மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்

kalam2

நமது பாரத குடியரசுத் தலைவர் கலாமின் பிறப்பு, வளர்ப்பு, அவர் வகித்தப் பல பதவிகள் பற்றி நம்மில் பலரும் அறிந்த ஒன்றே. ஆனால் அவரின் மறைவு நம்மிடையே  ஏற்படுத்திய தாக்கம் நாம் நிச்சயம் எதிர்பார்க்காத ஒன்று என்பதில் சந்தேகமில்லை. அவர் திங்களன்று  இரவு ஏழேமுக்காலுக்கு ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் இறந்தார். தமிழ்நாட்டில் பல பள்ளி, கல்லூரிகளுக்குச் செவ்வாய் அன்று விடுமுறை அறிவித்திருந்தும் பல பள்ளிக் குழந்தைகள் செவ்வாய் காலை சீருடை அணித்து பள்ளிக்குச் சென்று கலாம் அவர்களைப் பற்றி பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தியுள்ளனர். விடுமுறை அன்று மாணவர்கள் விருப்பத்துடன் பள்ளிக்குச் சென்று, இறந்த ஒருவரைப் பற்றிப் பேச வேண்டும் என்றால் அவர் எவ்வளவு பெரிய inspiring personalityயாக இருந்திருக்க வேண்டும் என்று நாமே புரிந்து கொள்ள முடியும்.

நல்லடக்கம் இன்று. நேற்று முதலே திரும்பிய இடமெல்லாம் அவரின் படமும், அதற்கு மாலையும் அதன் முன் சில மெழுகுவர்த்திகளும் ஏற்றப்பட்டு ஒளி வீச ஆரம்பித்து விட்டன. இவ்வாறு இறுதி மரியாதை செய்தவர்கள் எல்லாம் பணம் படைத்தவர்கள் அல்ல. துப்புறவு தொழிலாளர்களும், வாகன ஓட்டிகளும், ஆட்டோ ஓட்டுநர்களும், சின்ன மளிகைக் கடைகளும் , மரக்கடைகளும், சின்ன சாப்பாட்டுக் கடைகளும், அயர்ன் கடைகளும் வைத்திருப்பவர் தாம். இவர்கள் தான் கலாமின் படம் வைத்து மாலை போட்டு ஊதுபத்தி ஏற்றி மரியாதை செய்தனர். ஒவ்வொரு தெரு முனையிலும் கலாமின் படம், இவர் சொன்ன பொன் மொழியுடன் வைக்கப் பட்டிருந்தது. எந்த ப்லெக்ஸ் பேனரிலும் ஸ்பான்சர் செய்தவர் பெயர் இல்லை, புகைப்படம் இல்லை. அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இன்று முழு கடையடைப்பு. இந்த மாதிரி ஒரு மரியாதையை அவர் பெற அவர் வாழ்க்கை இவர்கள் அனைவரையும் எந்தளவு பாதித்திருக்க வேண்டும் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

kalam3

நம் நாட்டின் குடியரசுத் தலைவராக அவர் 2002-2007 வரை இருந்தார். இது வரை அந்தப் பதவியை அலங்கரித்தவர்களுள் இவரைப் போல ஒருவரை சுதந்திர இந்தியா கண்டதில்லை. ஐந்தாண்டுகள் அவரின் இல்லமாக இருந்த ராஷ்டிரபதி பவனை எளிய மக்கள் வந்து பார்க்கும் இடமாக மாற்றி வரவேற்று விருந்தோம்பல் செய்தவர் அவர்.

kalam5

ராமேஸ்வரத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டுப் படித்து முன்னேறியதால் அவருக்கு எளியவர்களின் சிரமம் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. எளிமையானவராக இருந்ததால் அவர் இந்தியாவின் மிகப் பெரிய பதவியை வகித்தவர் ஆயினும் எல்லாராலும் எளிதாக நெருங்க முடிந்தது. அவர் குடியரசுத் தலைவர் ஆனது கூட ஒரு எதிர்பாராத நிகழ்வே. பிஜேபி அரசு காங்கிரஸ் அரசுக்கும் தோதான அரசியலைச் சார்ந்தவர் யாரும் கிடைக்காததால் கலாமை சட்டென்று தேர்ந்தெடுத்தார் அப்போதைய பிரதம மந்திரி வாஜ்பாய். யாராலும் மறுப்புச் சொல்ல முடியாத ஒரு வேட்பாளர்! அதற்கு முன் அவர் வகித்தப் பதவிகள் மிகச் சிறப்புடையவை. ஆயினும் அவர் குடியரசுத் தலைவர் ஆனது தான் அவரின் உன்னதமான குணங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவியது. அதற்கு நாம் இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

குடியரசுத் தலைவரான பின் அவர் தன் முதல் இரண்டு மாத சம்பளங்களை புட்டப்பர்த்தியில் உள்ள கல்லூரிக்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளார். ராஷ்டிரபதி பவனில் நடக்கும் இப்தார் விழாவுக்கு சுமார் இரண்டரை லட்சம் செலவாகுமாம். அது அரசாங்கத்தின் செலவு. அதில் இவர் ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் தன் பங்காகக் கொடுத்துள்ளார். இதெல்லாம் சிலர் அவர் மறைவுக்குப் பின் சொல்லக் கேட்டது. இது வரை தெரியாது. அப்போ இன்னும் வெளியில் தெரியாத வண்ணம் எவ்வளவு தான தர்மம் செய்திருப்பார் என்று நாம் சற்றே சிந்தித்துப் பார்க்கலாம்.

இளைஞர்களுக்கு முதியவர்களைக் கண்டால் பிடிக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அவர் ஈர்த்தது மொத்தமும் இளைஞர்களைத் தான். இன்று அவர் கடைசிப் பயணத்தில் அஞ்சலி செலுத்தக் கலந்து கொண்ட லட்சோப லட்ச மக்கள் அனைவரும் இளைஞர்களே. அதனினும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் குழந்தைகள் தாமாகவே முன்வந்து கலாமுக்கு தங்கள் சிறு கைகளாலும் பெரிய மனத்தாலும் செய்திருக்கும் அஞ்சலிகள் தான்.

kalam

அது எப்படி சாத்தியம் ஆயிற்று? அவர் உண்மை மட்டுமே பேசினார். அதனால் சாத்தியம் ஆயிற்று. வெளிப்பூச்சும் பாசாங்கும் அவரிடம் எள்ளளவும் இலை. குழந்தைகள் அதிபுத்திசாலிகள், அதனால் அவர்களுக்கு அவரைக் கொண்டாடத் தெரிந்திருக்கிறது. தொலைக்காட்சியில் பேட்டி எடுக்கப்பட்ட ஒவ்வொரு மாணவியும், மாணவனும் அவரைப் பற்றிச் சொல்லும் கருத்து நம்மை அசர வைக்கிறது. மரம் வளர்க்க வேண்டும், நன்றாகப் படிக்க வேண்டும், பெற்றோர்களைப் பேணிக் காக்க வேண்டும், கடுமையாக உழைக்கவேண்டும் என்று அவர் சொன்னார், அவற்றை எல்லாம் நாங்கள் கடைபிடிக்கப் போகிறோம் என்று தெளிவாகச் சொல்கிறார்கள்.

kalam1

சமூக வலைதளங்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்கு அவர் பதில் கடிதம் போட்டார், கையெழுத்திட்டப் புத்தகங்களை அனுப்பினார் என்று படங்களைப் பகிர்ந்துள்ளனர்! ஜனாதிபதி பதவியில் இருந்து ஒய்வு பெற்ற பின் அவரின் உழைப்பு இன்னும் அதிகமாகியது என்று சொல்லலாம். அவர் தொடர்ந்து மாணவர்களையும் இளைஞர்களையும் சந்தித்து உரை நிகழ்த்தி அவர்கள் மனத்தில் ஞான விளக்கை ஏற்றினார். ஒய்வு என்பதே அவர் அகராதியில் இல்லை. அவர் உதாரணப் புருஷராய் வாழ்ந்ததால் தான் அவரால் மக்களை அவர்பால் இழுக்க முடிந்தது. எப்பொழுது சொல் ஒன்றும் செயல் வேறோன்றுமாய் இருக்குமோ அப்பொழுது ஒருவரின் நம்பகத் தன்மை போய்விடும்.

அவர் எத்தனையோ பெரிய பதவிகளை தன் வாழ்நாளில் வகித்தார். அவரின் உதவியாளர் ஸ்ரீஜன் பால் சிங் சமீபத்தில் அவரிடம் என்னவாக உங்களைப் பின்னாளில் மக்கள் உங்களை நினைவில் வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது அவர் ‘ஆசிரியராக’ என்று உடனே பதில் அளித்திருக்கிறார். அது ஒன்றே போதும் அவரின் தன்மையை நமக்கு வெளிக்காட்ட. அவர் தன்னிடம் இருந்த ஞானம் அனைத்தையும் மற்றவர்களிடம் பகிரவே ஆசைப்பட்டார். கொடை வள்ளல். நாளைய தலைமுறையை சிறப்பாக வடிவமைக்க கையில் உளியுடன் செதுக்கவே தன் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவழித்துள்ளார்.

தமிழ் மொழி தெரிந்தவர்கள் எனில் கண்டிப்பாக அவருடன் தமிழிலேயே உரையாடுவார். தமிழில் பேசும்போது ஆங்கிலக் கலப்பில்லாமல் அவர் உரையாடுவதே ஒரு தனி அழகு. அவர் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியே கிடையாதாம். ஆல் இந்தியா ரேடியோவில் தான் செய்திகள் கேட்பாராம். ஆனால் உடனுக்குடன் ஈமெயில் மட்டும் செக் பண்ணிக் கொள்வாராம். அவர் ட்விட்டரில் இருந்து கொண்டு ஷில்லாங் போவது பற்றிக் கூட கடைசியாக ட்வீட் பண்ணியுள்ளார்.

எந்த அரசியல் பின்புலமும் இல்லை. எந்த பணக்கார, பாரம்பரியம் மிக்கக் குடும்பத்தில் இருந்தும் வரவில்லை, தன் கடமை என்று எதை நினைத்தாரோ அதைப் பழுதின்றி செய்தார். அனைத்து உயரிய விருதுகளையும் பெற்றும் பணிவுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார். குழந்தை உள்ளம் கொண்டவராக இருந்தார். ஆனாலும் அவர் மறைவுக்கு இந்தியாவே அழுதது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப் பதைபதைக்கும் வெய்யிலிலும் கூடி நின்று, அவரின் நல்லடக்கத்தின் போது நெஞ்சுருக அழுதனர். யாருக்குக் கிடைக்கும் இந்தப் பேரு?

நம் மத்திய அரசும் இராணுவ மரியாதையோடும் சகல ஏற்பாடுகளை செவ்வனே செய்து அவரை நல்ல முறையில் வழியனுப்பியது அனைவர் மனத்துக்கும் ஒரு ஆறுதலைத் தந்தது. முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்துக்கே சென்று இறுதி அஞ்சலி செய்தது அவருக்குரிய மேன்மையை பறைசாற்றியது. மோடியும் தில்லியில் ஒரு முறை, இராமேஸ்வரத்தில் இன்னொரு முறை வந்து அஞ்சலி செலுத்தி ஒரு நல்ல முன் மாதிரியை ஏற்படுத்தியிருக்கிறார்.

கல்யாண சாவு தான். அவர் திருமணம் புரிந்து கொள்ளவில்லை என்பது வேண்டுமானால் அவர் குடும்பத்தாருக்கு ஒரு குறையாக இருக்கலாம். அனால் அதைத் தவிர நிறை வாழ்வே வாழ்ந்தார். அனைவரும் விரும்பும் அனாயாச மரணத்தை இறுதியில் அடைந்தார். ஆயினும் செய்தி கேட்டவுடன் நம் வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்தது போல மனத்தில் சோகம் கவ்வியது ஏன்? இன்னும் அந்த வேதனை விலகவில்லையே. அது தான் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு. அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் சொத்து அவரின் வாழ்க்கை வரலாறு. அதில் உள்ள ஒவ்வொரு பக்கத்தையும் நம் வாழ்நாளில் அனுபவித்து செயல்படுத்துவது தான் அவரின் சொத்தை சரியான முறையில் பயன்படுத்துவதாகும்.

