மே பதிமூன்றாம் தேதி தமிழகத்தின் மெகா ட்வீட் அப் என்ற அறிவிப்பு வந்த நாளில் இருந்து ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிகழ்ச்சி நேற்று இனிதே நடந்தேறியது! சுமார் மூன்றரை மணிக்கு விழா ஆரம்பித்தது. சொன்ன நேரத்திற்கு முன்பே நிறைய பேர் வந்திருந்தனர். அனைவர் முகத்திலும் மகிழ்ச்சியை அப்பட்டமாகக் காண முடிந்தது. குடும்பம் இல்லாத ஓரு குடும்ப நிகழ்ச்சியாக இருந்தது. நுழை வாயிலில் பெயர், தொலைபேசி எண், மற்றும் நம் ட்விட்டர் ஹேண்டிலைப் பதிவு செய்ய புத்தகம் வைக்கப்பட்டிருந்தது. அன்புடன் அனைவரும் வரவேற்கப் பட்டது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. ஒருவரை ஒருவர் அநேகமாக நேரே பார்த்திராத சூழ்நிலையிலும் தானாகவே ஒரு நட்பு சூழல் அங்கே நிலவியது.
நல்ல பெரிய காற்றோட்டமான அரங்கம், மேடையில் கணினியுடன் இணைக்கப்பட்ட வெள்ளைத் திரையில் குறும்படம் வெளியிடவும், பவர் பாய்ன்ட் பிரசெண்டேஷன் செய்வதற்கு ஏதுவாக அனைத்தும் செட் அப் செய்யப் பட்டிருந்தது. பலர் அரங்கத்தில் அறிமுகம் செய்துகொண்டு அரட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். திரு பரிசல் தான் காம்பீர் ஆக திறம்பட செயலாற்றினார். அனைவரையும் வரவேற்ற பின் கை ஒலிபெருக்கியை வந்திருந்தவர்களிடம் கொடுத்து வரிசையாக நம்மை அறிமுகப் படுத்திக் கொள்ள சொன்னார். பலரின் ட்விட்டர் ஹேண்டிலை சொல்லும்போதே சிரிப்பலை ஆரம்பித்து விட்டது. ஒவ்வொருவரும் அவர்களை அறிமுகம் செய்து கொள்ளும் போது அவர்களின் ட்வீட்டுகளின் பெருமையை பொறுத்துக் கரகோஷமும் கூடவோ குறையவோ இருந்தது. கேலியும் கிண்டலும் இருந்தாலும் எதுவும் மிகைப்படாமல் அளவோடு இருந்தது நம் ட்விட்டர்களின் கண்ணியத்தைப் பறை சாற்றியது. நன்றாக நிகழ்ச்சியைக் கொண்டு சென்ற பெருமை பரிசலைச் சாரும்.
முதலில் திரு செல்வுவின் ட்வீட் புத்தக வெளியீடு நடைபெற்றது. அவர் வெளியிட ravanan181,senthilchp,and amas32 பெற்றுக் கொண்டனர். அவர் புத்தகம் அருமையாக இருந்தது. அவருக்கு வாழ்த்துகள்! பின் balaramanL அவர்களின் குறும்படத்தின் ட்ரைலர் திரையிடப்பட்டது. படம் இன்னும் நிறைவடையவில்லை என்பதால் டீசர் மட்டுமே! அதற்கே நல்ல வரவேற்பு 😉
அடுத்து @aidselva அவர்கள் அவர் சார்ந்திருக்கும் தொண்டு நிறுவனத்தைப் பற்றிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவர்கள் கிராமங்களுக்குச் சென்று பள்ளி மாணவர்களிடம் வகுப்பிற்கேற்ற திறன் உள்ளதா என்று ஆய்வு செய்கின்றனர். பின் பெற்றோர்களுக்கு குழந்தைகளின் நிலையை எடுத்துரைத்து ஆசிரியர்களிடம் ஆவன செய்வதற்கு அறிவுருத்தப் படுகிறார்கள். அவர் சொன்னதில் இருந்து ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு இரண்டாம் வகுப்பு மாணவனின் படிக்கும் திறன் கூட இல்லாமல் இருப்பது தெரிய வந்தது. இதிலிருந்து நம் தமிழ்நாட்டின் கல்வி கற்பிக்கப் படும் நிலை எவ்வளவு மோசமாக உள்ளது என்று புரிந்து கொள்ள முடிந்தது. மிகவும் அற்புதமாக விளக்கினார். இருவரை வேலைக்கு அமர்த்தும் வாய்ப்பும் இருப்பதாகவும், விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்ற அரிய தகவலையும் தந்துள்ளார்.
