திரு SKP கருணா அவர்கள் ஏற்பாடு செய்திருந்த Dialogue என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு பெரும் வாய்ப்பு எனக்கும் என் கணவருக்கும் கிட்டியது. இடம்: அண்ணா சாலையில் உள்ள புக் பாயிண்ட். நேரம் ஞாயிறு (6.10. 2013) மாலை 6 மணி. ஒரிங்கிணைப்பாளர்கள் பவா செல்லத்துரை, SKP கருணா. மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நல்ல ஆதரவுடன் நடைபெற்ற நிகழ்ச்சி. இதை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் வந்து கலந்து கொண்டவர்கள் சார்பாக நன்றி கூறிக் கொள்கிறேன்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மிஷ்கினின் புதிய படம். பல விதங்களில் சிறப்பு வாய்ந்த படமாக, உலகத் தரத்தில் உள்ள படமாக, பாராட்ட வேண்டிய ஒரு படமாக வந்துள்ளது. இசைஞானி இளையராஜாவின் பெயர் முன்னணி இசை என்ற பெயருடன் முதன் முதலில் டைட்டிலில் இடம் பெற்றிருக்கிறது. இளையராஜாவையும் வைத்துக் கொண்டு ஒரு பாடல் கூட படத்தில் வைக்காமல் துணிச்சலாகப் படம் எடுத்திருப்பது இன்னொரு சிறப்பாம்சம். படத்தில் அச்சுப் பிச்சு காமெடி, குத்துப் பாட்டு ஹீரோயிச சண்டைகள், கதாநாயகி, வெளி நாட்டில் டூயட் பாடல், எதுவுமே இல்லாமல் வந்துள்ள ஒரு படம் இது. கதை சொல்லும் விதம் அலாதியாக இருந்தது. இந்தப் படத்தை ட்விட்டரிலும் பேஸ் புக்கிலும் பலரும் பாராட்டுவதைப் பார்த்து கருணா அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு உடனடியாக ஏற்பாடு செய்தார்கள். இது மாதிரி பல கலந்துரையாடல்களைப் பல வருடங்களாக டயலாக் என்ற அமைப்பின் மூலம் இவர் திருவண்ணாமலையில் செய்து வந்திருக்கிறார் என்று இந்த நிகழ்ச்சியின் போது எங்களுக்குத் தெரியவந்தது. ஆனால் சென்னையில் இதுவே முதல் முறை. மேலும் பத்திரிகை அடிக்காமல், இணையத்தின் மூலமே அழைப்பு அனுப்பி மிகக் குறுகியக் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டும் அரங்கம் நிரம்பி வழிந்தது அவரின் ஒருங்கிணைப்புச் சாதனைக்குக் கிடைத்த வெகுமதி.
ரொம்ப அருமையாக கேக்கும், தேநீரும், காப்பியும், நிகழ்ச்சிக்கு முன்னாடி வழங்கப்பட்டது. அரங்கம் குளிர்விக்கப் பட்ட ஒன்று. நாற்காலிகளும் மேடையும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன. உட்கார இடமில்லாமல் 50க்கும் மேற்பட்டோர் நின்றுக் கொண்டு நிகழ்ச்சியைப் ரசித்தனர். ட்விட்டர் நண்பர்கள் எனக்குத் தெரிந்த வரை, @ivedhalam @thirumarant @jill_online @Nattu_G @amas32 @n_shekar @LathaMagan @ammuthalib @yathirigan @iKaruppiah @luckykrishna @ChittizeN @get2karthik @kabuliwala @sanakannan வந்திருந்தனர். விட்டுப் போன ட்வீட்டர்கள் பெயர்கள் சொன்னீர்களானால் இந்தப் பதிவில் சேர்த்து விடுவேன்.