அவருக்கும் அவரின் வாழ்க்கைப் பாடத்துக்கும் நாம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கோம். வாழ்க அவர் புகழ். வளர்க அவர் வகுத்த நன்னெறிகள்!

kalam6

Thanks to @jvs2020 and @paramporul for their photos.

Seven – Review of a play about seven courageous women

mdrama

Went for a play today named “Seven” at Rani Seethai Hall. This was in honour of 16 Days of Activism Against Gender Violence. The aim of this project is to throw spotlight on existing issues of violence and affirm activists attempts to eliminate Gender Based Violence (GBV) in various parts of the world. The programme was a monologue of seven ordinary yet courageous women. The play Seven was created by seven award winning playwrights which talks about seven women activists who hail from Afghanistan, Cambodia, Guatemala, Nigeria, Northern Ireland, Pakistan and Russia.

We can see the magnanimity of their struggle and their stupendous achievements inspite of all odds by watching this play.

Marina Piskalakova-Parker, Russia founded the first hotline for victims of domestic violence which has grown into a big counselling service for Russian women. This story has been written by Paula Cizmar of USC, California.

Mu Sochua, Cambodia is the former minister of Women’s Affairs in Cambodia. She was co nominated for Nobel Peace Prize for her work against sex trafficking of women in Cambodia and neighbouring Thailand. MP Mu Sochua, after door to door visits to 428 villages, won a seat in the Parliamnet in July 2008 and was re elected in 2013. Catherine Filloux who wrote this piece has been writing about human rights and social justice for the past twenty years.

Annabelle De Leon, Guatemala, raised herself and her family out of poverty by getting an education. She has been a congresswoman since 1995 and has received death threats because of her fight against corruption and for the rights of the poor, particularly the women. The playwright is Gail Kriegel.

Inez McCormack, Northern Ireland (deceased in 2013) was an internationally renowned and hugely influential human rights and trade union activist. She was an advocate for equal rights and fair labour practices for women and minorities. Carol K.Mack is the playwright.

Farida Azizi, Afghanistan became an activist fighting the marginalization of women under Taliban rule in her native country. Because of threats to her life she has sought asylum and now lives in the US with her two children. She works on Women’s rights and peace building in Afghanistan. The playwright is Ruth Margraff.

Hafsat Abiola, Nigeria is an advocate for human rights and democracy following the murder of her activist parents. She founded the Kudirat Initiative for Democracy, which provides skills training and leadership opportunities for young women across Nigeria. Anna Deveare Smith is the playwright based on interviews with the activist.

Mukhtar Mai, Pakistan, was gang raped by four men and forced to walk home almost naked in retribution for an alleged honour crime. Instead of taking the traditional women’s route of committing suicide, she brought her rapists to justice, built schools to improve the condition of women and became an advocate for education in her country. Susan Yankowitz is the playwright of this moving tale.

Those who played the various female characters today were V.Padma a lecturer from Stella Maris, Sunil Vishnu from Evam, Saundarya Rajesh founder of AVTAR Career Creators, Salma a renowned poet and author in Tamil literature, Sampath Muthuvelan a core member of Nalamdana, Anwar Basha a budding entrepreneur, Swapna Nair a national award winning secondary grade teacher.

Each one of them emoted the characters beautifully. The story of each of the seven characters and their journey is very very painful. The audience is able to feel the pain as we sit through and listen to the various stories of strife and struggle as they unfold in front of us through these artistes.

I was very impressed with the director Sanjay Kumar’s presentation skills. He narrated the story all together instead of one by one and with not one bit of confusion. It made the programme interesting and made the audience attentive. The use of Tamil in narrating the story by a few of the characters was again a good directorial touch.

Each performer was equally good and I cannot say if one was better than the other and again the credit goes to the director for this. There was a lively discussion between the audience and the actors/director/and Anuradha Marwah a novelist and playwright who was the coordinator. The Consul general of The US Embassy was the chief guest.

The play will again be performed on Saturday Nov 22nd at Olcott Kuppam, Besant Nagar at 4.30pm. Please don’t miss it.

mdrama1

Super Ten’s Singapore Sweetheart Sasha

sasha

I have earlier written a post about our Super Ten’s friendship. {https://amas32.wordpress.com/2012/01/21/the-super-ten/} Now our children have grown and three from our group have their daughters married and two their sons. Yesterday early morning the first to get married among our Super Ten’s children delivered a girl baby to the joy of all of us!

Theirs was a love marriage and this baby is the fulfillment of their cherished dream of five years of marital bliss. They got married in Feb of 2009. Being a love marriage they had their fair share of initial disapproval from their families which they overcame through their love and patience! Their life in Singapore is made more beautiful now by the arrival of their little angel Sasha. Sasha means defender of the human race! Such an apt name for a girl in this day and age 🙂

shruthi

A few months ago our friend celebrated her daughter’s bridal shower in Chennai with much happiness. Her daughter’s due date was Nov 15th and so my friend had planned to leave on the 18th of this month. But Sasha had made other plans. My friend’s daughter went into early labour on the 15th morning. My friend could get a seat in the Singapore airlines flight which left Chennai only at 11.30pm on the 15th.

We always considered all our friends children as our own. So we were going through the same pressure and tension that our friend was going through for not being there with her daughter to help her. Initially things were going fine and looked like her daughter will have a normal delivery but suddenly a few complications arose and so the baby was delivered by C section. Sasha was born on the 16th morning at 3.47am under the punarpoosam star even before our friend arrived in Singapore. Both mom and baby are fine.

It was always great great fun to participate in each child’s wedding, this time though we went through the worries of motherhood when a daughter goes through her labour. Whenever a daughter in law or a son in law joins our clan we always scare them by saying you have not one mother in law but ten 🙂 But let me make it clear that in this case our friend alone has become the grandmother and none of the other of Super Ten group! 🙂

The baby looks like a newborn rose flower! We pray and wish Sasha to have a long and healthy life spreading joy to her family and beyond.

சூப்பர் டென்னின் சிங்கை செல்லம் சாஷா :-)

 

sasha

எங்கள் நண்பர் குழாம் பற்றி முன்பே ஒரு பதிவு போட்டிருக்கேன். அதில் மூன்று தோழிகளின் மகள்களுக்கும் இரண்டு தோழிகளின் மகன்களுக்கும் திருமணம் முடிந்து விட்டது. இன்று விடிகாலையில் வரிசைப்படி முதலில் திருமணம் புரிந்து கொண்ட எங்கள் தோழியின் மகளுக்கு அழகானப் பெண் குழந்தை பிறந்து எங்களை எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறாள்.

காதல் திருமணத்தின் அன்புப் பரிசு இந்தக் குழந்தை! 2009ஆம் வருடம் பிப்ரவரியில் திருமணம் நடந்தது, காதல் என்றாலே எதிர்ப்பும் சகஜம் தானே? இந்தத் திருமணத்திலும் அதற்குக் குறைவில்லை. ஆனால் அவர்களின் அன்பு வென்றது. இல்லறத்தை நல்லறமாகக் கொண்டு சிங்கையில் வாழ்ந்து வந்த அவர்களுக்கு இறைவன் அருளால் குழந்தை வரம் இப்பொழுது கிடைத்துள்ளது.

shruthi

சில மாதங்களுக்கு முன் அவளுக்கு வளைகாப்பு வைபவம் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அவளின் due date அடுத்த மாதம் 15 ஆம் தேதி தான். என் தோழி 18ஆம் தேதி இங்கிருந்து கிளம்பி உதவிக்குச் செல்வதாக இருந்தது. அதற்குள் நேற்று காலை என் தோழியின் மகளின் உடல் சுகவீனம் அடைந்து அவளை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. என் தோழிக்கு இரவு 11.30 மணி விமானத்தில் தான் இடம் கிடைத்தது.

ஒரொரு தோழியின் பிள்ளைகளும் எங்களுக்கு எங்கள் பிள்ளைகள் போலத்தான். எங்கள் தோழி பட்ட துடிப்பையும் நாங்களும் பட்டோம். நல்லபடியாகப் பிரசவம் ஆகவேண்டுமே என்ற கவலை. இடுப்பு வலி எடுத்து சுகப் பிரசவம் ஆகும் சூழலில் இருந்து சிறிது சிக்கல் ஏற்பட்டு உடனே சிசேரியன் செய்ய வேண்டிய சூழல் வந்தது. ஆனால் நல்லபடியாக அறுவை சிகிச்சை மூலம் 16.10.2௦14 விடிகாலை 3.47 எங்கள் குழுவின் முதல் பேத்தி புனர்பூச நட்சித்தரத்தில் உதித்தாள். தாயும் சேயும் நலம், எங்கள் தோழி குழந்தை பிறந்ததும் தான் சிங்கை சென்றடைந்தாள்.

ஒவ்வொரு தோழியின் பிள்ளைகள் திருமணத்திலும் மகிழ்ச்சியோடு பங்குபெறும் நாங்கள் இம்முறை பிரசவம் ஆகும் வரை சேர்ந்து கவலைப்பட்டு பின் நல்ல செய்தி வந்ததும் மகிழ்ச்சியில் திளைத்தோம். ஒவ்வோர் குழந்தையின் திருமணத்தின் போதும் வரும் மருமகளிடமும் மருமகனிடமும் உனக்கு ஒரு மாமியார் இல்லை, பத்து மாமியார்கள் என்று பயமுறுத்துவோம் ஆனால் பேத்தி பிறந்த எங்கள் தோழி மட்டுமே தற்சமயம் பாட்டி என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் 🙂

குழந்தையின் பெயர் சாஷா 🙂 மனிதகுலத்தைக் காப்பவள் என்று பொருள்! பார்க்க ரோஜா பூப் போல அவ்வளவு அழகாக இருக்கிறாள். சாஷா நோய் நொடியின்றி நூறாண்டு வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம்.

கைலாஷ் சத்யார்த்தி – அமைதிக்கான நோபெல் விருதைப் பெறும் இந்தியர்! 2014

kailash satyarthi

நம்மில் பலருக்கு இவருக்கு அமைதிக்கான நோபெல் பரிசு கிடைத்த அறிவிப்பு வரும் வரை இவர் யாரென்றே தெரியாது. இவருடன் அமைதிக்கான நோபெல் பரிசை சேர்ந்து பெரும் பாகிஸ்தான் குடிமகள் மலாலாவை தெரிந்த அளவு கூட இவரைப் பற்றி தெரியாமல் இருந்தது நாம் வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இவர் குழந்தைகள் உரிமைக்காகப் போராடும் ஒரு போராளி. இதுவரை இவரின் Bachpan Bachao Andolan (Save The Child Movement) தொண்டு நிறுவனத்தின் மூலம் 80,000 குழந்தைகளை 144 நாடுகளில் கொத்தடிமையில் இருந்து இவர் காப்பாற்றி உள்ளார்.

மத்திய பிரதேசத்தில் பிறந்தவர் (11.1.1954). பொறியியற் பட்டதாரி. முதுகலை பட்டமும் பெற்றவர். போபாலில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர் 1980 வேலையை விட்டு விட்டு Bonded Labor Liberation Frontன் பொது செயலாளராகப் பணி மேற்கொண்டார். இதே வருடம் தான் தன் தொண்டு நிறுவனத்தையும் ஆரம்பித்தார்.

