K.S.ரவிகுமார் திரைக் கதையில் என்றும் சோடை போனதில்லை. அந்தந்த ஹீரோக்களின் ரசிகர்களின் நாடித் துடிப்பை நன்கு அறிந்து ஸ்கோர் செய்பவர். ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பையும் லிங்காவிலும் பூர்த்தி செய்துள்ளார். நான்கு வருடங்கள் கழித்து ரஜினியை திரையில் பார்க்கும்போது நமக்கும் உற்சாகம் பீறிடுவது என்னவோ உண்மை தான் 🙂 அது தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் பெற்று தந்திருக்கிறது.
தாத்தா, பேரன் என்று இரு வேறு பாத்திரத்தில் வருகிறார். வேறு வேறு காலக் கட்டம், சேர்ந்து இரு பாத்திரமும் ஒரே frameல் வருவதில்லை. சோனாக்ஷி சின்ஹா ஒருவருக்கும், அனுஷ்கா ஒருவருக்கும் ஜோடி. இரு ஹீரோயின்களுமே ரஜினிக்கு நன்றாக ஜோடி சேர்கிறார்கள். சோனாக்ஷி சின்ஹா தமிழ் படத்திற்கு அறிமுகம். தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி உருட்டலா அழகா இருக்கிறார். ஹிந்தியில் இருந்து இறக்குமதியாக வித்தியாசமாகத் தெரியவில்லை.
கே.எஸ்.ரவிகுமாரின் பலமே ஒரு படத்தை வெகு விரைவில் முடிப்பது தான். அதை இந்தப் படத்திலும் செய்துள்ளார். முக்கியமாக ரஜினி உடல் நலனில்லாமல் இருந்து பெரிய இடைவெளிக்குப் பின் எடுக்கும் படம், இதற்கு முன் இரண்டு படங்கள அவரை வைத்து ஆரம்பித்து நின்று போனதாலும் மிகவும் விரைவாக எடுத்து முடித்துள்ளார். அதுவே இந்தப் படத்தின் பலவீனமாகவும் ஆகிவிட்டது. பாதி படம் பீரியட் படம். அதற்குத் தகுந்தாற்போல authenticகாக செட்டோ மெனக்கெடலோ அவ்வளவாக இல்லை, அவ்வாறு எடுக்க காலம் அதிகம் ஆகியிருக்கும். ஆனாலும் முடிந்தவரை பழுதில்லாமல் படைத்திருக்கிறார்.
ஷங்கர் பட பிரம்மானடத்தை ரவிகுமார் படத்தில் எதிர்ப்பார்க்க முடியாது. ஆனாலும் இரண்டு டூயட் பாடல்களிலுமே நடனம், செட், வெளிநாட்டு லொகேஷன் ஆகயவை மிகவும் நன்றாக அமைந்துள்ளது. சந்தானத்துடனும் கருணாகரனுடனும் காமெடியில் இயல்பாகக் கலக்கியிருக்கிறார் ரஜினி. படையப்பாவில் நீலாம்பரி சொன்ன “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டுப் போகலை” டயலாக் இந்தப் படத்திற்கும் வெகுவாகப் பொருந்துகிறது 🙂
இசை பெரிய let down. இரண்டு பாடல்கள் மட்டுமே நன்றாக இருக்கின்றன. பின்னணி இசை மட்டும் நன்றாக இருந்திருந்தால் படத்திற்குப் பெரிய வலு சேர்த்திருக்கும்.
ரஜினி முதல் பாதியில் ஒரு பாத்திரத்திலும், இரண்டாவது பாதியில் இன்னொரு பாத்திரத்திலும் கோலொச்சுகிறார்கள். பீரியட் பகுதியில் வரும் ரஜினியின் நடிப்பும் பங்களிப்பும் எனக்கு அதிகம் பிடித்தது. இசை வெளியீட்டு விழாவில் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு என்னால் முடிந்த வரை ரஜினியை இளமையாகக் காட்ட முயன்று இருக்கிறேன் என்று சொன்னார். அவருக்கும் மேக்கப் கலைஞருக்கும் ஒரு சபாஷ்.
க்ளைமேக்ஸில் ஒளிப்பதிவாளர் வெகு சிறப்பாகப் பணியாற்றி நடுவில் கொஞ்சம் தொய்வுற்றக் கதையை நிமிர்த்தி நிறைவு செய்கிறார். நிறைய துணை நடிகர்களின் பங்களிப்பு உள்ளது. அவர்களை எல்லாம் ஒரு சேர நன்றாகக் காட்டியிருப்பது ஒளிப்பதிவாளரின் சாதனை.
படம் நீளம். கொஞ்சம் குறைத்திருக்க வேண்டும். மேலும் பின் பாதியில் சில பல காட்சிகள் வெட்டுப் பட்டிருப்பது தெரிகிறது. அதனால் சில இடங்களில் கதை தெளிவாக இல்லை. எடிடிங்கில் கே.எஸ்.ரவிகுமார் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சிறிது சிறிதாகப் பல குறைகள் உள்ளன. ஆனால் மொத்தத்தில் 6 மாதத்தில் படத்தைத் தயாரித்து வெற்றிகரமாக அளித்த இயக்குநரை கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும்.