பவா செல்லத்துரை அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பத்து நிமிட எழுச்சிப் பாடல்களுடன் நிகழ்ச்சித் தொடங்கியது. பின் கருணா, மிஷ்கின், ஓவியர் மருது, எழுத்தாளர், CBI ஆபிசரகா இந்தப் படத்தில் வரும் ஷாஜி, சிறு பெண் சைத்தன்யா, விலை மாதுவாக நடித்த ஏஞ்சல் க்லேடி, மருத்துவ மாணவனாக நடித்த ஸ்ரீ மேடைக்கு அழைக்கப் பட்டனர். மிஷ்கின் வரும் பொழுது எழுந்து நின்று கைத்தட்டி அனைவரும் மகிழ்ச்சியையையும் பாராட்டுதல்களையும் அவரிடம் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடாகிறது என்று தெரிந்த உடனே எனக்கும் என் கணவருக்கும் மிஷ்கினுக்கு இந்த கலந்துரையாடலில் ஏதாவது ஒரு சின்ன பரிசு கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு கலைஞனுக்குப் பணமோ பதவியோ பெரிசில்லை. அவனைப் பாராட்டிப் புகழும் ஒரு சொல்லுக்கே அவன் ஆசைப் படுகிறான். அதனால் தான் சிறு விழாவும் அவனுக்குப் பெரும் அங்கீகாரமாக விளங்குகிறது. பலதும் யோசித்து, சட்டென்று இந்த எண்ணம் என் மனதில் வந்தது. அவர் இளையராஜாவின் இசைத் தொகுப்பை CDக்களாக இலவசமாக (1000 CD) அளித்தார். அதில் அவர் ராஜாவுடன் இருக்கும் ஒரு புகைப்படம் பேஸ் புக்கில் இருப்பதைப் பார்த்து அதை போஸ்டராகப் பெரிய சைசில் பிரிண்ட் செய்தோம். அதன் கீழ் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படத்தின் தலைப்பையும் போட்டு, உலகத் தரம் வாய்ந்த படங்களைத் தருவதற்கு எங்கள் பாராட்டுகள் என்ற வாசகத்தையும் எழுதி அதன் கீழே கையழுத்து போட இடமும் விட்டிருந்தோம். அரங்கத்தில் வந்திருந்த ட்வீட்டர்களிடமும் மற்றவர்களிடமும் கை எழுத்துக்களை வாங்கி பின் கையோடு கொண்டு சென்றிருந்த பிரேமில் போட்டு அவரிடம் கொடுக்கக் காத்திருந்தோம்.
முதலில் கருணா அனைவரையும் வரவேற்றுப் பேசினார், எப்படி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தோம் என்று சுருக்கமாக சொன்னார். அவருக்கும் மிஷ்கின்னுக்கும் நெருக்கமான் நட்பு பல வருடங்களாக இருந்திருப்பது அவரது பேச்சிலிருந்து தெரிந்தது.
வந்திருந்தவர்களில் இருந்து இணையப் பதிவாளர்கள் பலரை பவா செல்லத்துரை வரிசையாகப் பேச அழைத்தார். அவருக்குத் துணையாக அவர் துணைவியார் எழுத்தாளர்/ மொழிபெயர்ப்பாளர் ஷைலஜா உதவியாக இருந்தார். நிறைய பேர் தங்களுக்குப் படத்தில் பிடித்தது, அல்லது கண்ட குறைகள் இவற்றை தெளிவாகப் பேசினார்கள்.
இந்தியா டுடே நிருபர் கவின் மலர் மிஷ்கினை நிறைய முறை பேட்டி எடுத்தவர் என்ற முறையிலும் அவர் சமீபத்தில் எடுத்த பேட்டி இன்று பத்திரிகையில் வருகிறது என்பதாலும் அவரும் பேச அழைக்கப்பட்டார். அவர் ரொம்ப அற்புதமாகப் பேசினார். அவர் பேச்சின் நடுவே திருநங்கைப் பாத்திரம் வெகு சிலரால் மட்டுமே திரைப் படங்களில் நல்ல முறையில் காண்பிக்கப் படுகிறது என்று சொன்னார். திரைப்படம் முடிந்ததும் நடித்தவர்கள் பெயர்கள் வரும் பொழுது ஏஞ்சல் க்லேடியின் பெயருக்கு முன் தேவதை என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து அவர் வண்டியில் வீடு போய் சேரும் வரை அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்துக் கொண்டே இருந்ததைப் பகிரும் பொழுது அவர் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கி விட்டார். பார்ப்பவர் பலரின் மனத்தையும் அது வெகுவாகப் பாதித்தது.
ட்ராட்ஸ்கி மருது அவர்களின் அருமையான அனுபவ பகிர்வு அடுத்து வந்தது. எப்படி திரைப்படம் என்பது ஒரு visual media, அதை சரியாகக் கையாளத் தெரிந்தவர்கள் வெகு சிலரே, அதில் மிஷ்கின் ஒருவர் என்று சிறப்பாக உரையாற்றினார். நீண்ட உரை, ஆனால் மிகவும் கருத்து செறிவானது.
அவருக்கு அடுத்து என் கணவர் பேசினார். அவரும் படத்தின் நிறைகளையும், அதில் நடித்தவர்களின் திறமையை வெளிக் கொண்டுவந்த மிஷ்கின்னையும் பாராட்டினார். நல்ல படங்கள் எடுக்கும் போது அவை கமர்ஷியலாக வெற்றிப் பெற்றால் தான் இன்னும் நிறைய படங்கள் அது போல தர முடியும் என்றும் கூறனார். பிறகு நானும் மேடைக்குச் சென்று அந்த பிரேமில் போடப்பட்ட வாழ்த்துப் போஸ்டரை அவருக்கு வந்திருந்தவர்கள் சார்பாகப் பரிசளித்தோம். அதைப் பெற்றுக் கொள்ளும் போது என் காலையும் என் கணவர் காலையும் தொட்டு வணங்கி நெகிழ்த்தி விட்டார். அவரை அன்புடன் அனைத்துக் கொண்டு, அருகில் இருந்த சைத்தன்யா, ஏஞ்சல் க்லேடி, ஸ்ரீ இவர்களை அரவணைத்துக் கொண்டு என் பாராட்டுதலையும் அன்பையும் தெரிவித்துக் கொண்டேன்.