இவருடைய தலைமையில் 1998 Global March Against Child Labour தொடங்கியது. இது குழந்தைகள் உரிமையை காப்பாற்றவும், கல்வியை அவர்களுக்கு அவசியமான ஒன்றாக அனைவருக்கும் உணர்த்தவும் எடுத்துக் கொண்ட முயற்சி. மேலும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள செய்வதை தடை செய்யக் கோரியும் அதற்கான விழிப்புணர்ச்சியும் இதன் மூலம் ஏற்படுத்த மேற்கொள்ளப் பட்டது. சிறு முயற்சியாக ஆரம்பித்த இவ்வியக்கம் பெரும் வெற்றியைக் கண்டது. 15௦ நாடுகளில் இருந்து இதில் மக்கள் பங்கு பெற்று, நடை பயணம் ஐந்து கண்டங்களிலும் நடந்தது. பங்கு பெற்றவர்கள் கடைசியில் ஸ்விட்சர்லேந்த்தில் வந்து சேர்ந்தனர். அங்கு International Labour Organisation (ILO)ல் குழந்தைகளை பண்டமாக வியாபாரம் செய்வதை தடை செய்ய தீர்மானம் இயற்றப் பட்டு கையெழுத்தாகியது. அது மட்டும் அல்லாமல் 14௦ நாடுகள் அந்தத் தீர்மானத்தை தங்கள் நாட்டின் சட்டமாகவும் எடுத்துக் கொண்டனர்.

குழந்தை தொழிலாளர் பங்களிப்பில்லாமல் உருவாக்கப்படும் கார்பெட்டுகளுக்கு Rugmark என்னும் சின்னத்தை (தற்போது Goodweave) தாமாக முன் வந்து அளிக்கும் முறையை உருவாக்கினார். இதனால் வெளிநாட்டில் விற்பனை ஆகும் பொருட்கள் இந்த இலச்சினைப் பார்த்து வாங்குவது பெருகியது. இதனால் வர்த்தகத் துறையில் social responsibilityயும் பெருகியது.

குழந்தை தொழிலாளர்களால் ஏழ்மை, படிப்பறிவின்மை, அதன் விளைவால் சமூகத்தில் பல தீமைகள் உருவாகின்றன என்பதை பல ஆராய்ச்சிகள் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பெருமை அவரைச் சாரும்.

UNESCO வின் ஒரு முக்கியக் குழுவில் அவர் அங்கத்தினர். கல்வியை அனைவருக்கும் தர வேண்டிய சமத்துவ உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். மேலும் குழந்தைகள் கொடுமைப் படுத்துவதை தடுக்கும் கமிட்டிகளில் அங்கம் வகித்துப் பல நாடுகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றி உள்ளார்.

Millennium Development Goals என்று ஒன்று 2000 வருடம் ஆரம்பிக்கப் பட்டது. அதில் இவர் முக்கிய நிறுவனர். அதன் கொள்கைகள்:

  1. உணவில்லாமல் கஷ்டப்படும் மக்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பது.
  2. எல்லாருக்கும் தொடக்கப் பள்ளி கல்வி கிடைக்கச் செய்வது.
  3. ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலையை உருவாக்குவது.
  4. குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையைக் குறைப்பது.
  5. தாயின் உடல் நலத்தை மேம்படுத்துவது.
  6. எய்ட்ஸ், மலேரியா மற்றும் இதர நோய்களைக் களைவது.
  7. சுற்று சூழல் பாதுகாப்பு.
  8. உலக நாடுகளின் ஒத்துழைப்போடு இவற்றை செயல்படுத்துவது.

இவரின் முயற்சியால் இவற்றை செயல் படுத்த பல்வேறு நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இவர் தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். இவரின் சிறிய அலுவலகத்தில் ஒரு சின்ன நோட்டீஸ் பலகையில் இவர் இதுவரை கொத்தடிமைத்தனத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை பிளாஸ்டிக் நம்பர்களில் ஒளிர்கிறது. இன்றைய தேதியில் 80000.

ஆனாலும் இவருக்கு நோபெல் பரிசு கிடைக்கும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். நமது அரசாங்கம் இவருக்கு ஒரு பத்ம விருது கூட இது வரை வழங்கவில்லை. இவரின் அலுவலகம் தெற்கு தில்லியில் ஒரு புழுதி படிந்த தெருவில் உள்ளது. தொலைபேசி அழைப்புகளை அவரே எடுத்து பதில் சொல்கிறார்.அவருடை ஈமெயில் ஐடியை யார் கேட்டாலும் கொடுக்கிறார். பிள்ளைகளைக் காப்பாற்றுவது தன் கடமை, வாழ்கை எனக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த விருது அவரின் சேவைக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய அங்கீகாரம்.

விபச்சாரத்தில் இருந்து சிறு பெண்களை இவர் காப்பாற்றிய பல பொழுதுகளில் இரும்பு ராடுகளினாலும் கழிகளினாலும் தாக்கப்பட்ட விழுப் புண்கள் இவர் உடல் முழுதும் உள்ளன. நம் நாட்டில் குழந்தைகள் வேலைக்குப் போவது எதனால் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார். வயிற்றுக்கு இல்லாத போது பல குழந்தைகள் தாமாகவே பெற்றோர்களுக்கு உதவ பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்கு செல்ல ஆரம்பிக்கின்றன. பின் வேறு வழியில்லாமல் அதுவே தொடர்கிறது.

இன்னொரு வகை உள்ளது, அதில் படித்துக் கொண்டே பெற்றோர்கள் சுமையை குறைக்க பிள்ளைகள் மாலை நேரத்தில் வேலைக்குப் போவது. இந்த வகையை ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். கைலாஷ் இவை அனைத்தையும் உணர்ந்து தகுந்த முறையில் குழந்தைகளுக்கு உதவி செய்கிறார்.  ஏழை எளியவர்களுக்குக் கிடைத்த கொடை திரு கைலாஷ் சத்யார்த்தி. இறைவனும் இயற்கையும் அவரின் தொண்டுக்குத் தொடர்ந்து துணை புரியட்டும். உலகமெங்கும் குழந்தைகள் மகிழ்ச்சியாக வளரட்டும்.

அமைதிக்கான நோபெல் பரிசை மலாலாவுக்கும் இவருக்கும் இணைந்து கொடுக்கப் போகும் அறிவிப்பு வந்தவுடன் இவர் மலாலாவுடன் கை கோர்த்து சேவை செய்ய தன் இணக்கத்தைத் தெரிவித்து உள்ளார்.

Kailash_Satyarthi

 

Reference: இணையத்தில் wiki, அவரின் பேட்டிகள்.

மரகதவல்லி alias Maggie

maggie

என் அம்மாவின் வாழ்க்கை வண்ணமயமானது. வளரும் பருவத்தில் எல்லாமே பளிச் வண்ணங்கள். என் அம்மாவின் அப்பா திரு. சக்கரவர்த்தி ஐயங்கார் செஷன்ஸ் கோர்ட் நீதிபதியாக இருந்தார். அதனால் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றலாகும் வேலை. என் அம்மாவிற்கு முன் நான்கு ஆண் பிள்ளைகள் பிறந்திருந்தார்கள். ஒரு பெண் குழந்தை இறந்தே பிறந்ததால் என் அம்மா பிறந்த போது என் பாட்டியின் தகப்பானருக்குப் பெரும் மகிழ்ச்சி, வறுத்த பயிர் முளைத்தது போல பெண் பிறந்திருக்கிறாள் என்று அவருக்கு மரகதவல்லி என்று பெயர் சூட்டினார்.

நடு ரோவில் என் அம்மாவின் தாய் தந்தை, இடது ஓரத்தில் தாய் மாமன். கீழ் வரிசையில் நாலு சகோதரர்கள், மேல் வரிசையில் டவாலியின் கையில் என் அம்மா.

நடு ரோவில் என் அம்மாவின் தாய் தந்தை, இடது ஓரத்தில் தாய் மாமன். கீழ் வரிசையில் நாலு சகோதரர்கள், மேல் வரிசையில் டவாலியின் கையில் என் அம்மா.

என் அம்மா பிறந்தது தாய் மாமன் வீட்டில், அரியலூரில். ஆனால் அந்த சமயம் என் அம்மாவின் அப்பா இருந்த ஊர் ஸ்ரீவைகுண்டம். அங்கு தான் அவர் மழலைப் பருவம் கழிந்தது. அரசாங்க வேலையில் சம்பளம் நிறைய இல்லாவிட்டாலும் அரசாங்க குவார்டர்ஸ், வேலையாட்கள் என்கிற வசதிகள் நிறைய உண்டு. அதுவும் நான்கு ஆண் குழந்தைகளுக்குப் பின் ஒரு பெண் என்பதால் எல்லாராலும் சீராட்டப் பட்டார் என்றே சொல்ல வேண்டும். அண்ணன்கள் எல்லாருமே அந்தக் கால சூழலுக்கேற்ப மரம் ஏறுதல், விளையாட்டு என்பது சண்டையில் முடிதல் என்பது போல் இருந்ததால் என் அம்மாவும் ஒரு Tomboy தான். எதற்கும் அஞ்சமாட்டார்.

இன்னும் சொல்லப் போனால் இவர் ஒரு மருத்துவர் ஆகியிருந்தால் மிகவும் நல்ல பெயர் பெற்றிருப்பார். அண்ணன்களுக்கு அடிபட்டாலும் முதல் உதவி செய்வது இவராகத் தான் இருக்கும். யாரும் வீட்டில் இல்லாத பொழுது இவர் அண்ணன் ஒருவருக்கு முதுகு முழுக்கத் தேள் பல இடங்களில் கொட்டிவிட்டது. சிறுமியாக இருந்தாலும் உடனே கொட்டிய இடத்தில் எல்லாம் சுண்ணாம்பைத் தடவி முதலுதவி செய்திருக்கிறார். இவருக்கு முன் பிறந்த அண்ணனுக்கு சிறு வயதில் போலியோ நோய் தாக்கியதால் வலது கை செயலிழந்து விட்டது. அது இன்று வரை என் அம்மாவுக்குப் பெரிய குறை. அவர் உலகப் புகழ் பெற்ற பொருளாதார நிபுணராக இன்று வலம் வந்தாலும் அவரின் உடற்குறை அவரை இன்றும் மனதளவில் வேதனைக் கொள்ள வைக்கும். பள்ளிக்குப் பேருந்தில் பயணம் செல்லும்போது முதலில் அண்ணனை பத்திரமாக வண்டியில் ஏற்றிவிட்டு அதன்பின் தான் இவர் ஏறுவாராம்.அதனால் ரொம்ப நாள் வரை அந்தப் பேருந்தின் ஓட்டுநர் இவரை தமக்கை என்றும் அவர் அண்ணனை தம்பி என்றும் நினைத்திருந்தாராம்.

ஸ்ரீவைகுண்டத்திற்குப் பிறகு என் தாத்தாவிற்கு பழனிக்குப் போஸ்டிங். எங்கள் தத்தா பாட்டி ஸ்ரீ வைஷ்ணவர்களாக இருந்தாலும் பலமுறை பழனி மலையை வலம் வந்தவர்கள். என் அம்மாவும் ஒரு வேலையாள் இடுப்பில் உட்கார்ந்தவாறு பழனி மலையை அவர்களுடன் வலம் வந்திருக்கிறார். அதன் புண்ணியப் பலனாகத் தான் எனக்கும் முருகன் அருள் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். முருகனே என் இஷ்ட தெய்வம்.

பழனிக்குப் பின் சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கடலூர், தூத்துக்குடி என் பல ஊர்களுக்கு என் பாட்டனாருக்கு transfer ஆனதால் சில சமயம் ஒரே வகுப்பைக் கூட இரண்டு வெவ்வேறு பள்ளிகளில் படித்திருக்கிறாராம். நடுவில் இரண்டு வருடம் அரியலூரில் தாய் மாமா வீட்டில் இருந்தும் படித்திருக்கிறார். அங்கும் மாமாவிற்கு ஐந்து ஆண் பிள்ளைகள் ஒரு பெண். அந்தப் பெண்ணே பின்னாளில் என் அம்மாவின் இரண்டாவது அண்ணனின் மனைவியாக வந்தார்.