அடுத்து RJ crazy gopal அவர்களின் நகைச்சுவை விருந்து நடைபெற்றது. அவர் DR.RajMohanஐ ஒரு நோயாளியின் தந்தையை போல தொலைபேசியில் பேசி கோபப் படுத்தி அதை பதிவு செய்து எங்களுக்கு அதனை ஒலிபரப்பினார். பிறகு surekha and cableshankar “கேட்டால் கிடைக்கும்” என்ற அவர்களின் இயக்கத்தைப் பற்றிக் கூறினார்கள். எப்படி நம்முடைய சகிப்புத் தன்மையினால் கடைக்காரர்களும் மற்றவர்களும் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதை மிகவும் சுவாரசியமாக எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் சிறு விஷயத்தையும் அலட்சியம் செய்யாமால் போராடி வெற்றிப் பெறுவதைக் குறிக்கோளாக வைத்துக் கொண்டிருகின்றனர். இதை நம்மிடம் பகிர்ந்து கொண்டது நிச்சயம் பலரை அவ்வாறு செய்யத் தூண்ட ஒரு ஆரம்பமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
பிறகு JesuThangadurai stand up comedy செய்து அசத்தினார். மேலும் அவர் மெகா ட்வீட் அப் ஞாபகார்த்தமாக அனைவருக்கும் engrave செய்யப் பட்ட பேனா ஒன்றை பரிசளித்தார். போற்றத் தகுந்த ஒரு செயல். அதன்பின் வாழை என்ற இன்னொரு தொண்டு நிறுவனம் அவர்களின் செயல்பாட்டை விளக்க மேடைக்கு வந்தனர். இவர்களின் குறிக்கோள் குடும்பத்தில் முதல் தலைமுறையினராக பட்டப் படிப்பு பெற கிராமத்துப் பிள்ளைகளுக்கு ஆவன செய்ய வேண்டும் என்பதே! ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மெண்டார் கொடுக்கிறார்கள். அவர் அந்தக் குழந்தையின் படிப்பு மட்டுமல்லாமல் அனைத்துத் தேவைகளையும் கவனித்துக் கொள்வார். சியை அதிகரிக்க அவர்களுக்கு வாலண்டியர்கள் தேவையாம். பாராட்டப் பட வேண்டிய சேவை. ஆறு வருடங்களாக செய்து வருகிறார்களாம். இதைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள you can visit their website
vazhai.org – பிறகு M.G.Ravikumar அவர்கள் அட்டகாசமாக மிமிக்கிரி செய்தார். அவருடன் RJ crazy gopalம் இணைந்து ஒரு இரட்டையர் ஷோ நடத்திவிட்டார்கள். அவர்கள் திறனை பார்த்து வியந்து திரு ராவணன் அங்கேயே ஐநூறு ரூபாயை பரிசாக அளித்து அவர்களை மகிழ்வித்தார்!
@IKaruppiah அவர்கள் நகைச்சுவையோடு ஒரு கவிதையை அரங்கேற்றினார். அவருக்கும் நன்றி. அதற்கு பின் @rsGiri அவர்கள் இன்னிசை பாடல் கச்சேரி செய்து தன் பங்கிற்கு கூடத்தை உற்சாகப் படுத்தினார். அவருக்குப் பின் @pattasu அவர்களும் ஒரு மலையாளப் பாடலைப் பாடினார். முக்கியமாக பரிசலுக்கு நேற்று பிறந்த நாள். அந்தக் கொண்டாட்டத்தை எப்படி விடுவது? கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப் பட்டது. பிறகு ஒரு சிறிய ப்ரேக். அனைவரும் சிற்றுண்டி குளிர் பானம் பெற்றுக் கொண்டு மற்றவர்களுடன் அறிமுகப் படுத்திப் பேசிக் கொள்ள அந்த நேரம் செலவிடப் பட்டது.
பெண் ட்வீட்டர்கள் மொத்தம் ஐந்து பேர் தான் வந்தனர் என்று நினைக்கிறேன். மொத்தம் நூற்றியைம்பது ட்வீட்டர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருப்பார்கள். ப்ரேக்குக்குப் பிறகு நமக்குப் பிடித்த ட்வீட்கள் பற்றியும் நாம் பகிர்ந்து கொள்ள கருத்துக்கள் ஏதேனும் இருந்தால் அதைச் சொல்லவும் கை ஒலிபெருக்கி ட்வீட்டர்களுக்குக் கொடுக்கப் பட்டது. அனைவரும் அதை நன்கு பயன் படுத்திக் கொண்டனர்.
திரு கரையான் அவர்கள் புதிதாக ட்விட்டருக்கு வருபவர்களுக்கு உதவியாக ஒரு கையேடு தயாரித்து அனைவருக்கும் வழங்கினார். மிகவும் தேவையான மற்றும் சிறப்பான செயல்! அவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். சென்னையில் இருப்பவர்கள் இன்னும் நிறைய பேர்கள் கலந்து கொண்டு இருக்கலாம்.