ஸ்ரீ பேசினார், சின்னக் குழந்தை சைத்தன்யா அவ்வளவு அழகாகப் பேசியது. எப்படி தன்னை படப்பிடிப்புத் தளத்தில் அனைவரும் அன்புடன் நடத்தினர் என்று அந்த சிறியவள் பெரியவள் போல சொன்னாள். ஏஞ்சல் க்லேடி பேசியது மிகவும் அருமையான் ஒரு பகிர்வு. தன்னை எப்படி மிஷ்கின் தன் குழுவில் ஒருவராகப் பிணைத்துக் கொண்டு எந்த வேறுபாடும் காட்டாமல் ஒரு பெண்ணை நடத்துவது போல நடத்தினார் என்று கூறினார். எப்பொழுது அவர் வந்து அமரும் இடத்தில் எந்த சலசலப்பும் இல்லாமல் இருந்தால் மட்டுமே அவர்களை நாம் ஒருவராக ஏற்றுக் கொள்கிறோம் என்பதை மிஷ்கினிடம் தான் கண்டேன் என எடுத்துச் சொன்னார்.
தங்க மீன்கள் ராம் மிஷ்கின் பேசுவதற்கு முன் பேசினார். எப்படி இணைய தளத்தில் சொல்லப் படும் கருத்து வேகமாகப் பரவி படங்களின் வெற்றியை நிர்ணயிக்கிறது என்றும் மிஷ்கின்னுடன் உள்ள தன் நட்பைப் பற்றியும் பொதுவாக இன்றைய சூழலில் எப்படி நல்ல படங்கள் விலை போகாமல் இருக்கும் துன்பத்தையும் சொன்னார். ரொம்ப நல்ல உரை.
கடைசியல் மிஷ்கின் மைக்கைப் பிடித்தார். எல்லோரையும் ஒரு பிடி பிடித்தார். ஒரு படம் எடுத்துப் பாருங்கய்யா அதன் வலி என்னன்னு உங்களுக்குத் தெரியும் என்று ஆரம்பித்துத் தன ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்தார். விமர்சனம் செய்யுங்கள் ஆனால் விமரிசனங்களால் படத்தைக் கொல்லாதீர்கள், எங்களுக்கும் கொஞ்சம் புத்தி இருக்கு என்று நம்புங்கள் என்றார். “நீங்களே இவ்வளவு லாஜிக் பாக்கும்போது…எடுத்த எனக்கு தோன்றியிருக்காதா? எனக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு என்றார் கோபமாக. மேலும் பிடிக்கவில்லையென்றால் தாமதமாக விமரிசனம் செய்யுங்கள், படத்தின் வியாபாரம் உங்கள் ஒரு வரி விமர்சனத்தினால் பாதிக்கப்படுகிறது. இரவு பகல் உழைத்துப் படம் எடுக்கிறோம், நிறைய ஆராய்ச்சி செய்கிறோம். 108 க்கு போன் செய்திருக்கலாமே என்பது எல்லா விமர்சகர்களும் வைக்கும் குற்றச்சாட்டு. அது எனக்குத் தொன்றியிருக்காதா? என் assistant directors சொல்லியிருக்க மாட்டார்களா? குண்டடிப்பட்டு கிடக்கும் அவன் நிலையை அந்த மருத்துவ மாணவன் கணித்து ஆம்புலன்ஸ் வரும் வரை தாங்க மாட்டான் என்பதை உணர்ந்தே அவன் செயல் படுகிறான் என்று விளக்கினார். ஸ்ப்லினாக்டமி பற்றி 3 மாதம் ஆய்வு செய்தும் 30 மருத்துவர்களைக் கலந்தாலோசித்தும், அந்தப் பகுதியை ஓர் மருத்துவரை வைத்தே இயக்கியதையும் சொன்னார். இந்த மாதிரியான படங்களுக்கு ஆதரவளியுங்கள். ஒரு ஓட்டை படத்தில் இருக்கும் லாஜிக் குறைபாடுகளைக் கண்டுக்காமல் அந்த படத்தை அமோக வெற்றிப் படமாக ஓட செய்கிறீர்கள், அதே என் போன்றும், ராம் போன்றும், பாலா போன்றும் எடுக்கும் படத்தில் உள்ள சிறு தவறுகளை பூதக் கண்ணாடி மூலம் பெரிது படுத்துகிறீர்கள் என்று குறைப் பட்டுக் கொண்டார். தங்கமீன்களில், ராம் எவிட்டா மிஸ் வீட்டுக்குச் செல்லும் காட்சிக்கு நிகரான இன்னொன்றை நூறு வருடமானாலும் யாராலும் எடுக்கமுடியாது என்று கூறினார்.
படம் துவக்கத்துல முதுகுல சிலுவையை சுமந்தவன்… முடிவுல நெஞ்சுல சுமக்கிறான்…இத எத்தன பேரு கவனிச்சீங்க என்று கேட்டார். பாட்டில்லாமல் புரடியூசரிடம் கதை சொல்லிப்பாருங்கள்..செருப்பால் அடிப்பார்கள். பாட்டு இல்லாம் ஒரு படம் எடுத்ததாலே இன்னும் நிறைய இயக்குனர்/தயாரிப்பாளர்களுக்கு இந்த செயல் ஒரு முன்னுதரணமாக இருக்கும், அதை நீங்கள் பாராட்ட வேண்டும் என்று சொன்னார். அந்த சமயத்தில் ராஜாவைப் பற்றிப் பேசும் போது வந்த உரையாடலை சொல்லும் பொழுது அப்பா என்று ராஜாவை அழைப்பார் என்று தெரிந்துக் கொள்ள முடிந்தது. ராஜாவே சொன்னாராம், இப்படி ரிஸ்க் எடுக்காதே, ரெண்டு பாட்டாவது வை என்றாராம். பின் இவர் பிடிவாதத்தைப் பார்த்து எப்படியோ போ என்று சொல்லிவிட்டாராம் 🙂
ஒரு குழந்தையாகப் படத்தைப் பார்க்கச் செல்லுங்கள், ஒரு சைண்டிஸ்டாகப் போகாதீர்கள் என்றார். ”சினிமா என்பது possible vs probable… possibleஆ என்பதை தான் நான் கவனத்தில் கொள்கிறேன். Probable என்றாலே போதும்…ஆபரேஷன் பண்ணவன் உடனே நடப்பது possible இல்ல ஆனா probable. இதை ஒரு டாக்டரிடம் கேட்டு உறுதி செய்துகொண்டபின் தான் அந்தமாதிரி எடுத்தேன. இது ஒரு பூ..இதை மிதிச்சிடாதீங்க என்றார். அவர் நந்தலாவின் தோல்வியினால் மிகவும் மனம் நொந்து இருப்பது ரொம்பத் தெளிவாகத் தெரிந்தது.
Oct 07, 2013 @ 08:10:28
எப்டிமா ஒரு வரி உடாம கவர் பண்ணீங்க? ரெக்கார்ட் பண்ணீங்களா?
நல்ல ரீகேப்.
Oct 07, 2013 @ 08:13:07
no, no did not record 🙂 thanks 🙂
Oct 07, 2013 @ 08:27:24
So nice..
Oct 07, 2013 @ 08:48:34
சிறந்த இயக்குனரும் தீவிர ரசிகரும் !
படத்தை பார்த்து, ரசித்து, பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, மிஷ்கின் அவர்களுக்கு ஒரு அழகான பரிசையும் அளித்த உங்களுக்கும் சேகர் சாருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
உங்களது வர்ணனையும் படங்களும் அருமை. நன்றி 🙂
ஸ்ரீவத்ஸன்
Oct 07, 2013 @ 08:50:07
//விலைமாதுவாக நடித்த ஏஞ்சல் க்ளாடி// படத்தில்,அவர் விலைமாது-வாக நடிக்கவில்லை.திருநங்கை மட்டும்தானே..?
Oct 07, 2013 @ 12:50:40
போலிஸ் கேட்கும் கேள்விக்கு அவர் அவ்வாறு பதில் அளிப்பார். திருநங்கையும் தான்.
Oct 07, 2013 @ 09:14:49
நேர்ல கலந்துக்காத குறைய போக்கின மாதிரி இத படிக்கும்போது…. எவர் மீதும் எந்த விமர்சனமும், பதிலும் வைக்காமல் நடந்ததை மட்டும் எழுதியிருப்பது நன்று 🙂
Oct 07, 2013 @ 09:26:03
அருமையான பதிவு..சுருக்கமா..அதேசமயம்..நடந்த அவ்ளொ அம்சங்களையும் அம்சமா தொட்டுட்டிங்க..! நன்றி!