அம்மாவிற்குப் படிப்பில் ரொம்ப ஆர்வம் கிடையாது ஆனால் அவர் எந்த விளையாட்டுப் போட்டியில் சேர்ந்தாலும் முதல் பரிசைத் தட்டிக் கொண்டு வந்துவிடுவார். நன்றாகப் பாடுவார். வீட்டில் பாட்டுப் பயிற்சி தரப்பட்டது. அதனால் பாட்டுப் போட்டிகளிலும், அண்ணன்கள் trainingல் பேச்சுப் போட்டிகளிலும் எப்பவும் அம்மாவிற்கு முதல் பரிசு தான். பின்னாளில் பாட்டுப் பயிற்சியைத் தொடர்ந்திருக்கலாம். சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை என்று நினைக்கிறேன்.

என் தாத்தா எந்தெந்த ஊரில் வேலை பார்த்தாலும் அதன் சுற்றுப்புறத்தில் இருக்கும் இடங்களுக்கு எல்லாம் கோடை விடுமுறைகளில் இவர்களை அழைத்துச் சென்றதால் என் அம்மா தென் இந்தியாவில் அநேக ஊர்களையும், கோவில்களையும், அருவிகளையும், நதிகளையும் பார்த்து இருக்கிறார். இயற்கையிலேயே இவருக்கு சரித்திரத்திலும் பூகோளத்திலும் மிகுந்த ஆர்வம். எந்த இடம் சென்றாலும் அவ்விடத்தின் கதையைப் பற்றித் தெரிந்து கொள்வதில் தான் அதிக ஆர்வம் காட்டுவார். இன்றும் கோவில்களுக்குச் சென்றாலும் சிற்பங்களையும் அந்தக் கோவிலைக் கட்டிய அரசரைப் பற்றியும் தெரிந்து கொள்ளவே மிகுந்த ஆர்வமாக இருப்பார்.

ஒரு முறை மகாத்மா காந்தியின் சொற்பொழிவைக் கேட்கவும் அவரை கண்ணால் கண்டு மகிழவும் இவரின் அம்மாவும் ஒரு அண்ணனும் மதுரைக்குச் சென்ற போது இவர் சிறுமியாக இருந்ததால் இவரை அழைத்துப் போகாதது இவருக்கு மிகுந்த வருத்தம். காந்தியைப் பார்க்க முடிந்த ஒரு அரிய வாய்ப்பை அவர் தவற விட்டதை நினைத்து அளவில்லா வருத்தமே. காந்திஜி சுடப்பட்டு இறந்த செய்தி வானொலியில் ஒலிபரப்பப்பட்டு இவர் காதில் விழுந்த பொழுது இவர் ஒரு கோவிலில் இருந்திருக்கிறார். விடாமல் கோவிலை வலம் வந்து இவர் கேட்ட செய்தி பொய்யாக இருக்க வேண்டுமே என்று இறைவனைப் பிரார்த்தித்து அழுதிருக்கிறார். இளம் வயதிலேயே அவருக்கு நிறைய தேசிய உணர்வு உண்டு. இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்று இருக்க மாட்டார். அரசியலில் நடப்பதைக் கூர்ந்து கவனிப்பார்.

பிராணிகளிடமும் நிறைய அன்பு! கால் ஒடிந்த பறவையோ, தாயில்லா பூனைக்குட்டியோ இவரின் பராமரிப்பில் நன்றாகிவிடும். இவர் இண்டர்மீடியட் இரு வருட படிப்பினை ஒரு வருடம் திருச்சியிலும், ஒரு வருடம் பாளையங்கோட்டையிலும் படித்து முடித்தார். பின்பு பட்டப் படிப்புக்கு இவரின் அண்ணன்களின் பிடிவாதத்தால் மெட்ராஸ் Queen Mary’s கல்லூரியில் சேர்ந்து இரண்டு வருட பட்டப் படிப்பை ஒரே ஊரில் படித்து சாதனை படைத்தார். படிப்பை விட எப்பவும் போல என் அம்மா மற்ற செயல்பாடுகளில் முன்னின்று, பல குழுக்களின் செயலாளராக பங்காற்றி Queen Mary’s கல்லூரி பிரபலமாக இருந்தார் 🙂

maggiegrad

என் அம்மா என் அப்பாவை திருமணம் புரிந்த பிறகு அவரின் கவலையற்ற வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்து பொறுப்புள்ள தலைவியாக அவரை மாற்றியது. என் அப்பா மிகவும் எளிமையானக் குடும்பத்தில் மூத்த மகனாப் பிறந்து குடும்ப சுமையைத் தாங்கும் அவசியம் இருந்ததால்  என் அம்மா அவருக்கு உற்றத் துணையாக மாறி தோள் கொடுத்தார். என் தாத்தாவிற்கு என் அப்பாவை மருமகனாக்கிக் கொள்ள முக்கியக் காரணம் அவரின் நேர்மையும், கடின உழைப்பும், அன்பான அணுகுமுறையும் தான். இல்லாவிட்டால் ஒரே பெண்ணை இவ்வளவு பெரிய குடும்பத்தின் மூத்த மருமகளாகக் கொடுத்திருப்பாரா என்பது சந்தேகம்.

திருமண புகைப்படம்

திருமண புகைப்படம்

 

தாஜ் மகாலில்

தாஜ் மகாலில்

மேல் படத்தில் நான் என் அம்மாவுடன், கீழ் படத்தில் என் தம்பி.

மேல் படத்தில் நான் என் அம்மாவுடன், கீழ் படத்தில் என் தம்பி.

என் நான்கு அத்தைகளுக்கும் என் அம்மாவும் அப்பாவும் தான் திருமணம் செய்து வைத்தனர். ஒரு சித்தப்பா என் பெற்றோரின் திருமணத்திற்குப் பின் பிறந்தவர். சித்தாப்பாக்களைப் படிக்க வைத்து அவர்களுக்கும் திருமணம் நடத்தி எல்லா உறவுகளையும் என் அம்மா அரவணைத்துக் கொண்டாடினார். என் தந்தை வழி தாத்தா ரொம்ப சிம்பிள்டன். எளிமையானவர் ஆனால் சாமர்த்தியம் கிடையாது. என் பாட்டி முடிந்த வரை தன் சாமர்த்தியத்தில் குடும்பத்தை நடத்தினார். ஆனாலும் அவருக்கும் எல்லா சுமையையும் என் அப்பா மீது சுமத்தி விட்டது மனதுக்கு வேதனையை அளித்தது. என் பாட்டி கேன்சர் வந்து 63 வயதிலேயே இறந்து விட்டார். என் அப்பா அவருக்கு 13 வயதில் பிறந்தவர். தாயின் மேல் மிகுந்த பாசம் உண்டு. என் தாத்தா அதற்கு பின் பல வருடங்கள் நல்ல முறையில் வாழ்ந்து தனது 93வது வயதில் தான் இயற்கை எய்தினார்.

என் தந்தை முதலில் பெரிய நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் நல்ல நிலைக்கு வர ரொம்பக் கஷ்டப்பட்டதால் பலருக்கும் வேலை வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இளம் வயது முதலே அவருக்கு இருந்தது. அதனால் அவர் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் செய்யும் சிறு தொழிற்சாலையை ஆரம்பித்தார். மிகவும் நல்ல முறையில் நடந்த அந்த தொழிற்சாலை, ஒரு பார்ட்னர் ஏமாற்றியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அவர் தனியாகவும் இன்னொரு நிறுவனத்தையும் ஆரம்பித்திருந்தார். அதில் பால் பேரிங்க்ஸ் செய்ய ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்டிற்கு நிறைய முதலீடு செய்ததால் அதிலும் பல பணப் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது.

என் அம்மா தான் ஆபிஸ் நிர்வாகத்தை முதலில் இருந்து கவனித்து வந்தார். அவர் திருமணத்திற்குப் பிறகு என் தந்தையின் உந்துதலின் பேரில் B.Ed படிப்பையும் முடித்திருந்தார். ஆனால் ஆசிரியர் வேலைக்குச் சென்றதில்லை. மிகச் சிறந்த நிர்வாகி. என் தந்தை மிகப் பெரிய  பொறியாளர் ஆயினும் அதிர்ஷ்டம் இல்லை. பால் பேரிங்க்ஸ் அது வரை ஜப்பானில் இருந்தும் ஜெர்மனியில் இருந்தும் தான் இம்போர்ட் செய்யப்பட்டது. முதன் முதலில் ஒரு ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரியில் இன்டிஜீனஸ் மெஷீன்களுடன் உள்நாட்டு டெக்னாலஜியுடன் பால் பேரிங்க்சை தயாரித்த முதல் இந்தியர் என் தந்தை. ஆனால் ப்ரொடக்ஷன் காஸ்ட் அதிகம். வெளிநாட்டுப் பொருளின் குறைந்த விலையோடு  போட்டிப் போட முடியவில்லை.

எத்தனையோ பணப் பிரச்சினைகளையும், வங்கிக் கடன், தனியார் கடன் இவற்றை சமாளித்து என்னையும் என் தம்பியையும் நல்ல முறையில் வளர்த்ததில் என் தாயின் பங்கு மிகப் பெரியது. அவர் தைரிய லட்சுமி. எதற்கும் கலங்காமல், அடுத்து என்ன செய்வது என்று யோசித்து செயல் புரிந்தார்.

இதன் பின் தான் உண்மையான சோதனைக் காலம் ஆரம்பித்தது. என் தந்தைக்கு பார்கின்சன்ஸ் டிசீஸ் வந்துள்ளது தெரிய வந்தது. முதலில் அவரது வலது கை ஒத்துழைக்காமல் இருந்தது. அந்த சமயம் நான் திருமணம் முடிந்து அமெரிக்கா சென்று விட்டேன். பார்கின்சன்ஸ் டிசீசுக்கு இன்று வரை நோய் தீர்க்கும் மருந்து கண்டுபிக்கப் படவில்லை. அது கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரின் அவயங்களை செயலிழக்கச் செய்யும். அந்த நோய் இந்தியாவில் பொதுவாக யாருக்கும் வருவதும் குறைவு. அதனால் நோய் பற்றிய ஞானமும் குறைவு. ஆனால் என் அப்பா மிக மிக பாசிடிவ் பெர்சன். எத்தனையோ கஷ்டங்களைப் பார்த்தவர், இதைக் கண்டும் அசரவில்லை.  பார்கின்சன்ஸ் நோயுடன் இருபது வருடம் போராட்ட வாழ்வு வாழ்ந்தார். நான் அவரைப் பற்றி தனியாக ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். படிப்படியாக அவர் தன் நிலையை உயர்த்திக் கொண்டு மனிதன் தெய்வ நிலையை, வாழும் போதே அடைய முடியும் என்னும் பாடத்தை எங்களுக்கு உணர்த்திச் சென்றார்.

இத்தனை நாள் வியாபாரத்தில் என் அப்பாவிற்கு வலது கையாக இருந்த என் அம்மா உண்மையில் உமையொரு பாகனாக மாறினாள். எத்தனையோ வருடங்கள் அம்மா தான் முழுக்க முழுக்கப் பார்த்துக் கொள்ளும் நிலையில் என் தந்தை இருந்தார். உணவு ஊட்டுவதில் இருந்து குளிப்பாட்டி விடுவது வரை எல்லாமே என் தாய் தான். உதவிக்கு ஆள் இருந்தும் பலப் பல விஷயங்கள் என் அம்மா ஒருவரால் தான் என் தந்தைக்கு சரியாகச் செய்ய முடியும். அதை இன்முகத்துடன் செய்தார் என் தாய். காந்தாரி திருதிராஷ்டிரனுக்குப் பார்வை இல்லை என்று தானும் தன கண்ணைக் கட்டிக் கொண்டாள், ஆனால் என் தாய் ஒரு படி மேல். என் தந்தைக்குக் கண்ணாகவே இருந்தாள்.