ஆனாலும் ரஜினி இனிமேலும் இந்தமாதிரி படங்களில் நடிக்க வேண்டுமா என்று தீவிரமாக சிந்தித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். அவருக்கான நடன அசைவுகள் மென்மையாக இருக்கின்றன, சுற்றி ஆடுபவர்கள் வேகமாக ஆடி அவரும் அப்படி ஆடுவது போல தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அதே போல சண்டை காட்சிகளில் எல்லாம் ஸ்டன்ட் டபுள் தான் அவர் இடத்தை நிரப்புகிறார். மேக்கப்புக்கு நிறைய செலவாகியிருக்கும்.
ரஜினி ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்ப்பார்கள்.
Dec 12, 2014 @ 14:11:00
ரஜினி ப்ராண்ட் படங்களுக்கு தேவா இசை தான் பொருத்தம்
Dec 13, 2014 @ 02:32:07
கரெக்ட் தான் 🙂
Dec 12, 2014 @ 20:24:36
GOOD REVIEW………..
Dec 13, 2014 @ 02:32:27
thank you 🙂
Dec 13, 2014 @ 03:13:26
கிட்டதட்ட என்னோட கருத்தும் அதான் ..நல்ல சாப்பாட்டை பாதி வேக்காட்டில் இறக்கின பீலிங் @i_thenali
Dec 13, 2014 @ 12:25:01
thank you 🙂
Dec 13, 2014 @ 08:29:26
கே.எஸ்.ரவிக்குமார் ஃபார்முலா கொஞ்சமாவது சுமாரா இருக்கும். ஆனாலும் ரஜினி தன்னுடைய பாணியை மாத்திக்கிட்டா நல்லது. இல்லாட்டி லாரி டிரைவர் ராஜாக்கண்ணா மாறிடுவாரு.
Dec 13, 2014 @ 12:24:40
🙂
Dec 13, 2014 @ 08:32:09
வழக்கம் போல் நல்ல நடுநிலை விமர்சனம்! முழுசா மாபியாவா ஆகிட்டிங்கன்னு நல்லாவே தெரியுது 😉
Dec 13, 2014 @ 12:23:32
🙂 😉 😉 😉 அப்படியெல்லாம் இல்லை, நன்றி 🙂
Dec 13, 2014 @ 14:03:06
எனக்கு படத்தில் க்ளைமாக்ஸ் தவிர மற்றவை ஒகே. ரொம்ப சாதரண க்ளைமாக்ஸ் அப்புறம் ரொம்ப அப்பாவி வில்லன். ரஜினி படத்துக்கு வித்தியாசமான படம் அப்படியெல்லாம் எதிர்பார்போட போகமுடியாது. பொழுது போகும் அவ்வளவுதான். படம் பார்த்த பின்னர் சரவணன் பின்னனி இசையெல்லாம் எப்படியிருந்தது ? கேள்வி கேட்ட பின்னர் தான் எனக்கு ஒ…அப்படி ஒன்னு படத்துல இருக்கும்லன்னு யோசிச்சேன். எப்பவும் பின்னனி இசையை கவனிப்பேன் ஆனால் இந்த படத்தில் அதை யோசிக்கவேயில்லை….படம் பார்த்த நேரத்தில் என் பையன் dam பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கவே சரியா போச்சு. என்ன சொல்லுங்க நம்ம ஊர்ல ரஜினி படம் கூட்டத்தோட பார்க்கும் போது சாதாரண காட்டிகளும் சும்மா சுறு சுறுன்னு இருக்கும். இங்கே 8 பேர்கள் மட்டுமே இருந்ததால் அந்த கத்தலையும் கூச்சலையும் ரொம்ப மிஸ் பண்ணினேன்.
Dec 14, 2014 @ 02:54:53
Correct Deva 🙂 Thank you 🙂
Dec 13, 2014 @ 14:23:15
இப்பதான் படம் பார்த்துட்டு உங்க விமர்சனம் படிச்சேன் பெரும்பாலான இடங்களில் ஒத்துப் போகின்றேன் 😉
Dec 14, 2014 @ 02:55:22
ரொம்ப நன்றி பிரபா 🙂
Dec 14, 2014 @ 03:38:21
நன்றி. வழக்கம்போல் நன்றாக சீர்தூக்கி மனதில் பட்டதை விமர்சித்துள்ளீர்கள். இன்னும் படம் பார்க்கவில்லை.
ஒரு நடிகரின் மேல் அளவுக்கு அதிகமான அபிமானமும் வொர்ஷிப்பும் வைத்துவிட்டால், அவர் என்ன செய்தாலும் ரசிகர்கள் ரசிப்பார்கள். அனால் பொதுஜனங்களுக்கு ஒரு காலகட்டத்தில் சலிப்பு ஏற்படுவது இயற்கை. அதுமட்டுமல்ல அந்த நடிகருக்கே ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்பட்டுவிடும். என்னை கேட்டால் ரஜனி ஆன்மிகத்தின் பக்கம் திசை மாறுவது உத்தமம். அதற்கான நேரம் வந்துவிட்டது.
கடைசியாக ஒரு முத்தாய்ப்பா சொன்னீங்க பாருங்க அங்க நிக்கிறீங்க 🙂
“ரஜினி ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்ப்பார்கள்” – ரஜினி ரசிகர்களே….. ஹஹஹஹா:)
நன்றி நன்றி வாழ்த்துகள்
Dec 14, 2014 @ 07:51:36
🙂 🙂 🙂