Cinema – My Bodhi Tree

Graduation

Graduation

When I married my husband and moved to the US, my husband was in the last semester of his M.S. He used to go to the lab to work quite late in the night, and I would accompany him not wanting to be left alone in our apartment. I made use of the time there to study for my GMAT test, and then took the test two months later. But I actually enrolled in a college only five years later, and that too mainly because my GMAT scores were in danger of expiring!

My husband graduated from the University of Texas but work opportunities were slim pickings there. So we moved to San Jose, California. He got a job and we settled there. I could have joined a course immediately but we could not afford my education as we had my husband’s student loans to repay. Moreover the tuition fees are higher if one is a non-resident and without a Green Card. So we decided to wait. I started working in my husband’s friend’s office. My visa status did not allow me to work but he paid me in cash, though a little less than the market value.

Our next decision was about having children. We decided not to postpone that and so we had our daughter and then after two years our son was born. In the mean time we had gotten our Green Card and I was working part-time.

We decided that it was better that I do my course at San Jose State University itself as it would entail less of a commute. My son was two years old and very naughty. He was extremely annoyed that I was reading all the time and not playing with him. I still look back and wonder how I managed to finish my studies 🙂

I had enrolled in college six months earlier and done a pre-requisite course just to keep my GMAT score valid. Later when I enrolled in my MBA programme, I finished it in a year, just three semesters, fall, spring and summer. My GPA was 4.0. My husband graduating with me with the same MBA degree (Executive programme) from the same University on the same day was a very happy coincidence. Since he was travelling all the time he had breaks and though he had enrolled earlier than me we both graduated at the same time 🙂

When I was in my last semester all my classmates were frantically looking for a good job. I prepared my resume and passed it to many of my friends to give it in their offices. But in my heart of hearts I was not really looking forward to taking up a full time job. My in-laws had come to stay with us to help me out during my course but I was worried about how I would handle the situation of my children after they left. It was a crucial time for a serious job search and here I was wavering and worrying constantly of what I should be doing after I graduated.

It was very important that I took up a position soon after I graduated and any delay would only mar my chances of ever getting a good position. All my friends, very impressed with my marks, were pestering me to look for a job seriously as they were very sure that my chances of getting a good job was pretty good.

We had a Guru, Satguru Sivaya Subramuniya Swamy in Hawaii, whom we respected a lot. (http://www.himalayanacademy.com/monastery/lineage-philosophy/gurudeva) He was a white American and would freely answer any question posed to him either spiritual or otherwise. He had come to their temple in Concord, California where we visited him. I asked him about my quandary and sought his help. He said a mother’s place is at home. She is the anchor of the family. But what I say will not hold good in today’s world though that is my answer to your question.

Satguru Sivaya Subramuniya Swamy

Satguru Sivaya Subramuniya Swamy

It was imperative that I take up a full time job knowing our financial situation. I also looked around and saw all these awesome Indian women doing a fantastic job of balancing their careers and families very well, and yet here I was not wishing to do that. I had wanted to study, spent money on it, and then I could not handle the peer pressure that said once you get a good degree you have to work.

Then one day I happened to watch a film called City Slickers on the television. (http://en.wikipedia.org/wiki/City_Slickers) It changed my life in a minute! It is a story about three friends facing different problems at that point in their lives and getting really frustrated. They go on an adventure sport which is to herd cows from one place to another. So these city dwellers from New York go to New Mexico to herd the cows to Colorado. There are others who also have come from other places to join in this game. An important character is Curly who is the trail boss. He is the one who makes them realise their potential.

City Slickers Poster

City Slickers Poster

The three friends encounter a lot of difficulties in herding the cows, given their inexperience and age. But finally they do it. The film falls under the genre of comedy. But the three guys learn a valuable lesson. We all love one thing the most in our lives, and that should be our primary choice and therefore our only focus. Happiness automatically follows! They go back to New York wiser and happier.

I then realized that my “one thing” was my family. I decided to only take up part-time positions and such jobs which would not hinder me in any way from giving my full attention to my family. I conveyed this to my husband. I took up a teaching position in an evening college in Santa Clara and also taught on weekends when my husband used to take care of the kids. After moving to India I have not taken up a job. Back here I had the additional responsibility of taking care of my parents and my husband’s parents.

Hats off to those women who can take care of their family and perform efficiently at work as well! I really applaud them. But I knew that I was not cut out for that. I do not regret my decision and in fact can honestly say that I am happy I did it. I absolutely have to thank my husband and my family for their support in this matter.