என் தந்தைக்கு என் தாய் மேல் மிகுந்த காதல், அன்பு, பாசம். பெரிய இடத்துப் பெண் தன்னை விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டது அவருக்கு மிகப் பெரிய பெருமை. அவர்களின் திருமணத்தில் K.B.சுந்தராம்பாள் கச்சேரியும், கொத்தமங்கலம் சுப்புவின் கச்சேரியும் நடைபெற்றது. தெரு அடைத்துப் பந்தல் போட்டு பாண்டிச்சேரியில் என் பெற்றோர் திருமணம் கோலாகலமாக நடந்தது. அதனால் என் தந்தை என் அம்மாவை மனத்தில் ராணியைப் போல தான் வைத்திருந்தார். மரகதம் என்ற என் அம்மாவின் பெயரை திருமணத்திற்குப் பின் அவர் மேகி என்று தான் சுருக்கி ஸ்டைலிஷ் ஆக அழைப்பார். அதனால் இன்றும் எங்கள் வீட்டுக் குழந்தைகள் என் அம்மாவை மேகி பாட்டி என்று தான் அழைக்கின்றனர் 🙂

என் அம்மாவிற்கு நிறைய படிக்கப் பிடிக்கும், உலக விஷயங்கள் அனைத்திலும் ரொம்ப ஈடுபாடு, எந்த டாபிக் பற்றியும் அறிவுசார்ந்து பேச முடியும். அன்பே நிறைந்த என் அம்மாவிற்கு உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தர எல்லாம் வல்ல இறைவனையும் என் தந்தையையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

அமெரிக்காவில்

அமெரிக்காவில்

சிங்கப்பூரில்

சிங்கப்பூரில்

 

 

 

என் தந்தையின் 80வது பிறந்த நாளின் போது.

என் தந்தையின் 80வது பிறந்த நாளின் போது.

 

என் வலைதளத்தில் இது என் நூறாவது இடுகை. இதை என் அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன் 🙂

 

நம்மாழ்வார்

ஆராவமுதன்- நம்மாழ்வார் திருவடித்தொழல்

ஆராவமுதன்- நம்மாழ்வார் திருவடித்தொழல்

“அவரவர் தமதமதறி வறிவகை வகை

அவரவ ரிறையவ ரெனவடி அடைவார்கள்

அவரவர் ரிறையவர் குறைவில் ரிறையவர்

அவரவர் விதிவழி யடைய நின்றனரே”

அவரவர் விருப்பபடி இருப்பதே இன்பம். மேலும் அவரவர் இஷ்ட தெய்வத்தை அவரவர் விருப்பபடி வணங்குவதுமே தான் இயல்பு நிலை. ஒவ்வொருவரின் அறிவும் புரிந்து கொள்ளும் திறனும் மாறுபடுகிறது. என் தன்மைக்கு ஏற்ப நான் புரிந்து கொள்கிறேன். என்னால் முடியும் முயற்சியில் இறங்கி என் சக்திக்கேற்ப நான் இறைவனை முயன்று அடைகிறேன். குறையொன்றும் இதிலில்லை! எம்முறைப்படியும் இறைவன் திருப்பாதங்களை அடையமுடியும். இதனை ஆணித்தரமாகச் சொன்னவர் நம்மாழ்வார்.

ஒரு சிறந்த ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரி சொல்லிக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு மாணவனின் கிரகிக்கும் தன்மை வேறு வேறு. திறமைக்கு ஏற்பப் பாடத்தை நடத்தி, சொல்ல வந்த விஷயத்தை அனைவரும் அறிந்து கொள்ள வைப்பதில் இருக்கிறது அவர் சாமர்த்தியம். இறைவனும் அதையே செய்கிறார். தேவைக்கேற்ப முறையும் மாறுபடுகிறது. சூரியனை வழிபடுபவர்களும் மாடசாமியை வழிபடுபவர்களும் ரங்கனாதரை வழிபடுபவரும் யாவரும் வணங்குவது ஒரே இறைத்தன்மையைத் தான். இதனால் வணங்குபவர்கள் இடையே எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை. இதனை அழகுத் தமிழ் பாசுரங்கள் வாயிலாகச் சொல்கிறார் நம்மாழ்வார். ஒரு இறைவனை வணங்குபவர் வேறு இறைவனை வணங்குபவரை விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ கிடையாது.

வேளாண் குடியில் பிறந்த காரியார் அவரின் மனைவி உடைய நங்கையார் என்ற உயர்ந்த பக்தர்களுக்கு வைகாசி விசாகத்தன்று திருக்கருகூரில் நம்மாழ்வார் பிறந்தார் (தற்போது ஆழ்வார் திருநகரி என்று பெயர்). பிறந்தது முதல் உண்ணாமல் அழாமல் இருப்பதைக் கண்டு மனம் வருந்தியப் பெற்றோர்கள் திருநகரியில் உள்ள ஆதி பிரான் கோவிலில் வந்து குழந்தையைக் கிடத்தி இறைவனிடம் பிரார்த்தித்தனர். அப்பொழுது அது வரை அசையாது இருந்த குழந்தை அங்கே இருந்த ஒரு புளிய மரத்தடிக்குத் தவழ்ந்து சென்று அந்த மரத்தில் உள்ள பொந்தில் உட்கார்ந்து கொண்டது. மற்ற குழந்தைகளை விட மாறுபட்டு இருந்தக் காரணத்தினால் மாறன் என்று பெயரிட்டனர். அக்குழந்தை பதினாறு வருடங்கள் அந்த பொந்திலேயே அமர்ந்திருந்தது.

நம்மாழ்வார் அவதரித்த இடம். நன்றி KRS

நம்மாழ்வார் அவதரித்த இடம். நன்றி KRS

இராமாவதாரம் முடிவுக்கு வரும் தருவாயில் யமதர்மன் இராமனுடன் பேச வந்தார். அப்பொழுது இராமன் இலக்குவனிடம் யார் வந்தாலும் உள்ளே விடக் கூடாது என்ற கட்டளை இட்டுச் சென்றார். அப்பொழுது மகா கோபியான துர்வாசர் வந்து இராமனைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். தடுத்தும் கேட்கவில்லை. நாட்டு மக்களை சபித்து விடுவேன் என்று கூறியதால், தனக்கு இதனால் எத்துன்பம் வரினும் பரவாயில்லை என்று இலக்குவன் உள்ளே சென்று துர்வாசர் வந்த செய்தியைச் சொல்கிறார். அதனால் இலக்குவன் மரமாக வேண்டிய சாபம் ஏற்படுகிறது. ஆனால், இராமன் இலக்குவன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில்  செய்த அந்த செயலைப் புரிந்து கொண்டு, நான் கலியுகத்தில் ஆழ்வாராக அவதரிக்க உள்ளேன்,  நீ இந்தக் கணையாழியோடு தென் திசை செல், எங்கு இந்தக் கணையாழி கீழே விழுகிறதோ அங்கு புளியமரமாய் நில் என்று கூறுகிறார்.

உறங்காப் புளி - ஆழ்வார்திருநகரி  நன்றி KRS

உறங்காப் புளி – ஆழ்வார்திருநகரி
நன்றி KRS

அந்த இலக்குவன் புளிய மரமாய் நின்ற இடத்தில் தான் மாறன் தான் இருப்பிடமாக்கிக் கொண்டார். பெருமாள் எங்கு சென்றாலும் இணை பிரியாது தொடர்ந்து வரும் ஆதிசேடனே மரமாகி அதில் பதினாறு வருடங்கள் பெருமாள் மௌனியாக சின் முத்திரையோடு அமர்ந்திருந்தார். அந்தப் புளியமரம் இன்றும் உள்ளது.

நம்மாழ்வார் சின் முத்திரையுடன்

நம்மாழ்வார் சின் முத்திரையுடன்

ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் வரை அதற்கு முற்பிறவி நினைவு இருக்குமாம். பூமியில் பிறந்தவுடன் சடம் என்னும் வாயு குழந்தையை சூழ்ந்து கொள்வதால் பூர்வ பிறவியின் வாசனை அற்றுப் போய் மாயையினால் கவரப்பட்டோமே என்று அழுமாம். ஆனால் நமாழ்வார் பிறந்தவுடன் அவரை சடம் என்னும் வாயுவால் நெருங்க முடியவில்லை. அதனால் தான் அவர் பிறந்தவுடன் அழவில்லை. சடம் என்னும் வாயுவை முறித்ததினால் அவருக்கு சடகோபன் என்னும் பெயரும் உண்டாயிற்று.

திருமாலின் திருப்பாதங்களாகவே நம்மாழ்வார் கருதப்பட்டார். நம்மாழ்வார் சடாரி! நம்மாழ்வாரின் உருவம் பதித்த சடாரி இங்கே.

நன்றி KRS

நன்றி KRS

வைணவ மரபுப்படி குருவிற்கே ஏற்றம் அதிகம். இறைவனை விட ஆச்சர்யார்களே முதன்மையும் மேன்மையும் உடையவர்கள். இந்த மரபுப் படி திருமாலே முதல் ஆச்சார்யர், திருமகள் இரண்டாம் ஆச்சார்யர், பரமபதத்தில் இருக்கக் கூடிய சேனை முதலியார் மூன்றாம் ஆச்சார்யர். சேனை முதலியாரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வாரை மதுரகவியாழ்வார் தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவருக்குத் தொண்டு புரிவதிலேயே தான் வாழ்நாளைக் கழித்தார். மதுரகவிஆழ்வார் இறைவன் மேல் ஒரு பாசுரம் கூட இயற்றவில்லை. அவர் இயற்றியப் பாசுரங்கள் அனைத்தும் நம்மாழ்வார் மேல் மட்டுமே. இவரன்றி வேறு தெய்வம் இல்லை என்று இவர் மேல் பதினோரு பாக்கள் இயற்றி அதனாலேயே ஆழ்வாரானார். நம்மாழ்வாரின் பாக்களை உலகறியச் செய்தார் மதுரகவியாழ்வார். இதில் முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டியது மதுரகவியாழ்வார் அந்தணக் குலத்தைச் சேர்ந்தவர். அவர் தன் குருவாக ஏற்றுக் கொண்டு இறைவன் மேல் கூடப் பாடாமல் தான் ஆச்சார்யனே இறைவன் என்று அவர் மேல் மட்டும் பாடியது விவசாயக் குலத்தைச் சேர்ந்த நம்மாழ்வாரை.

நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும்

நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும்

இவை யாருடைய பாக்கள என்று எல்லோரும் கேட்க, இவை நம் ஆழ்வாரின் பாக்கள் நம் ஆழ்வாரின் பாக்கள் என்று மதுரகவியார் சொல்லிச் சொல்லி  ஆழ்வாரின் திரு நாமமும் நம்மாழ்வார் என்றாயிற்று. நம்மாழ்வாருக்கு மாறன், சடகோபன், பராங்குசன், வகுளாபரணன், குருகூர் நம்பி, குருகைப் பிரான், திருநாவீறுடைய பிரான், தென்னரங்கன் பொன்னடி என்று பல பேர்கள் உண்டு. காரி மாறன் என்று தந்தை பெயருடன் கூடிய பெயரும் உண்டு.

நம்மாழ்வர்களின் பெயர்கள் - நன்றி KRS

நம்மாழ்வர்களின் பெயர்கள் – நன்றி KRS

பக்தி என்னும் அங்குசத்தால் பரமன் என்னும் களிற்றை வசப்படுத்தியதால் பராங்குசம் என்றும், மகிழம்பூக்களால் ஆன மாலையணிந்து அழகுற இருந்ததால் வகுளாபரணன் என்றும், ஊர் பேரைச் சேர்த்து குருகூர் நம்பி, குருகைப்  பிரான் என்றும், ‘பர’ தத்துவத்தை விளக்கியதாலும் திருமாலுக்குள்ளே அனைத்துத் தெய்வங்களும் அடக்கம்  என்னும் கருத்தை வீறு கொண்டு விளக்கியதால் நாவீறுடையான் எனவும் வழங்கப்பட்டார்.

நம்மாழ்வார் திருவிருத்தம் திருவாசிரியம் பெரிய திருவந்தாதி திருவாய் மொழி என்னும் நான்கு திருமறைகளை அருளினார். இதனை மதுரகவியாழ்வார் ஓலையில் எழுதினர். இந்த நான்கும் வேதத்தின் சாரமாகும். அதாவது வடமொழியில் உள்ள ரிக், யஜூர், சாம அதர்வண வேதத்தின் கருத்துக்களை ஆழ்வார் தமிழில் விளக்கினார். எனவே தான் ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்னும் பெயரும் இவருக்கு உண்டாயிற்று. நம்மாழ்வாரின் பாடல்கள் திராவிட வேதம் என்றழைக்கப்பட்டன.