Oct 07, 2013 @ 09:30:08
நல்ல பதிவு! ஒரிங்கிணைப்பாளர்கள் என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் என்று மட்டும் மாற்றி கொள்ளுங்கள். Advance apologies!
Oct 07, 2013 @ 09:31:02
//ஒரு குழந்தையாகப் படத்தைப் பார்க்கச் செல்லுங்கள், ஒரு சைண்டிஸ்டாகப் போகாதீர்கள் என்றார். ”சினிமா என்பது possible vs probable… possibleஆ என்பதை தான் நான் கவனத்தில் கொள்கிறேன். Probable என்றாலே போதும்…ஆபரேஷன் பண்ணவன் உடனே நடப்பது possible இல்ல ஆனா probable. இதை ஒரு டாக்டரிடம் கேட்டு உறுதி செய்துகொண்டபின் தான் அந்தமாதிரி எடுத்தேன. இது ஒரு பூ..இதை மிதிச்சிடாதீங்க என்றார்.//Short and well put!
//திருநங்கை என்று தனியாகச் சொல்லாதீர்கள். அவர்களும் பெண்கள்தான். பெண்கள் என்றே அழையுங்கள் என்றார். பெண்களை விடவும் மென்மையான இதயம் கொண்டவர்கள் அவர்கள் என்றார்.//True that! and he spoke my mind.Why and what is the need that they have to be addressed differently?
//அவர் ராஜாவுடன் இருக்கும் ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் இருப்பதைப் பார்த்து அதை போஸ்டராகப் பெரிய சைசில் பிரிண்ட் செய்தோம். அதன் கீழ் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படத்தின் தலைப்பையும் போட்டு, உலகத்தரம் வாய்ந்த படங்களைத் தருவதற்கு எங்கள் பாராட்டுகள் என்ற வாசகத்தையும் எழுதி அதன் கீழே கையழுத்து போட இடமும் விட்டிருந்தோம்.அரங்கத்தில் வந்திருந்த ட்வீட்டர்களிடமும் மற்றவர்களிடமும் கை எழுத்துக்களை வாங்கி பின் கையோடு கொண்டு சென்றிருந்த பிரேமில் போட்டு அவரிடம் கொடுக்கக் காத்திருந்தோம்// Such a naice way to recognize an artist.Happy and Hats-off to you for that thought 🙂
Oct 07, 2013 @ 12:51:58
thank you 🙂
Oct 07, 2013 @ 10:10:11
நீங்க நிகழ்ச்சிக்குப் போய்ட்டு வந்தாப்போதும் நாங்கக்கெல்லாம் போனா மாதிரி. :)) நன்றிங்க!
Oct 07, 2013 @ 11:35:45
nandri 🙂
Oct 07, 2013 @ 10:16:27
உண்மைதான். கிண்டலும் கேலியுமாய் இணைய தளங்களில் செய்யப்படும் விமர்சனங்கள் அவர்களை வியாபார ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கச் செய்ய வாய்ப்பு உண்டு. ஒவ்வொருவருக்கும் அவர்களால் தனிப்பட்ட முறையில் பதிலளிக்க முடியாது; அமைதியாக இருந்துவிட்டால் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதாகிவிடும். சிக்கல் தான்.
Their stake is great ; ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
என்றாலும், விமர்சனம் தவிக்க முடியாதது; தவிர்க்கக் கூடாததும் கூட !
படம் திரையிட்டு நான்கு நாட்களுக்கப் பிறகு விமர்சனம் எழுதலாம். கூடுமானவரை ஆக்கப் பூர்வமானதாக இருக்கட்டும்.
இல்லையேல், இணைய விமர்சனங்களும் விமசனத்திற்கு உள்ளாகலாம்!
Oct 07, 2013 @ 11:36:47
இதே தான் அவர் எண்ணமும். சரியாச் சொல்லியிருக்கீங்க.
Oct 07, 2013 @ 10:19:18
மிக நல்ல பதிவு. நிகழ்ச்சியை நேரில் முழுமையாக ரசித்த உணர்வு ஏற்படுகிறது. நன்றி
Oct 07, 2013 @ 12:52:26
nandri 🙂
Oct 07, 2013 @ 10:34:03
Well written, Amma :)) Nice!
Oct 07, 2013 @ 10:40:33
நிகழ்ச்சியை நேரில் பார்த்த திருப்தி அம்மா, கண்டிப்பாக இந்தப் படைப்பை இதுவரை பார்க்காதவர்களும் ஆராதிக்க வேண்டும்.
Oct 07, 2013 @ 13:00:23
nandri 🙂
Oct 07, 2013 @ 10:45:37
Super…..I am not getting word to appreciate you. Your are good in keep the flow. Keep it up.
SUPER
Oct 07, 2013 @ 12:59:44
Thank upu, you encouraged me to write this post 🙂
Oct 07, 2013 @ 11:50:57
அருமை ..