சினிமா சொல்லித் தந்த பாடம்

பட்டமளிப்பு விழாவில்

பட்டமளிப்பு விழாவில்

நான் திருமணமாகி அமெரிக்கா சென்ற போது என் கணவர் M.S. படிப்பின் கடைசி செமஸ்டரில் இருந்தார். அவர் இரவு லாபுக்கு சென்று வெகு நேரம் வேலை செய்யும் போது நான் வீட்டில் தனியாக இருக்காமல் அவருடன் சென்று GMAT படிப்புக்காக என்னை தயார் செய்துகொண்டு அடுத்த இரண்டு மாதத்தில் வந்த தேர்வையும் எடுத்துக் கொண்டேன். ஆனால் மேற்படிப்பு சேருவதற்கோ அதன் பின் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. என் GMAT மதிப்பெண் காலாவதியாகிவிடும் தருணம் வந்ததால் தான் அவசரமாக நான் கல்லூரியில் சேர்ந்தேன்.

என் கணவர் படித்தது டெக்சாஸ் மாகாணத்தில். அங்கு வேலை வாய்ப்பு இல்லாததால் கலிபோர்னியா மாகாணம் சென்றோம். அங்கு வேலை கிடைத்து சான் ஹோசேயில் குடியமர்ந்தோம். அப்பொழுது உடனே நான் கல்லூரியில் சேர எங்கள் நிதி நிலைமை இடம் கொடுக்கவில்லை. அவர் படிப்புக்கான கடனை அடைக்க வேண்டியிருந்தது. மேலும் நிரந்தரக் குடியுரிமியாயைத் தரும் பச்சை அட்டை (Green card) இல்லை என்றால் கல்லூரிக் கட்டணமும் அதிகம். அதற்காகப் பொறுமை காத்தோம். எங்கள் நண்பர் ஒருவரின் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினேன். ஆனால் என் விசாப்படி நான் வேலைக்கு செல்ல முடியாது. அதனால் அவர் கணக்கில் வராமல் ஆனால் நான் செய்யும் வேலைக்குச் சற்றேக் குறைந்த சம்பளமாகக் கொடுத்து வந்தார்.

அடுத்த முடிவு பிள்ளைப் பெற்றுக் கொள்வதைப் பற்றி! பிள்ளைப் பெறுவதைத் தள்ளிப் போட வேண்டாம் என்று முடிவு செய்தோம். முதலில் மகள், பிறகு இரண்டு வருடங்கள் கழித்து மகன் பிறந்தான். அதற்குள் எங்களுக்கு பச்சை அட்டையும் வந்து விட்டது. இதற்கு நடுவில் நான் பகுதி நேர வேலைக்குப் போய் கொண்டு இருந்தேன்.

நாங்கள் வசித்த சான்ஹோசேயிலேயே படிப்பது என்று முடிவு செய்து  San Jose State Universityயில்  MBA பட்டப் படிப்பில் சேர்ந்தேன். அப்பொழுது என் மகனுக்கு இரண்டு வயது. ரொம்ப குறும்பு செய்யும் வயது. நான் படிப்பது அவனுக்கு சிறிதும் பிடிக்காது. இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் எப்படித் தான் படித்தேன் என்று எனக்கே ஆச்சர்யமாக உள்ளது 🙂

என் GMAT மதிப்பெண் காலாவதியாவதற்குள் முதலில் ஒரு ப்ரீ ரெக்விசிட் வகுப்பு எடுத்திருந்ததால் ஒரே வருடத்தில் என் படிப்பை முடித்தேன், அதாவது மூன்று செம்ஸ்டர்களில். என்னுடைய மதிப்பெண்கள் 4.0 GPA. இதில் ஒரு சந்தோஷ நிகழ்வு என்னவென்றால் என் கணவரும் அதே கல்லூரியில் MBA (Executive programme) பண்ணிக் கொண்டிருந்தார். அவர் அடிக்கடி வெளி நாடுகள் செல்ல வேண்டியிருந்ததால் நடுவில் அவர் படிப்பு தடைப் பட்டுக் கொண்டே வந்தது. ஆனால் படிப்பை நான் முடிக்கும் போதே அவரும் முடித்து இருவரும் ஒரே நிகழ்ச்சியில் பட்டம் பெற்றோம்.

நான் கடைசி செமஸ்டரில் இருந்த போதே என் வகுப்புத் தோழர்கள் அனைவரும் வெகு முனைப்போடு வேலை தேடிக் கொண்டிருந்தனர். நானும் என் ரெசியுமேவை என் நண்பர்கள் வேலை செய்யும் அலுவலகங்களில் அவர்கள் மூலம் கொடுத்து வந்தேன். ஆனால் உண்மையில் குழந்தைகளைக் காப்பகத்தில் விட்டுவிட்டு முழு நேர வேலை செய்ய நான் விரும்பவே இல்லை. வேலை வேட்டையில் தீவிரமாக இறங்குகிற நேரம் அது. ஆனால் நானோ மிகவும் குழம்பித் தவித்துக் கொண்டு இருந்தேன். என் படிப்புக்கு உதவியாக என் மாமியார் மாமனார் அங்கு வந்து தங்கி இருந்தனர். அவர்கள் சென்ற பிறகு என்ன செய்வது என்று மிகவும் கவலைப் பட்டேன்.

பட்டம் பெற்ற கையோடு வேலையில் சேர்ந்துவிடவேண்டும். சிறிது தாமதித்தாலும் சூடு ஆறிப் போய் வேலைக் கிடைக்காமல் போக அதிக வாய்ப்புண்டு. என் மதிப்பெண்களைப் பார்த்து என்னைச் சுற்றியுள்ள அனைவரும் உனக்கு உடனே நல்ல வேலைக் கிடைக்கும், அதனால் வேலைத் தேட சிறந்த முயற்சி எடுத்துக் கொள்ளும்படித் தூண்டி விட்டுக் கொண்டிருந்தனர்.

ஹவாயில் சத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி என்ற சைவ சித்தாந்த மடாதிபதி இருந்தார். (http://en.wikipedia.org/wiki/Sivaya_Subramuniyaswami )அவர் கான்கார்டில் உள்ள அவர்களின் பழநி சுவாமி கோவிலுக்கு விஜயம் செய்யும் பொழுது நாங்கள் அவரை தரிசிக்க செல்வோம். வெள்ளை அமெரிக்கர், எல்லா ஆன்மிக மற்றும் வாழ்வியல் கேள்விகளுக்கும் சுற்றி வளைக்காமல் நேரடியாக பதில் அளிப்பார். அவரிடம் நான் வேலைக்குப் போவது பற்றிக் கேட்டேன். ஒரு தாயின் இடம் வீடு என்றார். ஒரு தாயே குடும்பத்துக்கு ஆணிவேர். இந்தக் காலத்துக்கு நான் சொல்வது ஏற்புடையதாகத் தெரியாவிட்டாலும் உன் கேள்விக்கு இது தான் பதில் என்றார்.

சத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி

சத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி

எங்கள் பொருளாதார நிலை நான் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தை எனக்கு உணர்த்தினாலும், என்னை சுற்றியுள்ள அனைத்து இந்திய பெண்மணிகள் குழந்தைகளையும் பராமரித்து பாங்குடன் வேலைக்குச் செல்வதை பார்த்தும் என்னால் என் எண்ணத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை. படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு செலவழித்துப் படித்துவிட்டேன். படித்தால் முழு நேர வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற சமுதாய அழுத்தும் என்னை அலைக்கழித்தது.

அப்பொழுது ஒரு நாள் தொலைக் காட்சியில் (City Slickers http://en.wikipedia.org/wiki/City_Slickers) என்ற ஆங்கில படத்தை எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. அது என் வாழ்க்கையை ஒரு நொடியில் மாற்றியமைத்தது. மூன்று நண்பர்கள் தம் தம் வாழ்க்கையில் ஒரு நிம்மதியின்றி இருக்கும் தருவாயில் அவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு adventure sportஐ மேற்கொள்கின்றனர்.  மாடுகளை ஒர் இடத்தில் இருந்து இன்னொரு ஊருக்கு ஓட்டிச் செல்ல வேண்டும். அதற்காக அவர்கள் வசிக்கும் நியுயார்க்கில் இருந்து நியுமெக்சிகோ செல்கின்றனர். அங்கிருந்து கொலராடோ என்ற மாநிலத்துக்கு மாடுகளை ஓட்டிச் செல்ல வேண்டும். நியுயார்க்கில் நகர வாழ்க்கை வாழ்ந்து, நடு வயதைத் தொட்டுக் கொண்டிருந்த அவர்களுக்கு இது பெரும் சவாலாக அமைகிறது. இதில் முக்கிய கதாப்பாத்திரம் கர்ளி என்பவருடையது. அவர் தான் அந்த மாட்டு மந்தைகளை சரியாக இவர்கள் எல்லாரும் கொண்டு சேர்க்கின்றார்களா என்பதை மேற்பார்வை பார்க்கும் பாஸ்! அவரின் பாத்திரப் படைப்பு அருமை. இந்த மூவரைத் தவிர இன்னும் சிலரும் இந்த மாடுகளை ஒட்டிக் கொண்டு சேர்க்க முயற்சி செய்யும் கதாப்பாத்திரங்களாக வருகிறார்கள். இது ஒரு Cow Boy கதை என்றும் வைத்துக் கொள்ளலாம்.

City Slickers Poster

City Slickers Poster

பலப் பல இடையூறுகளைக் கடந்து எப்படி கொலராடோ போய் சேருகிறார்கள் என்பது மீதிக் கதை. நகைச்சுவைப் படம். இருப்பினும் கடைசியில் கர்லி வாயிலாக அந்த மூன்று நண்பர்களும் ஒரு உண்மையை உணர்ந்து கொள்கிறார்கள். நம்முடைய வாழ்வில் நாம் ஏதோ ஒன்றை மட்டுமே மிகவும் நேசிக்கிறோம். அதை மட்டுமே முக்கியம் என்று உணர்ந்து  தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதன் மேல் மட்டுமே நம் முழு கவனம் இருக்கவேண்டும். வாழ்க்கையில் நிம்மதி தானே வந்து நம்மை அடையும்!

I then realized that my “one thing” is my family. நான் என் முடிவை என் கணவரிடம் தெரிவித்தேன். பகுதி நேர வேலைக்கு மட்டுமே செல்வேன், அதுவும் என் குழந்தைகளையும் கணவரையும் பராமரிப்பதில் பாதிப்பு வராத வரையில் என்று முடிவெடுத்து அவரிடம் சொன்னேன். நான் அங்கே மாலைக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். சனி ஞாயிறுகளிலும் வகுப்புகள் எடுப்பேன். அந்த சமயத்தில் என் கணவர் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வார். இந்தியா திரும்பிய பின் நான் வேலைக்குச் செல்லவில்லை. என் பெற்றோர்கள் மற்றும் என் கணவரின் பெற்றோர்களையும் பராமரிக்கும் பொறுப்பு எனக்கு வந்தது.

Hats off to those women who manage their families and careers efficiently! அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று உணர்ந்ததினால் நான் எடுத்த முடிவு இது 🙂 இன்று வரை இதற்கு நான் வருந்தியதில்லை. மகிழ்ச்சியே அடைந்திருக்கிறேன். அதற்குத் துணையாக இருந்த என் கணவருக்கும் குடும்பத்தினருக்கும் என் நன்றி.

விஸ்வரூபம் – திரை விமர்சனம்

vishwaroopam-film

திரைப் படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிட தமிழக அரசின் மற்றும் இஸ்லாமியரின் பலத்த எதிர்ப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கும் விஸ்வரூபத்தைப் பார்க்க பெங்களூரு செல்லவேண்டியதாகிவிட்டது.. தமிழருக்கு எதிராக கன்னடகாரர்கள் பலமுறை வன்முறையில் ஈடுபடும் அந்த பெங்களூருவுக்கே சென்று ஒரு தமிழ் படத்தைப் பார்க்க வைத்த காலத்தின் கோலத்தை என்னவென்று சொல்வது!

இது ஒர் ஆங்கில படத்துக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளது. எடுத்துக் கொண்டிருக்கும் கதையும் புதுசு. அனால் நமக்குக் கொஞ்சம் அந்நியமானது. அல் குவைதா தீவிரவாதிகளின் தாக்கம் அமெரிக்க உணர்ந்த ஒன்று. நம் நாட்டிலும் தீவிவாதிகளின் தாக்குதல் பல முறை நடந்துள்ளது. மிக சமீபத்தில் மும்பை தாக்குதல் நுணுக்கமான திட்டமிடுதலோடு அதி நவீன தொலைத் தொடர்பு சாதனங்களின் உதவியோடு செயல் படுத்தப் பட்ட ஒரு கொடுமையான தாக்குதல் தான். ஆனால் அந்தத் தாக்குதலை நடத்தியது எந்த இயக்கம் என்பதையெல்லாம் சிந்திப்பதிலோ தெரிந்து கொள்வதிலோ நேரம் செலவிடுவதில்லை.

