சிவகார்த்திகேயா! நீங்கள் முழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது! நல்ல கதை தான் ஒரு நடிகனின் முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணி என்று புரிந்து கொண்டு செயல்படுங்கள் இல்லாவிட்டால் கார்த்தி மாதிரி நீங்கள் மாறி விட வாய்ப்புள்ளது.
நடிப்பில், நடனத்தில், மாஸ் அப்பீலில் நல்ல முன்னேற்றம். சிவகார்த்திகேயன் உங்கள் கண்ணில் ஒரு காந்தம் உள்ளது. நல்ல charisma. அதை பயன்படுத்தி வாய்ப்பைத் தவற விடாமல் நீங்கள் முன்னேற வேண்டுமே என்று எனக்கு பதைபதைப்பாக உள்ளது.
முதல் பாதியில் நேர்மையான் கான்ஸ்டபிளாக சுறுசுறுப்பாக, துறுதுறுப்பாக வருகிறார் ஹீரோ. காதல் தோழி ஸ்ரீ திவ்யா. வருத்தப் படாத வாலிபர் சங்கத்தில் இருந்த கெமிஸ்டிரியை விட இப்படத்தில் கொஞ்சம் குறைவே.
பாடல்கள் படு மோசம். இரைச்சல் தான். BGM நன்றாகப் போட்டிருப்பதால் அனிருத் பாஸ் மார்க் வாங்குகிறார். வெளிநாட்டுக்கெல்லாம் போய் டூயட்டை படம் பிடித்திருக்கிறார்கள்.
கதையைக் கோவையாகச் சொல்லவேண்டும் என்று கூட ஒரு இயக்குநருக்குத் தெரியாதா? முதல் பாதியில் சுத்தமாக ஒன்றுமே இல்லை. இரண்டாம் பாதியில் கடைசி 20 நிமிடங்கள் சற்றே சுவாரசியமாக இருந்தது. அதுவும் அரைத்த மாவையே அரைத்து! இப்படி விமர்சிப்பது கூட புளித்துப் போய் விட்டது. கதையில் புது யுக்திகள் திருப்பங்கள் எதுவும் இல்லை. பிறகு பணமும் நேரமும் செலவழித்து ஒருவர் எதுக்குத் திரை அரங்கத்துக்குப் போய் படத்தைப் பார்க்கவேண்டும்?
தனுஷுக்கும் சிகாவுக்கும் இப்படத்தில் மனஸ்தாபம் என்று ஒரு வதந்தி. எதற்கு சண்டையோ தெரியவில்லை. ஆனால் ஏன் இந்த மாதிரி ஒரு படம் எடுத்தீர்கள் என்று ரசிகர்களாகிய நாம் தனுஷுடன் சண்டைக்குப் போகலாம் என்று எனக்குத் தோன்றுகிறது..
எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஏன் மனம் கொத்திப் பறவை கூட, இந்தப் படங்களில் ஏறிய சிவகார்த்திகேயனின் graph இந்தப் படத்தில் இறங்கு முகம். இமான் அண்ணாச்சி நன்றாக செய்திருக்கிறார். அவர் பாத்திரமும் அவருக்கான நகைச்சுவை வசனங்களும் மிக நன்று. பிரபு ஒரு முக்கிய வேடத்தில் வருகிறார். பாவம் வித்யுலேகா ராமன், ஒரு குட்டி ரோல்.
இப்போ புதுசா திரைக்கதை ஆசிரியர்களிடம் கிடைத்திருக்கும் பூமாலை உடல் உறுப்புத் திருட்டு. அதை ