நம்மில் பலருக்கு இவருக்கு அமைதிக்கான நோபெல் பரிசு கிடைத்த அறிவிப்பு வரும் வரை இவர் யாரென்றே தெரியாது. இவருடன் அமைதிக்கான நோபெல் பரிசை சேர்ந்து பெரும் பாகிஸ்தான் குடிமகள் மலாலாவை தெரிந்த அளவு கூட இவரைப் பற்றி தெரியாமல் இருந்தது நாம் வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இவர் குழந்தைகள் உரிமைக்காகப் போராடும் ஒரு போராளி. இதுவரை இவரின் Bachpan Bachao Andolan (Save The Child Movement) தொண்டு நிறுவனத்தின் மூலம் 80,000 குழந்தைகளை 144 நாடுகளில் கொத்தடிமையில் இருந்து இவர் காப்பாற்றி உள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பிறந்தவர் (11.1.1954). பொறியியற் பட்டதாரி. முதுகலை பட்டமும் பெற்றவர். போபாலில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர் 1980 வேலையை விட்டு விட்டு Bonded Labor Liberation Frontன் பொது செயலாளராகப் பணி மேற்கொண்டார். இதே வருடம் தான் தன் தொண்டு நிறுவனத்தையும் ஆரம்பித்தார்.
இவருடைய தலைமையில் 1998 Global March Against Child Labour தொடங்கியது. இது குழந்தைகள் உரிமையை காப்பாற்றவும், கல்வியை அவர்களுக்கு அவசியமான ஒன்றாக அனைவருக்கும் உணர்த்தவும் எடுத்துக் கொண்ட முயற்சி. மேலும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள செய்வதை தடை செய்யக் கோரியும் அதற்கான விழிப்புணர்ச்சியும் இதன் மூலம் ஏற்படுத்த மேற்கொள்ளப் பட்டது. சிறு முயற்சியாக ஆரம்பித்த இவ்வியக்கம் பெரும் வெற்றியைக் கண்டது. 15௦ நாடுகளில் இருந்து இதில் மக்கள் பங்கு பெற்று, நடை பயணம் ஐந்து கண்டங்களிலும் நடந்தது. பங்கு பெற்றவர்கள் கடைசியில் ஸ்விட்சர்லேந்த்தில் வந்து சேர்ந்தனர். அங்கு International Labour Organisation (ILO)ல் குழந்தைகளை பண்டமாக வியாபாரம் செய்வதை தடை செய்ய தீர்மானம் இயற்றப் பட்டு கையெழுத்தாகியது. அது மட்டும் அல்லாமல் 14௦ நாடுகள் அந்தத் தீர்மானத்தை தங்கள் நாட்டின் சட்டமாகவும் எடுத்துக் கொண்டனர்.
குழந்தை தொழிலாளர் பங்களிப்பில்லாமல் உருவாக்கப்படும் கார்பெட்டுகளுக்கு Rugmark என்னும் சின்னத்தை (தற்போது Goodweave) தாமாக முன் வந்து அளிக்கும் முறையை உருவாக்கினார். இதனால் வெளிநாட்டில் விற்பனை ஆகும் பொருட்கள் இந்த இலச்சினைப் பார்த்து வாங்குவது பெருகியது. இதனால் வர்த்தகத் துறையில் social responsibilityயும் பெருகியது.
குழந்தை தொழிலாளர்களால் ஏழ்மை, படிப்பறிவின்மை, அதன் விளைவால் சமூகத்தில் பல தீமைகள் உருவாகின்றன என்பதை பல ஆராய்ச்சிகள் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பெருமை அவரைச் சாரும்.
UNESCO வின் ஒரு முக்கியக் குழுவில் அவர் அங்கத்தினர். கல்வியை அனைவருக்கும் தர வேண்டிய சமத்துவ உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். மேலும் குழந்தைகள் கொடுமைப் படுத்துவதை தடுக்கும் கமிட்டிகளில் அங்கம் வகித்துப் பல நாடுகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றி உள்ளார்.
Millennium Development Goals என்று ஒன்று 2000 வருடம் ஆரம்பிக்கப் பட்டது. அதில் இவர் முக்கிய நிறுவனர். அதன் கொள்கைகள்:
- உணவில்லாமல் கஷ்டப்படும் மக்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பது.
- எல்லாருக்கும் தொடக்கப் பள்ளி கல்வி கிடைக்கச் செய்வது.
- ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலையை உருவாக்குவது.
- குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையைக் குறைப்பது.
- தாயின் உடல் நலத்தை மேம்படுத்துவது.
- எய்ட்ஸ், மலேரியா மற்றும் இதர நோய்களைக் களைவது.
- சுற்று சூழல் பாதுகாப்பு.
- உலக நாடுகளின் ஒத்துழைப்போடு இவற்றை செயல்படுத்துவது.
இவரின் முயற்சியால் இவற்றை செயல் படுத்த பல்வேறு நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இவர் தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். இவரின் சிறிய அலுவலகத்தில் ஒரு சின்ன நோட்டீஸ் பலகையில் இவர் இதுவரை கொத்தடிமைத்தனத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை பிளாஸ்டிக் நம்பர்களில் ஒளிர்கிறது. இன்றைய தேதியில் 80000.
ஆனாலும் இவருக்கு நோபெல் பரிசு கிடைக்கும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். நமது அரசாங்கம் இவருக்கு ஒரு பத்ம விருது கூட இது வரை வழங்கவில்லை. இவரின் அலுவலகம் தெற்கு தில்லியில் ஒரு புழுதி படிந்த தெருவில் உள்ளது. தொலைபேசி அழைப்புகளை அவரே எடுத்து பதில் சொல்கிறார்.அவருடை ஈமெயில் ஐடியை யார் கேட்டாலும் கொடுக்கிறார். பிள்ளைகளைக் காப்பாற்றுவது தன் கடமை, வாழ்கை எனக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த விருது அவரின் சேவைக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய அங்கீகாரம்.
விபச்சாரத்தில் இருந்து சிறு பெண்களை இவர் காப்பாற்றிய பல பொழுதுகளில் இரும்பு ராடுகளினாலும் கழிகளினாலும் தாக்கப்பட்ட விழுப் புண்கள் இவர் உடல் முழுதும் உள்ளன. நம் நாட்டில் குழந்தைகள் வேலைக்குப் போவது எதனால் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார். வயிற்றுக்கு இல்லாத போது பல குழந்தைகள் தாமாகவே பெற்றோர்களுக்கு உதவ பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்கு செல்ல ஆரம்பிக்கின்றன. பின் வேறு வழியில்லாமல் அதுவே தொடர்கிறது.
இன்னொரு வகை உள்ளது, அதில் படித்துக் கொண்டே பெற்றோர்கள் சுமையை குறைக்க பிள்ளைகள் மாலை நேரத்தில் வேலைக்குப் போவது. இந்த வகையை ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். கைலாஷ் இவை அனைத்தையும் உணர்ந்து தகுந்த முறையில் குழந்தைகளுக்கு உதவி செய்கிறார். ஏழை எளியவர்களுக்குக் கிடைத்த கொடை திரு கைலாஷ் சத்யார்த்தி. இறைவனும் இயற்கையும் அவரின் தொண்டுக்குத் தொடர்ந்து துணை புரியட்டும். உலகமெங்கும் குழந்தைகள் மகிழ்ச்சியாக வளரட்டும்.
அமைதிக்கான நோபெல் பரிசை மலாலாவுக்கும் இவருக்கும் இணைந்து கொடுக்கப் போகும் அறிவிப்பு வந்தவுடன் இவர் மலாலாவுடன் கை கோர்த்து சேவை செய்ய தன் இணக்கத்தைத் தெரிவித்து உள்ளார்.
Reference: இணையத்தில் wiki, அவரின் பேட்டிகள்.
Oct 14, 2014 @ 07:31:00
நன்றி. நோபல் பரிசு வாங்கிய கைலாஷ் சத்யார்த்தி பற்றி சுவைபட கூறியுள்ளீர்கள். ஆனா நம் நாடு இவரை கண்டுகொள்ளவில்லையே 😦
Oct 14, 2014 @ 09:05:47
Thanks Sushi for opening my eyes.S Was wondering about this person. Great
Oct 14, 2014 @ 12:00:48
thank you chinnapaiyan and Sukan 🙂
Oct 14, 2014 @ 12:53:45
முழுமையாக இன்றே அறிந்தேன்..உடனே பதிவிட்டமைக்கு வாழ்த்துகள்:) எழுத்துப் பிழைகளை மட்டும் இன்னும் கவனம் எடுத்துக் கொள்ளவும்..:)
Oct 15, 2014 @ 19:18:58
excellent and very informative. Can I share this in some other site? Thanks
Oct 16, 2014 @ 03:22:31
sure, my pleasure 🙂