ஆப்கானிஸ்தானில் வேரூன்றியிருக்கும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான அல்குவைதா எப்படி அமெரிக்காவில் திட்டமிட்டு ஊடுருவி தாக்குதல் நடத்துகிறது என்பது பற்றிய கதை இப்படம். இஸ்லாமியர்களே பயப்படும் Fundamentalist இயக்கம் அல்குவைதா. பெண்களுக்கு சுதந்திரம் தராமல், சம உரிமை தராமல், மதத்தின் பெயரால் மனிதர்களை மூளைச் சலவை செய்து அவர்களுக்கு மட்டும் சரி எனப்படும் நியாயத்தை செயல் படுத்தும் ஓர் இயக்கம். கதைக் களம் ஆப்கானிஸ்தானும் அமெரிக்காவும் தான். இந்தியா கதையில் இல்லை, கதாநாயகர் இந்திய வம்சாவளியினர் என்பதைத் தவிர.

அல் குவைதா இயக்கம், தீவிரவாதத் தாக்குதல் என்பதால் வன்முறை காட்சிகள் நிறைய. மேலும் அவை மிகவும் graphic ஆக உள்ளது. அதிலும் கமல் விசுவரூபம் எடுக்கும் காட்சி பகீர், அதே சமயம் மிகவும் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நடக்கும் சண்டைக் காட்சிகளும் மிகவும் நம்பகத்தன்மையோடு படமாக்கப்பட்டுள்ளன. கமல்ஹாசன் என்னும் இயக்குநரின் கடின உழைப்புத் தெரிகிறது.

கௌதமி உடை அலங்காரத்திற்குப் பொறுப்பு. அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கவேண்டும். மிகவும் கவனத்தோடு அருமையாக உடை வடிவமைப்பு செய்து இருக்கிறார். சானு வர்கீசின் ஒளிப்பதிவு அற்புதம்.

படத்தில் ஒரே ஒரு பாட்டு தான் முழுவதுமாக வருகிறது. உனைக் காணாது நான் இன்று நானில்லையே பாடலுக்கு நடனமாடிய கமல்ஹாசன் நம் கண்களுக்கு ஒரு கவிதையாகத் தெரிகிறார். அதற்கு அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த பிர்ஜு மகராஜூக்கு ஒரு சலாம்! மற்ற அனைத்துப் பாடல்களும் பின்னணியில் ஒலிக்கும் பாடல்களே. சங்கர் ஈஷான் லாய் இசை அருமை.

கமல்ஹாசன் ஒர் உன்னத நடிகர். இந்தப் படம் அதற்கு இன்னும் ஒர் எடுத்துக் காட்டு. உணர்ச்சிகளை மிக நளினத்தோடு பெண்மை கலந்து காட்டுவதில் ஆகட்டும், ஆக்ரோஷமாகச் சண்டைப் போடுவதில் ஆகட்டும் அவர் காட்டும் முக பாவங்களிலும் உடல் மொழியிலும் நம்மை மெய் மறக்கச் செய்கிறார். அவர் பாதி காஷ்மீர இஸ்லாமியராக வருவதற்கு அவர் முகவெட்டும் நிறமும் கை கொடுக்கிறது. அவர், உன்னைக் காணாமல் பாடலுக்கு ஆடும் போது எத்தனை பெரிய கலைஞரை தமிழ்நாடு பெற்றிருக்கிறது என்ற பெருமிதம் தான் வருகிறது. He is a personification of one dedicated to art!

படத்தில் சண்டைக் காட்சிகள் தத்ரூபமாக அமைந்துள்ளன. இந்தப் படத்தின் அஸ்திவாரமே நவீனப் போர் முறைகள் தான். அதனால் இந்தப் படத்தின் நம்பகத் தன்மைக்கு ஸ்டன்ட் இயக்குநர் மிக முக்கியக் காரணம். ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் லீ விடகர் க்ளைமேக்ஸ் ஸ்டண்டை இயக்கியுள்ளார்.