எல்லாவற்றிற்கும் வித்தாக இருப்பவன் இறைவன். அவனே எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்துள்ளான். இது தான் இறைவனைப் பற்றி கீதை உபதேசிக்கும் தத்துவமாகும். இதனை ஆழ்வார்,

“யாவரும் யாவையும் எல்லாப் பொருளும்

கவர்வின்றி தன்னுள் ஒடுங்க நின்று

பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி”

என்றும்,

“அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானே

அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரோ”

என்று அந்த இறைவன் திருநாமம் நாராயணன் என்றும் அவன் பாற்கடலில் பள்ளிக் கொண்டவன் என்றும் இவனுக்குள் சகலமும் அடக்கம் என்றும், இதை அறிந்து கொள்வதே இறைவனை உணர்ந்து கொண்டதற்கு அடையாளமாகும் என்று கூறுகிறார். எல்லாருக்கும் இந்த ஞானம் வருவது எளிது கிடையாது. எனவே தான் ஆத்மாக்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறு பற்பல தெய்வங்களை வணங்குகின்றோம்.

உயிரினங்கள் துயரமின்றி வாழ ஒரே வழி இறைவனைத் தொழுவதே யாகும் என்பது இவர் கொள்கை.

அற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர்
(திருவாய்மொழி, 1.2.5)

 பக்தியால் உலகில் எதனையும் பெறமுடியும் என்பது அவருடைய எண்ணம். நம்மாழ்வார்க்குக் காணுகின்ற பொருளனைத்தும் கண்ணன் வடிவாகவே காட்சியளிக்கும். அசையும் பொருள், அசையாப் பொருள் அனைத்திலும் அவன் உள்ளான் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் அவர் ஏற்படுத்தினார். வானில் திரியும் மேகங்களைப் பார்த்து, “மேகங்களே நீங்கள் திருமாலின் திருமேனியழகை எப்படிப் பெற்றீர்” என்று கேட்பார்!

இவரது பாடல்களைத் தமிழ் சங்கத்தார் சங்கப் பலகை ஏற்றுக் கொண்டதோ என்று கேட்க, கண்ணன் கழலிணை என்னும் பாசுரத்தின் முதல் அடியை மட்டும் பலகையில் வைக்க உடன் வைக்கப்பட்ட இதர நூல்களையெல்லாம் தள்ளி திருவாய் மொழியினைச் சங்கப் பலகை பெருமையுடன் தாங்கி நின்றது.

நம்மாழ்வாரின் திருவாய் மொழியின் தாக்கம் கம்பராமாயணத்தில் நன்கு வெளிப்படுகிறது. கம்பர் ஆழ்வாரின் பாசுரங்களை நன்குக் கற்று  நம்மாழ்வாரைப் போற்றி அவரது பெயரிலேயே சடகோபரந்தாதி என்ற நூலை இயற்றினார்.

“வேதத்தின் முன் செல்க, மெய்யுணர்ந்

தோர் விரிஞ்சன் முதலோர்

கோதற்ற ஞானக் கொழுந்தின்

முன் செல்க குணங் கடந்த

போதக் கடலெங் குருகூர்ப்

புனிதன் கவியின் னொரு

பாதத்தின் முன் செல்லுமோ

தொல்லை மூலப் பரஞ்சுடரே”

என்றார் கம்பர்.

மேலும் இவர் நாயகி பாவத்தில் பராங்குச நாயகியாக இறைவனை மிகவும் இறைஞ்சி பலப் பாடல்களைப் பாடியுள்ளார். இது இவரின் தனி சிறப்பு. மடலூர்தல் என்பது சங்கக் கால மரபு. தான் விரும்பியப் பெண்ணை அடைய முடியாதத் தலைவன் அவளின்றி தான் வாழ முடியாத நிலையைக் காட்ட குதிரையிலேறி எருக்கம் பூ மாலை அணிந்து அப்பெண்ணின் படம் எழுதப்பட்டக் கொடியை கையில் வைத்துக் கொண்டு உடம்பெல்லாம் புழுதிப் பூசிக்கொண்டு வெட்கத்தை விட்டு நடுத்தெருவில் நின்று என்னைக் கைவிட்ட இரக்கமில்லாத பெண் இவள் தான் என்று கூவுவானாம். இதைக் கண்ட அவ்வூர் பெரியவர்கள் மனமிரங்கி அந்தப் பெண்ணை இவனுக்கு மணமுடித்து வைப்பார்களாம்.

பராங்குச நாயகி

நம்பெருமாள்

தன்னை நாயகியாய் பாவித்துக் கொண்ட நம்மாழ்வார் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி பகவானிடம் மன்றாடிப் பலப் பாடல்கள் பாடுகிறார். கண்ணபிரான் பராமுகமாக இருக்கிறான், என்னைக் கைவிட்டு விட்டான் என்று அலர் தூற்றியவாறே மடலூர்வேன் என்கிறார்.

நாணும் நிறையக் கவர்ந்தென்னை

நன்னெஞ்சம் கூவிக் கொண்டு

சேணுயர் வானத்திற்கும்

தேவ பிரான் றன்னை

ஆணையென் தோழீ உலகு

தொறலர் தூற்றி ஆம்

கொணைகள் செய்து குதிரி

யாம் மட லூர்துமே

என்று பக்தி இலக்கியத்தில் முதல் முறை மடலேறுதலைப் புகுத்தியது நம்மாழ்வார் தான்.

நம்மாழார் பள்ளிக்கொண்டிருக்க பெருமாள் காதலனாய்! நன்றி KRS

நம்மாழார் பள்ளிக்கொண்டிருக்க பெருமாள் காதலனாய்! நன்றி KRS

பெண்ணாக இருந்து அன்பு செலுத்தி இறைவனை அடைவது எளிது. அதைத் தான் ஆண்டாள் செய்தாள். அவள் காட்டுக்குச் செல்லவில்லை, தனிமைப் படுத்திக் கொள்ளவில்லை, மந்திரங்கள் பயிலவில்லை. பூமாலையை தினம் இறைவனுக்குச் சூடிக் கொடுத்தாள். இந்த அண்டத்தில் பரமாத்மா மட்டுமே ஆண் மற்ற ஜீவராசிகள் அனைத்தும் பெண் இனம். அதனால் பெண்ணான மீராவைப் போல ஆண்டாளைப் போல அன்பு செலுத்தினால் அவன் திருவடிகளை அடைவது எளிது.

சூடிக் கொடுத்தச் சுடர்கொடி

சூடிக் கொடுத்தச் சுடர்கொடி

நாயகி பாவத்தின் வேறு ஒரு பரிணாமமாக தன்னை மறந்த நிலையில் தலைவி செய்யும் செயல்களைக் கண்டு ஒரு தாய் புலம்புவதாக இந்தப் பாடல் வருகிறது,

மண்ணையிருந்து துழாவி வாமனன் மண்இது என்னும்
விண்ணைத் தொழுது அவன்மேவு வைகுந்தம் என்று
கைகாட்டும்
கண்ணையுள் நீர்மல்க நின்று கடல் வண்ணன் என்னும்
அன்னே என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என்செய்கேன்
பெய்வளையீரே

             (திருவாய்மொழி, 4.4.1)

 நாரை, பூவை முதலிய பறவைகளை இறைவனிடம் தூதாக அனுப்பிய பாடல்கள் நெஞ்சை உருக்குபவை. பழங்காலத் துறைகள் மட்டுமல்லாமல், பழங்கால இலக்கியத் தொடர்களும் திருவாய்மொழியில் சில இடங்களில் அப்படியே உள்ளன.

நம்மாழ்வார் வேதத்தின் கருத்துக்களைத் தமிழ் படுத்தி இறை நிலையை உலகுக்கு உணரச் செய்தார். அதனை இராமனுசர் பேணிக் காத்து வளர்த்துப் பெரிது படுத்தினார். நம்மாழ்வாரின் பாசுரங்கள் இறைவனது பண்புகளையும், அவனை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகளையும், ஊழ்வினை அடிப்படையில் அதற்கேற்படும் இடையுறுகளையும், அதை வெல்ல நாம் மேற்கொள்ள வேண்டிய முறைகளையும் விளக்குகின்றன.

பூரண அன்பு நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்லும். அந்த அன்பு தியாகத்தில் இருந்து தான் பிறக்கும். இறைவனிடம் அன்பு வைத்து, தொண்டில் நம்மை முழுக்க ஐக்கியப் படுத்திக் கொண்டால் அந்த இறைவனே நம்மை ஆட்கொள்வான் என்னும் உயர்ந்த தத்துவத்தை அளித்துள்ளார் நம்மாழ்வார். அவரின் மலரடிகளை இவ்வாறு புகழ்ந்து பாடுகிறார் மணவாள மாமுனி

“பாடுவதெல்லாம் பராங்குசனை, நெஞ்சத்தால்

தேடுவதெல்லாம் புளிக்கீழ் தேசிகனை – ஓடிப்போய்

காண்பதெல்லாம் நங்கையிறு கண்மணியை – யான் விரும்பிப்

பூண்பதேல்லாம் மாறனடிப் போது.”

azhwar thalam - tamizh isai (thiruvaai mozhi paNN) நன்றி KRS

azhwar thalam – tamizh isai (thiruvaai mozhi paNN) நன்றி KRS

“நம்மாழ்வார் ஒரு நாட்டார்க்கோ ஒரு சமயத்தார்க்கோ, ஓரினத்தாற்கு மட்டும் உரியவரல்லர். அவர் எல்லா நாட்டவர்க்கும், எல்லா சமயத்தவர்க்கும் எல்லா இனத்தவர்க்கும் உரியவர்.” – திருவிக (தமிழ் நாடும் நம்மாழ்வாரும் என்ற நூலில் எட்டாம் பக்கத்தில் எழுதியது)

மகாபாரதத்துக்கு நடுவே பகவத் கீதை என்னும் முத்துக் கிடைத்ததுப் போலே பன்னிரெண்டு ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு  இடையே நம்மாழ்வாரின் பாசுரங்கள் இரத்தினமாக மிளிர்கின்றன.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

ஆழ்வார் திருநகரி கோவில் (திருக்குருகூர்) நன்றி KRS

ஆழ்வார் திருநகரி கோவில் (திருக்குருகூர்) நன்றி KRS

ஆழ்வார் திருநகரியில் உள்ள நம்மாழ்வார். நன்றி KRS

ஆழ்வார் திருநகரியில் உள்ள நம்மாழ்வார். நன்றி KRS

Reference: http://www.tamilvu.org/

ஆழ்வார்கள் வரலாறு- அ. எதிராஜன்

நாலாயிர திவ்யபிரபந்தம் – இரா.வ.கமலக்கண்ணன்

சில அரியப் புகைப்படங்கள் கொடுத்து உதவிய @kryes க்கு நன்றி.

வாழ்க்கையே ஒரு நாடகம் தானே!

Translation of Life’s All About Drama, an interview of Madhuri Shekar by Anusha Parthasarathy in The Hindu MetroPlus Jan 2 2014 edition!

madhurimetro

Following her heart. (Photo: S.S. Kumar)

இந்த வருடம் மாதுரி சேகரின் இரண்டு நாடகங்கள் அமெரிக்காவில் அரங்கேறுகின்றன.  ஒரு பெரிய நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் வேலையை விட்டுவிட்டு எப்படி ஒரு நாடக ஆசிரியராக மாறினார் என்பதை இந்த சென்னைப் பெண் அனுஷா பார்த்தசாரதியிடம் பகிர்கிறார்!