Oct 07, 2013 @ 12:01:21
நானே நேரில் வந்து கலந்து கொண்டது போல் இருந்தது. நல்ல கோர்வையா புகைப்படங்களுடன் மிகைபடாமல் வர்ணித்துள்ளீர்கள்.வீட்டைக்கட்டி பார், கல்யாணத்தை கட்டி பார் என்பது போல, படத்தை எடுத்து பார் என்பதும் ஒன்றே. எல்லோரையும் திருப்தி செய்ய முடியாது. பல சிரமங்கள், பல காம்ப்ரமைஸ்கள். கண்டிப்பா பாராட்டியே ஆக வேண்டும். கருணா அவர்களுக்கும் உங்களின் கண்ணியமான இதய பூர்வமான பரிசுக்கும், தங்களின் இந்த பதிவுக்கும் நன்றி நன்றி நன்றி. வாழ்க வளமுடன்.
Oct 07, 2013 @ 12:53:02
Thank you 🙂
Oct 07, 2013 @ 12:25:24
மிக நல்ல பதிவு. நிகழ்ச்சியை நேரில் முழுமையாக ரசித்த உணர்வு ஏற்படுகிறது. நன்றி
Oct 07, 2013 @ 12:28:44
அருமையான பதிவு. It gave a vicarious joy of being there in person. மிஷ்கின் உடைய ஆதங்கம், மிகவும் நியாயமானது. இவர் மட்டுமல்ல, பிறரும் இதனால் பாதிக்கப்பட்டிருப்பது நிதர்சனம். குறைகள் இல்லாத நிறைகள் என்று ஏதேனும் உண்டா? 4 குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்துவிட்டு ஏதேதோ சொல்லுவதைப் போலத் தான், நம் அனைவரின் பார்வையும், கண்ணோட்டமும்.
குறைகளைச் சொல்லவும் ஒரு பாங்கு இருக்கிறது. At times, criticism is acrid, scathing, and outright patibulating, which makes one wonder, whether any of these animadversions were constructive in the first place!
பாராட்டோ, குறையோ – அளவாகவும், பாங்குடனும், பாந்தமாகவும் இருப்பது, அதைச் சுட்டிக்காட்டுபவரின் பெருமைக்கு அழகாக அமையும்.
இது நொள்ள என்பதையே இன்னும் கனிவாகவும், பிறரை discourage செய்யாத வகையிலும் சொல்வது என்பது ஒரு கலை.
குறையோ, நிறையோ, அதற்கு ஒரு காரணியை மிகைப்படுத்தாமல் சொல்லிவிட்டு, “இதனால் இது நன்றாக இருந்தது” என்றோ, அல்லது, “இந்த இடங்களில் சற்றே இவ்வகையான குறைகள் இருந்தாலும்…” என்பது போன்ற euphemismகள் எல்லாம் கையாளப்படலாம்.
திருவள்ளுவர் இதைத் தான் தன்னுடைய 100வது குறளில் அருமையாகச் சொல்லிவிட்டு போனார் போலும்:
இனிய உளவாக இன்னாதக் கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று.
இதனாலேயே தான், நான் கீச்சுலகிலும், வலைத் தளத்திலும், திரைப்படங்கள் குறித்து எவ்வகை விமர்சனங்களையும் வாசிப்பதில்லை. Either, there is a “halo bias” or a “negativity bias” that takes the simple pleasure of watching a movie 🙂
Anyway, that is my 2 cents 🙂
மற்றபடி, அளவான புகைப்படங்கள், எளிமையான விமர்சனம் என்று அட்டகாசமாக பதித்து கலக்கிவிட்டீர்கள் அம்மா.
மிக்க நன்றி.
Oct 07, 2013 @ 12:31:35
Again, context is important to what I said above. ”திருமதி தமிழ்” போன்ற படங்கள் வேறு, “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” போன்ற படங்கள் வேறு.
”திருமதி தமிழ்” போன்ற படங்களை என்னவென்று சொல்லி பாராட்டுவது? Silent-movies மாதிரி, silentஆ இடத்தைக் காலி செய்துவிட்டு போய்விட வேண்டும். அவ்வளவே 😉
Oct 07, 2013 @ 12:58:51
Thank you Rex, very well said. Actually my view of writing reviews has changed after meeting him. My son will always say, don’t say anything harsh ma, it is so difficult to make a movie. But Mysshkin also mentioned that reviewers have to review movies based on the content and not to nitpick on minor matters. So we should take a responsible and balanced approach when reviewing a movie 🙂
Oct 07, 2013 @ 13:29:58
Nice mam., நேரில் முழுமையாக ரசித்த உணர்வு..