படத்தில் சில கேள்விகளுக்குப் பதில் தேவை. அல் குவைதா என்பது மிகப் பெரிய தீவிரவாத இயக்கம். அதன் உள்ளே ஊடுருவது என்பது லேசான விஷயமா? உளவாளிக் கதை என்றால் அதன் அடித்தளம் அந்த உளவாளி எப்படி பகைவன் முகாமுக்குள் ஊடுருவிகிறான் என்பதில் தானே ஆரம்பிக்க வேண்டும்?  தமிழ் தெரிந்த முஸ்லிமாக இருந்தால் சேர்த்துக் கொண்டு விடுவார்களா? கல்லூரியில் பிகாம் வகுப்பில் சேருவது போல சுளுவாகச் சேர்ந்து விடுகிறார் கமல்ஹாசன். அடுத்து எப்படி பிரிந்து வருகிறார் என்றும் புரியவில்லை. அந்த இயக்கத்தில் சேர்ந்து அவர்களின் பயிற்சிகளில் தேர்ச்சி பெற்ற பின் ஒருவன் எவ்வாறு பிரிந்தான் என்பதும் கதைக்கு மிகவும் அவசியம். அவர்கள் அப்படி பிரிந்து சென்றவனை சும்மா விட்டு விடுவார்களா?

9/11 Twin Tower அழிப்பிற்குப் பிறகு இஸ்லாமியர்கள் தீவிரவாத இயக்கத்துடன் தொலைதூரத் தொடர்பு இருந்தால் கூட அமேரிக்கா உள்ளே நுழைவது கடினம். வில்லன் ஒமார் ஒசாமா பின் லாடனுக்குக் கீழ் உள்ளவருக்கு அடுத்த நிலையில் இருப்பவராகக் காட்டப்படும் தீவிரவாதி. அவனும் அவன் சகாக்களும் எப்படி நியுயார்க் நகரில் நுழைந்து சர்வ சாதரணமாக உலா வருகிறார்கள்?

கதாநாயகி கமலஹாசனைத் திருமணம் செய்து கொள்வது அமெரிக்கா வந்து படிப்பதற்காக என்று சொல்லப் படும் காரணம் இன்னொரு சரியாக் இல்லை. அவர், தானே ஸ்டூடன்ட் விசாவில் வருவதற்கு என்ன தடை? மேலும் கமல்ஹாசன் எவ்வளவு வருடங்களாக அமெரிக்காவில் இருக்கிறார், அவர் மறைந்து வேறு வாழ்க்கை வாழ, பூஜா குமார் பாத்திரத்தை மணப்பது எந்த விதத்தில் உதவுகிறது போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை.

கிளைமேக்சில் அலைபேசி மூலம் பாம் ட்ரிகர் ஆகாமல் இருக்க microwave ovenஐ அந்த போன் மேல் கவுத்து வைக்கிறார் பூஜா குமார். சாக்கெட்டில் இருந்து ப்ளக்கை பிடுங்கி கவுத்து வைக்கிறார். Engineers correct me if I am wrong, won’t the microwave oven be just a metal/plastic box covering the cell phone if it is not connected to electricity and if so how will it stop the detonation?

ஆண்ட்ரியா கதாப்பாத்திறம் பாகம் இரண்டிற்குத் தேவையோ என்னவோ, ஆனால் இந்தக் கதையில் அவர் பாத்திரம் கதைக்குத் தேவையாக இல்லை. அவருக்குப் படத்தில் ஆண்ட்ரியா நடிக்க வேண்டும் என்று இருந்தால் பூஜா குமார் பாத்திரத்திற்கு அவரைப் போட்டிருக்கலாம். பூஜா குமாரின் கொடுமையான தமிழ் பேச்சில் இருந்தாவது நமக்குக் கொஞ்சம் விடுதலைக் கிடைத்திருக்கும்.

ஒரு இடத்தில் ironical ஆக என் மனைவியின் முன் அம்மாவைத் திட்டாதே என்று கமல்ஹாசன் ஒரு வசனம் பேசுவார். அம்மா இந்தப் படத்திற்குத் தடை விதித்ததுக் கூட ஒரு வகையில் நன்மை தான். பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியுள்ளது. பெங்களூர் போக ஆறு மணி நேரம், வர ஆறு மணி நேரம். அங்கே திரை அரங்கில் இரண்டரை மணி நேரம், ஒரு  மாரத்தான் மாதிரி பார்த்து விட்டு வந்தோம். இந்த நெகடிவ் பப்ளிசிடி படத்தில் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

கமல்ஹாசன் ஆகச் சிறந்த ஒரு நடிகர். இயக்குநர், தயாரிப்பாளராக அந்த அளவு இல்லை.

All said, it is a must watch movie!

PS : Engineers have confirmed that a micro wave oven with out being electrically connected will still prevent the signals from being received. So Kamalahasan has done his research thoroughly in that area!