முதலில் நாடக மேடையின் மேல் இருந்த ஈடுபாட்டை ஒரு பொழுதுபோக்காக எண்ணியதால் அமெரிக்காவில் தகவல் தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவுடன் நல்ல ஒரு மார்கெடிங்க் வேலையில் அமர்ந்தார். ஆனால் அவருள் இருந்த கதாசரியை அவரை நிம்மதியாக அந்த வேலையில் இருக்க விடவில்லை. நல்ல ஊதியம் தரும் வேலையை விட்டுவிட்டு MFA (Masters in Fine Arts, The University of Southern California, Los Angeles, California) முதுகலைப் பட்டப் படிப்பில் சேர்ந்தார். மூன்றாண்டுகள் பயிற்சி! ஜூன் 2013ல் பட்டம் பெற்றார். தற்போது அவரின் இரண்டு நாடகங்கள் “In Love And Warcraft” ம் “A Nice Indian Boy” பெரிய நாடகக் கம்பெனிகளால் தயாரிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் அரங்கேற உள்ளன.

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சரித்திர பாடத்தில் இளங்கலை பட்டப் படிப்புப் பெற்றார். சிறு வயது முதலே கதை சொல்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. கல்லூரி நாடகங்கள் பலவற்றில் பங்கேற்றாலும் நாடகத் துறையை தன் தொழிலாகக் கொள்ள அப்பொழுது அவர் நினைக்கவில்லை. ஆனால் அவர் தன் முதல் முதுகலைப் பட்டம் பெற்ற கல்லூரியில் நாடகத் துறை இருந்ததால் தன்னுள்ளிருந்த ஆர்வம் வெளிப்பட அது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

“எப்பொழுதுமே என் ஆழ்மனத்தில் அந்த எண்ணம் இருந்ததால் ஒரு வாய்ப்புக் கிடைத்தவுடன் வெளி வந்துவிட்டது.” என்கிறார். நாடகத்துடனான அவர் காதல்அவர் தந்தை Bay Area (USA)வில்  கிரேசி மோகனின் நாடகங்களை அரங்கேற்றும் சமயத்திற்கு, பல வருடங்கள் பின்னோக்கிப் போகிறது! “நான் அவர் ஒத்திகை செய்து நடிப்பதைப் பார்த்து வளர்ந்தேன், என் ஆர்வம் அங்கு ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்கிறார்.

கண்மூடிக் குதித்தல்!

2010ல் MFA பட்டப்படிப்பில் சேர்ந்தார். மூன்று வருட படிப்பில் நாடகத் திரைக்கதை -வசனம், தொலைக்காட்சித் திரைக்கதை- வசனம், சினிமா திரைக்கதை -வசனம், ஆகியவற்றில் தேர்ந்து 6 நாடகங்களும், 2 சினிமாக் கதைகளும் எழுதி முடித்திருக்கிறார். “இந்தப் படிப்பின் பயிற்சி ஒருவரை பன்முக எழுத்தாளராக மாற்றுகிறது. என் நல்ல வேலையை விட்டுவிட்டு இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்த என் முடிவில் நிறைய அபாயம் இருந்தும் நான் இந்த முடிவில் தீர்மானமாக இருந்து செயல்பட்டேன். இதை நான் செய்யாவிட்டால் பின்னாளில் வருந்துவேன் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்.” மேலும் சொல்கிறார், “என்னை எது மகிழ்விக்கிறதோ அந்தத் துறையில் முழுமையான ஈடுபாட்டோடு அந்த 3 வருடங்கள்  பயிற்சிப் பெற்றது எனக்கு ஒரு மிக அற்புதமான அனுபவம். இதை நான் பகுதி நேர பயிற்சியாகவோ அல்லது பயிற்சியே இல்லாமல் இந்தத் துறைக்கு வந்திருந்தாலோ இந்த அளவு தேர்ச்சி எனக்கு வந்திருக்காது”.

தயாரிப்பில் இருக்கும் இரண்டு நாடகங்களுமே அவர் படிக்கும் பொழுது எழுதியவை. “மூன்றாம் வருடப் படிப்பில் இருக்கும்போது அந்த வருடம் பட்டம் பெறுபவர்களும் கலந்து கொள்ளக் கூடிய ஒரு நாடகப் போட்டியில் நான் கலந்து கொண்டேன். அதில் வெற்றிப் பெறுபவரின் படைப்பை The Alliance Group in Atlanta தயாரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும்” என்கிறார் மாதுரி. இவருடைய நாடகம், “In Love And Warcraft”மற்ற மிகப் பெரிய கல்லூரிகளான Colombia University, NYU, Julliard School, ஆகியக் கல்லூரிகளில் படித்தவர்கள் சமர்ப்பித்த நாடகங்களுள் மிகச் சிறந்ததாகத் தேர்வாகி “Kendeda Play Writing Contest” ல் முதல் பரிசை வென்றது. இந்த நாடகம் இந்த வருடம் ஜனவரி பிப்ரவரி மாதத்தில் தயாராகி மேடை ஏறும். “2013 ஆம் வருடம் மிக அற்புதமான வருடமாக எனக்கு இருந்தது. இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்ற சூட்டோடு என்னுடைய thesis நாடகமான A Nice Indian Boyஐ  East West Players என்கிற மிகப் பழமையும் பாரம்பரியமும் மிக்க ஆசிய அமெரிக்க நாடகக் கம்பெனியினால் தயாரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது” என்கிறார். இந்த நாடகம் பிப்ரவரி மார்ச் மாதங்களில் தயாராகி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அரங்கேறும். மேலும் இந்த நாடகம் சான் டியாகோ என்னும் ஊரில் உள்ள  The Old Globe Theater லும் படிக்கப்பட்டது.

“In Love And Warcraft” நாடகம் ஒரு ரோமான்டிக் காமெடி. இந்த நாடகத்தின் நாயகி வார்கிராப்ட் என்ற கணினி விளையாட்டின் தீவிர விசிறி/விளையாட்டு வெறியர். அவளை நிஜ வாழ்வில் ஒரு பையன் விரும்பும் போது என்னாகும் என்பதே கதை. “A Nice Indian Boy” வேறு மாதிரியானக் கதை. “அமெரிக்கா வாழ் ஓரினச் சேர்க்கையாள இந்தியப் பையன் ஒரு இந்துத் திருமண முறையில் தனக்குப் பிடித்தத் தன் காதலனை மணக்க விரும்புகிறான். அவன் விரும்புவதோ ஒரு அமெரிக்க ஆணை! பெற்றோர்களோ அப்பொழுது தான் தங்கள் மகன் இப்படிப்பட்டவன் என்கிற உண்மையை உணர்ந்து மனத்தைத் தேத்திக் கொண்டிருக்கும் தருவாய. அப்பொழுது  அவன் தன காதலனை வீட்டுக்கு அழைத்து வந்து அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தன் கோரிக்கையை முன் வைக்கிறான். அதே சமயம் பெரியோர்களால் நிச்சயித்த அவர்கள் மகளின் திருமணம் ஆட்டம் கண்டு அவள் தன் கணவனை விவாகரத்துச் செய்ய வேண்டும் என்ற முடிவோடு தாய் வீடு திரும்புகிறாள். இந்த நாடகம் திருமண பந்தத்தை இந்தியர்களுடைய பார்வையில் அலசுகிறது” என்கிறார் மாதுரி.

சிகண்டி பற்றியும், அரவான் பற்றியும் இந்த நாடகத்தில் ஒரு சீனில் கதாநாயகன் மேற்கோள் காட்டுவதாக வருகிறது.” இந்த நாடகம் முழுக்க விநாயகர் பற்றிய குறியீடுகளும் வந்து கொண்டே இருக்கும். இந்து மதப்படி அவர் திருமணம் ஆகாதவர் ஆயினும் மற்றவர் திருமணங்களுக்கு உதவுபவர். இந்த விஷயங்களை எல்லாம் இந்திய அமெரிக்க வாழ்வியலோடுப் பின்னிப் பிணைக்க ஆசைப்பட்டேன். அமெரிக்காவில் வளர்க்கப்பட்டாலும் இந்து மதத்தோடு ஒரு தொடர்பை அழுத்தமாக ஏற்படுத்திக் கொள்ள நினைக்கும் ஒரு இந்திய வம்சாவளியின் கதை இது. மேலும் arranged  திருமணம் புரிந்த சகோதரி, தன பெற்றோருக்கு அது சரிப்பட்டாலும் அவளுக்கு அது சரியாக அமையாமல் இருப்பது பற்றியும் இதில் பேசுகிறேன்” என்கிறார் மாதுரி.

லாச் என்ஜலசில் நடக்கும் ஒரு நாடக ஆசிரியர்கள் பயிற்சி கூட்டத்திற்கும் மாதுரி அழைக்கப் பட்டுள்ளார். (L.A’s Center Theater Group) “ஒரு வருடத்திற்கு 7 கதாசிரியர்களுக்கு மட்டுமே அவர்கள் அழைப்பு விடுப்பார்கள். அவர்களுக்காக ஒரு நாடகம் எழுத நான் அழைக்கப் பட்டிருக்கிறேன். இந்த நாடகத்தின் கதைக் களம் ஒரு கெமிஸ்ட்ரி லேப். என் அறைத் தோழியின் முதுகலைப் படிப்பு வாழ்க்கையில் இருந்து வந்த ஒரு கதைக் கரு இது”.

University of Southern California வில் உதவி ஆசிரியராகத் தற்போது பணியாற்றி வருகிறார். ” என்னை அமெரிக்காவில் உள்ளோர்கள் ஒரு இந்திய எழுத்தாளராக பார்க்கக் கூடாது என்பதற்காக என் முதல் நாடகம் முழுக்க முழுக்க அமெரிக்காவைப் பற்றியதாக எழுதினேன். நடிப்பவர்களும் எல்லா தேசத்தவராகவும் இருக்கின்றனர். நான் பல்கலைக் கழகத்தில், என் உபரி வருமானத்திற்காக உலக நாடகத்தின் சரித்திரம் பற்றி பாடம் எடுக்கிறேன்”.

2013 in review

The WordPress.com stats helper monkeys prepared a 2013 annual report for this blog.

Here’s an excerpt:

The concert hall at the Sydney Opera House holds 2,700 people. This blog was viewed about 27,000 times in 2013. If it were a concert at Sydney Opera House, it would take about 10 sold-out performances for that many people to see it.

Click here to see the complete report.

ஷ்ரேயா கோஷல் லைவ் இன் கான்செர்ட்! சென்னை

sexy-singer-shreya-ghoshal-photos-stills (10)

ஸ்ரேயா கோஷல் இசை நிகழ்ச்சிக்குப் பதினைந்து நாட்கள் முன்னதாகவே டிக்கெட்டை முன் பதிவு செய்து ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்கி விட்டோம். நானும் என் கணவரும் திரைப்படங்களுக்குச் செல்லும் அளவு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்வது வழக்கமில்லை. A.R ரஹ்மான் கான்செர்ட்டிற்கு டிசெம்பர் 2012ல் குடும்பத்துடன் சென்று மழையில் நனைந்து ரசித்து மகிழ்ந்தது மறக்க முடியாத நிகழ்ச்சி. அதில் முக்கிய ஆனந்தம் எங்கள் மகனும் மகளும் அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்கு வந்திருந்ததால் கொட்டும் மழையிலும் நிகழ்ச்சியை வெகுவாக ரசிக்க முடிந்தது. ராக் கான்செர்ட் போன பீல் 🙂

ஆனால் ஷ்ரேயா இசை நிகழ்ச்சி சர் முத்தா வேங்கடசுப்பா ராவ் உள்ளரங்கில். அதனால் மழை வந்தாலும் கவலை இல்லை 🙂 மிகவும் நவீன அரங்கம். 5000 ரூபாயில் இருந்து டிக்கெட்டுக்கள் விற்பனை! அடுத்து 3000, 2000, கடைசி வகுப்பு பால்கனி 750 ருபாய். அதுவே போதும் என்று தீர்மானித்து பால்கனியில் நல்ல இருக்கைகளைத் தேர்ந்தெடுத்து விளம்பரம் வந்த முதல் நாளே  இருக்கைகளை பதிவு செய்துவிட்டோம்.