Oct 07, 2013 @ 14:26:38
சூப்பர் 🙂 மிஷ்கின் க்கு ஒரு பரிசு கொடுக்கணும் னு தோன்றி அதை மிக அழகாக ரசிகர்கள் கையெழுத்திட்டு கொடுத்த்தது நிஜமாகவே ஒரு அற்புதமான யோசனையும் பரிசும்..பொதுவா அவங்க தான் நமக்கு ஆட்டோகிராப் கொடுப்பாங்க..இது புதுசு..அவருக்கும் இது ஒரு மறக்க முடியாத நெகிழ்வான பரிசாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்.. படம் இன்னும் நான் பார்க்கல மதுரையில் டப்பா தியேட்டர் ல ரிலீஸ் ஆகியது வருத்தம் ..ஒரு ட்விட்டர் /facebook அகௌன்ட் இருந்தால் போதும் படம் எப்படி எடுக்கணும்னு ஆள் ஆளுக்கு க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடறாங்க…பாராட்டறாங்களோ இல்லையோ திட்டறதை மறக்காம செய்யறாங்க…இது போன்ற ஊடகங்களில் பகிரப் படும் கருத்து விரைவில் பரவும் என்பதுவும் உண்மை..அதனால் மிஷ்கின் கோபத்தில் உள்ள நியாயம் புரிகிறது..SKP கருணா ஸார் க்கு ஒரு சிறப்பு வாழ்த்துகள் இது போன்றதொரு அருமையான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு ..நல்லதொரு பதிவும்மா 🙂
Oct 08, 2013 @ 02:38:27
நன்றி உமா 🙂
Oct 07, 2013 @ 16:15:30
hearty to hear the appreciations to a true artist. would be great if someone uploads any video from the event
Oct 07, 2013 @ 16:38:15
திரைப்படத்தைப் பற்றி பேசியதை விட, ஒரு படைப்பாளியாக தனது படைப்பை பார்த்து ஆய்ந்து விமர்ச்சிக்கும் ஒரு கூட்டத்தில் பேசுகிறோம் என்ற ஒரு படபடப்பை பதற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
தனது பிள்ளையை குற்றம் சுமத்துபவனை எப்படி ஒரு தாயானவள் நோக்குவாளோ அதே கண்ணோட்டம். பிழை இல்லை.
ஒரு படத்தைப் பற்றிய கண்ணோட்டம் விமர்ச்சனம் ஆளாளுக்கு வேறுபாடும். இதை சம்பந்தப்பட்ட நபரின் சொந்த கருத்து என்றுதான் கொள்ளவேண்டும். ஒரு தடவை சத்ய ராஜ் “கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு வந்து ரெண்டு நிமிசத்திலே ரெண்டு வருஷம் தயாரான ஒரு படத்தை நல்லா இல்லைன்னு சொல்லிருறாய்ங்க”ன்னு கோபப்பட்டார் (சன் டிவி விமர்ச்சனக்குழு மேல்) என்னா பண்ண.., எல்லோருக்கும் பிடிக்கிறது போல படம் எடுப்பது கஷ்டமாச்சே.
திரைப்படங்களில் லாஜிக் பார்ப்பதென்பது வடிகட்டிய முட்டாளதனம் என்பேன். இந்த உலக கவலைகளை மறக்க கிடைத்த நிமிடங்களை ஒரு திரைப்படம் பார்த்து செலவழிக்க போனால் அங்கும் ஆராய்ந்து கொண்டிருப்பது மடத்தனம்.
போனோமா மகிழ்ந்திருந்தோமா என மகிழ்விப்பதுதான் “பொழுதுபோக்கு” அதை விட்டுவிட்டு ஆராய்ந்து கொள்ளவேண்டும் எனில் அறிவை விருத்தி செய்யும் பொழுதுபோக்கையே செய்யலாம்.
“ஒரு குழந்தையாகப் படத்தைப் பார்க்கச் செல்லுங்கள், ஒரு சைண்டிஸ்டாகப் போகாதீர்கள்”.. சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். நானும் அதையே சொல்கிறேன்.
மூணு மணிநேரம் ஜாலியாக இருக்கணும் என்றால் மூளையை கழற்றி பிரிட்ஜில் வைத்துவிட்டு செல்லுங்கள்.
//ஒரு கலைஞனுக்குப் பணமோ பதவியோ பெரிசில்லை.
அவனைப் பாராட்டிப் புகழும் ஒரு சொல்லுக்கே அவன் ஆசைப்படுகிறான்//
சரியாக கோடிட்டு காட்டிவிட்டீர்கள்.
இதையே இன்னும் காரமாக சொல்லவேண்டும் எனில் படைப்பவனுக்குத்தான் படைத்ததின் வலி புரியும்.
