்லன் பாத்திரம். அஜித்தின் வெற்றிக்கு ஒரு காரணம் அருண் விஜய் நன்கு நடித்திருப்பதால் தான்! ஒரு பலமான வில்லனை எதிர்க்கும்போது தான் ஹீரோ உயர்கிறார்.

மற்றப்படி அதே கெட்டவனை எதிர்க்கும் நல்லதொரு போலீஸ்காரன்  கதை தான். கெட்டவன் வீழ்கிறான், நல்லவன் வாழ்கிறான், அட்லீஸ்ட் அடுத்தப் படம் வரை. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உனக்கென்ன வேணும் சொல்லு பாடல் நன்றாக உள்ளது. அந்தப் பாடல் வரிகள் (தாமரை) மிகவும் பொருள் செறிவுடன் இருக்கு. மற்றவை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பின்னணி இசை நன்று. படம் விறுவிறுப்பாகப் போகிறது. 176 நிமிடங்கள். ஆனால் திரைக் கதையில் வேகத் தடை இல்லை.

கதையின் ஓட்டம் சமூகப் பார்வையில் எனக்குப் மிகவும் பிடித்திருந்தது.

பெண்ணின் உடம்பை உரித்துக் காட்டும் ஐடம் டேன்ஸ் இல்லை.

இரண்டு ஹீரோயின்கள் இருந்தும் டூயட் இல்லை.

விவாகரத்து ஆனப் பெண்ணை ஹீரோ காதலிக்கிறார். அதுவும் அப்பெண் கைபடாத ரோஜா இல்லை. அப்பெண்ணிற்கு ஒரு குழந்தை உள்ளது.

உடல் உறுப்புக்களின் திருட்டைப் பற்றிய விழிப்புணர்வு வரவேற்க்கத்தக்கது.

வெவ்வேறு இடங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வது நம்மை அறிந்துகொள்ள உதவும் என்று ஒரு சிறு எண்ணத்தை இந்தப் படம் மூலம் பார்ப்பவர்கள் மத்தியில் விதைத்துள்ளார் இயக்குநர்

குடும்பத்துடன் பார்க்கலாம். அஜித் ரசிகர்கள் இப்படத்தை மிகவும் கொண்டாடுவார்கள்.

yennaiarindhal

இரண்டாம் உலகம் – திரை விமர்சனம்

irandaamulagam

படம் ஆரம்பிக்கும் முன் வந்த செர்டிபிகேடில் படம் ஓடும் நேரம் 2 மணி 40 நிமிடம் என்றிருந்தது. அதற்குள் ட்விட்டரில் ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் வந்திருந்ததால், ஐயோ இரண்டே முக்கால் மணி நேரமா என்று நினைத்தேன். உண்மையில் நேரம் போனதே தெரியவில்லை 🙂 இரண்டு உலகக் கதைகள். துளிக் கூட confusionஏ இல்லாமல் பயணிக்கிறது திரைக்கதை. The existence of a Parallel Universe is the premise to this story. கதை அம்சத்தோடு கூடிய Fantasy. Hats off to you Selva! புத்திசாலித்தனமாக எடுத்திருக்கிறார் செல்வராகவன். எனக்கு அவரின் படைப்புகள் மேல் தனி ஈர்ப்புக் கிடையாது. 7G ரெயின்போ காலனியோ, ஆயிரத்தில் ஒருவனோ எனக்குப் பிடித்தமானப் படங்கள் இல்லை. ஆனால் இந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது. எல்லா இயக்குநர்களும் படம் ஆரம்பிக்கும்போது புதுவிதமானக் கதை என்று தான் விளம்பரப் படுத்துவார்கள், ஆனால் உண்மையிலேயே இதுப் புதுப் பணியாரம் தான்!

ஆர்யாவும் அனுஷ்காவும் பாத்திரங்களை நன்குணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஆர்யாவுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள். இலகுவாகச் செய்திருக்கிறார். 6 pack வைத்துள்ளார். அனுஷ்கா படம் முழுக்க அழகாக வருகிறார். நடிப்புக்கும் குறைவில்லை. Computer Graphics படத்தோடு இணைந்திருக்கிறது. சமீபத்தில் வந்தப் படங்களில் குளிர்ச்சியான CGஐ இந்தப் படத்தில் தான் பார்த்தேன். இரண்டாம் உலகில் இயற்கை எழிலோடு CGயும் சேர்ந்து ஒரு மாய உலகத் தோற்றத்தைத் தருகிறது. பிரேசிலிலும் ஜியார்ஜியாவிலும் (வெஸ்டேர்ன் ஏசியா) கடுங்குளிரில் படமாக்கியிருக்கிறார்கள். அற்புதமாக உள்ளது. Cinematography (Ramji) உலகத் தரத்தில் உள்ளது!

இரண்டு ஆர்யா இரண்டு அனுஷ்கா, சில similarities மட்டும் வைத்து கதையை லாவகமாக கையாண்டுள்ளார். Not easy. கதையில் தொய்வே இல்லை. குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். விரசமோ, இரட்டை அர்த்த வசனங்களோ, கடுப்படிக்கும் சந்தான நகைச்சுவைக் காட்சிகளோ இல்லை. செல்வா நிறைய research செய்திருக்கிறார், முக்கியமாக இந்த உலகத்தில் வாழும் ஆர்யாவின் தந்தை ஸ்கூட்டரில் வரும் காட்சியும், நாய் வரும் காட்சியும் உள்ளர்த்தம் வாய்ந்தவை.

இரண்டாம் உலகம் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் இரண்டு இசையமைப்பாளர்கள். பின்னணி இசையும் இரண்டு பாடல்களும் அனிருத், மற்ற பாடல்கள் ஹாரிஸ். பாடல்கள் நன்றாக உள்ளன. ஆனால் பின்னணி இசை தான் படத்தை நல்ல உயரத்துக்கு இட்டுச் செல்கிறது. எனக்கு மேற்கத்திய இசைப் பற்றிய ஞானம் கிடையாது. அதனால் அனிருத் இங்கிருந்து மெட்டெடுத்தார், அங்கிருந்து மெட்டெடுத்தார் என்று இசை அறிஞர்கள் குறை கூறலாம். ஆனால் திரையில் வரும் காட்சிகளுக்குப் பின்னணி இசை பிரமாதமாக உயிரூட்டுகிறது. அவர் வேலையை நன்றாகவே செய்திருக்கிறார். Symphony இசை காதுக்கும் இனிமை!

செல்வா படத்தில் லக்குகாக தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன். அதுவும் ஒரு சூப் சாங் தான், நன்றாக உள்ளது 🙂 படத்தில் வரும் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.

இது ஒரு காதல் கதையல்ல, இரு காதல் கதைகள். I am a sucker for love stories and when it is well told how can I not but appreciate and enjoy it! படத்தில் காதல் அரும்பும் போது என் கண்களிலும் சிறு துளி நீர் அரும்பியது. அது செல்வாவுக்குக் கிடைத்த வெற்றி 🙂