இந்த நிகழ்ச்சிக்கு செல்ல முக்கியத் தூண்டுதல் ட்விட்டரில் உள்ள @vrsaran , @kanapraba and @ikaruppu எப்பொழுதும் ஷ்ரேயாவைப் பற்றிப் பேசும் பொழுது அவர்கள் அடையும் எல்லையில்லா ஆனந்தத்தின் காரணத்தை அறிய இந்த அரிய வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டோம்!

டிராபிக்கிற்குப் பயந்து நிகழ்ச்சிக்கு ஒண்ணரை மணி நேரம் முன்னதாகவே வீட்டை விட்டுக் கிளம்பியும் போய் சேர ஒரு மணி நேரம் ஆனது. டிக்கெட்டை வாங்கிக் கொண்டு கொஞ்சம் சிற்றுண்டியும் அருந்தி இருக்கைக்குப் போய் அமர்ந்தோம். பால்கனியாக இருந்தாலும் மிகவும் நாள் வியு! ஒரு முறை அரங்கத்தை மேலேயிருந்துப் புகைப்படம் எடுத்துக்  கொண்டேன். ஒரு சிறுமியைப் போல எனக்குள் குதுகலம். ரொம்ப நேரம் காக்கவைக்கவில்லை. குறித்த நேரத்தில் 7.30pm நிகழ்ச்சித் தொடங்கியது. அதற்கு முன் நான் அரங்கத்தில் இருந்து ட்வீட்டியத்தை வைத்து கருப்பும் எங்களைக் கண்டுப்பிடித்து வந்து பேசினார். ரொம்ப தேட வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் முன் ரோவில் இருந்தார் :-))

முதலில் இரு பாடல்களைப் பாடியது ரிஷி என்ற வடநாட்டு சூப்பர் சிங்கர் வின்னர். அவர் தான் நிகழ்ச்சி முழுவதும் ஆண் குரலுக்குப் பாடியவர். மக்கள் பொறுமை இழக்க ஆரம்பிக்கும் முன் ஷ்ரேயா பாடிக் கொண்டே அரங்கத்தில் என்ட்ரிக் கொடுத்தார். தேவதை மாதிரி இருந்தார். கருப்பு நிற கால் டைட்ஸ். மேலே கருப்பில் வெள்ளி ஜரிகையால் ப்ரோகேட் செய்யப்பட முழுக் கை டாப்ஸ். முதுகு வரை கட்டபடாத நீள கருங்கூந்தல். காலில் வெள்ளி நிறத்தில் பின்னலுடனான ஸ்டிலெடோஸ் வைத்த செருப்பு.

செம எனர்ஜி! துளிக் கூட மூச்சு வாங்காமல் நளினமாக மேடையில் சில அசைவுகளுடன் நடனமாடிக் கொண்டே தான் பாடினர். வரிசையாகப் பல ஹிந்திப் பாடல்கள் ஒன்றின் பின் ஒன்றாக, கொஞ்சம் கூட இடைவெளி விடவில்லை. பலப் பாடல்கள் சோலோ நம்பர்கள் தான். அவர் முதல் முதலில் தேவதாஸ் படத்திற்குப் பாடிய பாடலையும் பாடினர். அவர் போட்டுக் கொண்டிருந்த வெள்ளி ஜரிகை உடைக்கு ஈடாக அவர் குரல் வெள்ளிக் கம்பியாக சிலிர்த்து ஒலித்தது. அனாயாசமாக உயர்ந்த பிட்சைப் பிசிறில்லாமல் எட்டிப் பிடித்தார். ஒவ்வொரு பாட்டு முடிந்த பிறகும் ஆடியன்சுடன் பேசினார். பதில்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.

திராவிட இயக்கத்தின் தீவிர ஹிந்தி எதிர்ப்பு சமயத்தில் பள்ளியில் படித்தமைக்கு மிகவும் நொந்து கொண்டேன். ஹிந்தி ஒரு வார்த்தைப் புரியவில்லை. பள்ளிப் பருவத்திலாவது அமிதாப்பின் விசிறியாக இருந்து நிறைய ஹிந்திப் படங்கள் பார்த்துக் கொஞ்சம் மொழிப் பரிச்சியமாவது இருந்தது. இப்போ சுத்தமாக டச் விட்டுப் போச்சு. சென்னை எக்ச்பரசில் இருந்து ஒரு பாடலும், நான் பார்த்து ரசித்த சாவரியா படப் பாடலும் அனுபவிக்க முடிந்தது. இசைக்கு மொழி அவசியம் இல்லை தான். ஆனாலும் ஒரு மணி நேரம் ஹிந்திப் பாடல்களையேக் கேட்டுக் கொண்டு தமிழ் பாடலைக் கேட்க ரொம்ப ஏங்கினேன். என் கணவர் தடுத்தும் தமிழ் பாடல் ப்ளிஸ் என்று பால்கனியில் இருந்து இரு முறை கத்திக் கேட்டேன். என் குரல் அவர் காதுகளுக்கு எட்டாவிட்டாலும் டெலிபதியாக அவரை சென்று அடைந்து முதல் தமிழ் பாட்டாக முன்பே வா என் அன்பே பாட்டைப் பாடினர்.  பாடுவதற்கு முன்பு நான் பாடிய எல்லா மொழி பாடல்களிலும் இந்தப் பாடலே எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் என்று சொன்னார். ஆனால் என்ன ஒன்று, இது தமிழில் உள்ளது என்றார். அங்கே அவரின் தாய் மொழிப் பற்று தெரிந்தது!!

வந்திருந்த ஆடியன்ஸில் 15% தான் தமிழர்கள் என்று நினைக்கிறேன். முழுக்க முழுக்க ஹிந்தி கும்பல். ஒவ்வொரு சீட்டும் டேக்கன், அரங்கம் நிரம்பி வழிந்தது. அவர் நடுவில் ரசிகர்களுடன் உரையாடியதும் ஹிந்தியிலேயே தான் இருந்தது. சில ஆங்கில வார்த்தைகள் நடு நடுவில் பயன்படுத்தியதால் என்ன கேட்கிறார் என்று புரிந்துக் கொள்ள முடிந்தது. கூட்டம் அப்படி ரசித்துப் பாராட்டியது. அவரும் சென்னை ரசிகர்கள் ரொம்ப விவரமானவர்கள், அதனால் இங்கு பாட வரும் போது எப்பொழுதுமே நன்றாகத் தயார் செய்து கொண்டு வருவேன் என்று நிகழ்ச்சி ஆரம்பித்திலேயே கூறினார்.

அடுத்தப் பாடலாக விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இருந்து பாடினர் – மன்னிப்பாயா . இந்தப் பாட்டைப் பற்றியும் மிகவும் சிலாகித்துப் பேசினார். கேட்க எளிமையானப் பாடலாகத் தோன்றினாலும் பாடுவதற்கு மிகவும் கடினமானப் பாடல், அதுவும் மேடையில் பாடுவதற்கு என்று குறிப்பிட்டுச் சொன்னார். A.R ரஹ்மானை மிகவும் புகழ்ந்து பேசினார். அவரின் இசையமைப்பில் முதலில் பாடிய ஹிந்திப் பாடலைப் பாடுவதற்கு முன் எப்படி அவர் இசையமைப்பில் பாடமாட்டோமா என்று நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த போது எனக்கு இந்த நல்ல வாய்ப்புக் கிடைத்தது என்று கூறி பின் பாடலைப் பாடினர். ரஹ்மான் அவருக்கு நிறைய அருமையானப் பாடல்களை அளித்தது அவரின் பெரும் பாக்கியம் என்றும் கூறினார்.

ஆணுடன் பாடும் எந்த குரலுக்கும் அந்த ரிஷி தான் கூடப் பாடினர். ஆனால் மன்னிப்பாயா பாடலுக்கு ஷ்ரேயா தனியாகவே பாடினர். ஒருவேளை ரிஷிக்கு தமிழ் பாடல் வராதோ என்னவோ. அதி அற்புதமாக அந்தப் பாடலை பாடினர். ஆண் குரலை பாடும் பொது சூப்பர் ஹை பிட்ச் எடுத்துப் பாடினர். இந்த இரு தமிழ் பாடல்களுக்கு மட்டும் தான் iPad  பார்த்துப் பாடினர். அனைத்து ஹிந்திப் பாடல்களும் மனப்பாடம். அவர் இசைக் குழு ப்ராக்டிஸ் பண்ணாமல் வந்த ஒரு பாடலை இசையின்றி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பாடினர். தேவ கானம் தான். இசையின்றி அவர் குரல் மட்டும் தேனாகக் காதில் பாய்ந்தது. அவர் முற்பிறவியில் என்ன நல்லது செய்தாரோ இந்த குரல் வளத்தைப் பெற! ஆனால் நாமும் கொஞ்சம் புண்ணியம் செய்திருக்கிறோம் இவர் குரலில் பாடல்களைக் கேட்டு ரசிக்க!

இடைவேளை என்று தனியாக விடவில்லை. அனால் அவர் பத்து நிமிட ப்ரேக் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி உள்ளேப் போனார். அந்த சமயத்தில் ரிஷி பாடினர். பாவம் அவருக்கு ரொம்ப ரசிகர்கள் இல்லை. நிறைய பேர் அந்த சமயத்தில் வெளியே சென்று வந்தனர். அவர் வேறு உடை மாற்றிக் கொண்டு வருவாரோ என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தேன், அனால் மேகப் டச்சப் செய்து கொண்டு fresh ஆக அதே உடையில் திரும்ப உள்ளே நுழைந்தார். அவர் சின்ன அசைவுகளுடன் குதித்து குதித்து பாட்டுக்கேற்ப ஆடும் போது கள்ளம் கபடமில்லாத ஒரு சிறு பெண்ணைப் போல எனக்குத் தோன்றினார். ஆரம்பம் முதலே ஆடியன்ஸையும் தன்னோடு பாட வைத்தார். உண்மையாகவே இந்த ஹிந்திக்காரர்கள் நன்றாகப் பாடுகிறார்கள். எவ்வளவு உரக்க அவருடன் பாடி பங்கேற்கிறார்கள் தெரியுமா? மேடை லைட்ஸ் மிகவும் நன்றாக இருந்தது. அப்பப்போ அரங்கிலும் விளக்கேற்றி ரசிகர்களையும் அவர்களின் ஆர்வத்தையும் ஷ்ரேயாவுக்குக் காட்டினார்கள். பால்கனி பக்கம் விளக்கு ஏற்றாமல் கடைசியில் போட்ட போது மகிழ்ச்சியுடன் எங்கள் திசையிலும் பார்த்து ஏன் இத்தனை நேரம் அந்தப் பகுதியில் விளக்குப் போடவில்லை என்று செல்லக் கோபமுற்றார்! அதற்கு அவருக்கு எங்கள் ஆரவாரம் பரிசாகக் கிடைத்தது.

நாங்கள் நிகழ்ச்சி முடிய சிறிது நேரம் இருக்கும் போதே கிளம்பிவிட்டோம். அதற்கு முக்கியக் காரணம். அவர் தொடர்ந்து பாடிய ஹிந்தி பாடலால் தான். சென்னையில் நடப்பதால் பல தமிழ் பாடல்கள் நிகழ்ச்சியில் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எனக்கிருந்தது. வந்திருந்த கூட்டத்துக்கு அந்தத் தேவை இருக்கவில்லை. மேலும் ஷ்ரேயாவுக்கும் தமிழ் பாடல்கள் தேவை என்ற எண்ணம் இல்லை என்றே தோன்றியது. Looked like she was oblivious to that fact. ஆனால் மிகவும் இனிமையான ஒரு மாலைப் பொழுது. கோடான கோடி நன்றி ஷ்ரேயாவிற்கு, அவர் அளித்த இன்னிசை மழைக்கு 🙂 இன்னொரு முக்கிய விஷயம், அவர் புகைப்படத்தில் இருப்பதை விட நேரில் இன்னும் அழகாக உள்ளார் 🙂

Previous Older Entries