அதை அனுபவிப்பவன் மென்மேலும் அதன்மூலம் அனுபவிக்கத்தான் நினைப்பானே தவிர வேறொன்றும் தெரியாது.
இங்கே படைத்தவனின் படைப்பின் மூலம் அனுகூலம் சொத்து சுகம் புகழ் பெறுபவர்கள் படைப்பாளியின் திரைப்பிம்பங்களான கூத்தாடிகள்.
எவ்வளவு எளிதாக ஒரு படைப்பாளியின் திறமையை இந்த “திரை” என்னும் சாதனம் மூலம் கூத்தாடிகள் கவர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சிரத்தை எடுத்து பங்குகொண்டு ஒரு படைப்பாளியை தகுந்த விதத்தில் பெருமைப்படுத்தியது பெருமையாக இருக்கிறது.
படைப்பாளியின் குடும்பமல்லவா..! 😉
Oct 08, 2013 @ 02:40:32
நன்றி அனானி அவர்களே :-))
Oct 07, 2013 @ 17:53:21
அருமையான பதிவு. மிஷ்கின் போன்று திரையிலும் பெண்களை மதிப்பவர்களை நீங்களும், உங்கள் கணவரும் கௌரவப்படுத்திய விதம் நெகிழ்ச்சி ஊட்டியது.
Oct 08, 2013 @ 02:42:51
மிக்க நன்றி :-))
Oct 07, 2013 @ 18:02:13
Your present (to him) is the super idea 🙂 As usual you writing very well.
//If using songs makes it easier for people to grasp what I’m doing I don’t mind using that language. Think of it as a compromise — or as a method of communicating.// – Mani ratnam
Oct 07, 2013 @ 18:06:04
சும்மா சொல்லணும்ன்னு தோணுச்சு
In 2002
WriterSujata: How do you feel when some films are criticised just because you are Mani Ratnam, without acknowledging their true merits?
Maniratnam : When I go to see Balachander’s work I have expectations that I wont have with a newcomer. Audiences will have the same attitude when they I come to see my work now. I’m not saying that it is easy to take criticism. The ideal thing is to make your film and get away! But if the critic is knowledgeable and unprejudiced, then it’s always an input. With emails and websites the number of critics has grown enormously. Everyone who sees the film can criticise it. You are a lot more accessible now, people can reach you and say you’ve made an excellent or a terrible film. You learn to cope with both.
Oct 08, 2013 @ 02:45:44
அவருடைய gripe என்னன்னா முதல் ஆட்டம் முடிந்தவுடனே இணையத்தில் வரும் ஒரு விமர்சனத்தினால் படம் flop ஆக வாய்ப்புள்ளது, அதனால் கொஞ்சம் டைம் கொடுத்து விமர்சியுங்கள், ரெண்டாவது பாயிண்ட் ரொம்ப தவறு கண்டுப்பிடிக்காதீங்க 🙂
Oct 08, 2013 @ 01:51:54
முதலில் இந்த நிகழ்ச்சியை நீங்களும்,சாரும் அணுகிய விதமே அழகாக இருந்தது.
படத்தை பார்த்து விட்டு வந்தது, ஒருபடைப்பாளியை கவுரவிக்க விதமாக, உங்கள் கையால் செய்யப் பட்ட பரிசினை சுமந்து வந்தது, மேடையில் பாராட்டி பாசிட்டிவாக பேசியது என நீங்கள் இருவரும் ஏற்படுத்திய முன்னுதாரணங்கள் பல!
இது போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் என்னைப் போன்ற பலருக்கு உங்களின் அன்பும்,ஆதரவும் பெருன் ஊக்கம் அளிக்கக் கூடியவை!
என்றும் மறக்க இயலாத நட்பையும், அன்பையும் உங்கள் மூலம் பெற்றுக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!
எஸ்கேபி கருணா.
Oct 08, 2013 @ 02:32:22
மிக்க நன்றி 🙂 இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து ரொம்பப் பிரமாதமாக
நடத்தியதற்கு எங்கல் பாராட்டுகள். We appreciate the fact that you are so
down to earth and value your friendship equally 🙂
Oct 09, 2013 @ 15:35:42
//ஆபரேஷன் பண்ணவன் உடனே நடப்பது possible இல்ல ஆனா probable. //
I think it should be
ஆபரேஷன் பண்ணவன் உடனே நடப்பது probable. இல்ல ஆனா possible
Oct 09, 2013 @ 16:31:41
ரொம்ப நன்றி, நீங்க வந்து படித்துப் பின்னூட்டம் இட்டதற்கு 🙂 நீங்க டாக்டர்,
நீங்க சொன்னா சரியாக இருக்கும். அவர் இமோஷனலாகப் பெசின்னார், நடக்க முடியும்
என்பதை அவர் சொல்ல வந்தார் 🙂