வெளியூரில் இருந்து வந்த ட்வீடர்களின் ஆர்வத்தைப் பார்க்கும் போது சென்னையில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு சென்னையில் இருப்பவர்கள் இன்னும் நிறைய பேர் வந்திருக்கலாம். அடுத்த முறை கோவை என்று சொல்லப் படுகிறது. இன்னும் சிறப்பாக அப்பொழுது செய்து விடலாம். ஆனந்த விகடனில் இருந்தும் Z TV யில் இருந்தும் நிகழ்ச்சியை கவர் செய்தது ஒரு நல்ல வரவேற்பை மக்களிடையே ஏற்படுத்தும்.
நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இரவு உணவுக்குப் பின் விழா இனிதே நிறைவடைந்தது. யாரெல்லாம் இதற்கு உழைத்தார்கள் என்ற சரியான பெயர் பட்டியல் என்னிடம் இல்லாததால் நான் யார் பெயரையும் மென்ஷன் செய்யவில்லை. ஆனால் ஒருங்கிணைப்பார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் 🙂
இந்த சிறிய ஆரம்பம் (TNMegaTweetUp’12)நாளை பெரும் ஆல மரமாக வளரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ட்விட்டர் என்ற சமூக வலைத்தளம் கருத்துப் பரிமாற்றத்துக்கும், நட்பை வளர்ப்பதற்கும், சகிப்புத் தன்மையை மேம்படுத்துவதற்கும், எழுத்துத் திறனை வளர்ப்பதற்கும், இன்ன பிற நல்ல பயன்களுக்கு உதவும் மேடையாக அமைய வேண்டும் என்பதே வந்திருந்தோர் அனைவரின் விருப்பமும் 🙂
பின் குறிப்பு: இவ்விழா சிறப்பாக நடக்க நல்ல முறையில் ஒருங்கினைத்த @senthilchn @karaiyaan @expertsathya @Balu_SV, @Parisal மற்றவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Like this:
Like Loading...
Related
May 14, 2012 @ 17:32:36
May 15, 2012 @ 00:22:19
அருமையான பதிவுங்க… உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் அங்கே இருந்ததுகூட பலரை நிதானமாக நடந்துகொள்ள வைத்தது மிக்க மகிழ்ச்சி..இந்த @senthilcp எனக்கு இப்போதும் நல்லதுதான் செய்திருக்கிறார்… என் ட்விட்டர் விலாச்ம் @senthilchn நட்பு தொடரட்டும் நண்பரே
May 15, 2012 @ 01:35:19
கண்டிப்பா நல்ல தொடக்கம்தான். வருத்தங்கள் 2.1. பெண்கள் ட்விட்டரில் பேசுமளவுக்கு கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வம் கொள்ளாதது2. இணைய இணைப்பு சரியில்லாததால் சந்திப்புக்கு வராதவர்கள் கண்டுகளிக்க முடியாமல் போனது.மொத்தத்தில் நல்லதொரு தொடக்கமே. சத்யாவிற்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள்!
May 15, 2012 @ 02:35:54
இவ்விழா சிறப்பாக நடக்க நல்ல முறையில் ஒருங்கினைத்த @senthilchn @karaiyaan @expertsathya @Balu_SV, @Parisal மற்றவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
May 15, 2012 @ 02:45:18
விழாநிகழ்வினை மிக அருமையாக ஒன்றுவிடாம்ல் தொகுத்துத்தந்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள்
May 15, 2012 @ 06:07:54
நிகழ்ச்சியின் போது உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நடந்த நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல் நன்றாக பதிந்திருக்கிறீர்கள். அருமையாக நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து செயல்படுத்தியவர்களுக்கு என் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
May 15, 2012 @ 10:15:45
மிக விரிவாகக் கண் முன்னே கொண்டு வந்தீர்கள், இந்தச் சந்திப்புக்காக ஒற்றுமையாக உழைத்த எல்லோருக்கும் பங்காளிகளுக்கும் வாழ்த்துக்கள்
May 24, 2012 @ 14:23:04
விரிவாகவும் தெளிவாகவும் விழா நிகழ்வினை தொகுத்து இருந்தீர்கள் .நன்றி
May 24, 2012 @ 15:54:18
Thank you Sekaran 🙂
May 07, 2013 @ 17:19:06
மிகவும் மகிழ்ச்சி. அந்த விழாவில் பெண்கள் குறைந்திருக்க முக்கிய காரணம் பெண்கள் பெயரில் பல ஆண் ட்விட்டர்ஸ் மறைந்திருப்பது தான். உறவே இல்லை நேருக்கு நேர் சந்திக்க வைத்தது ஒரு பெரிய வேலை. உங்கள் செயல்பாட்டுக்கு பாராட்டுக்கள்.
May 07, 2013 @ 18:04:36
நன்றி 🙂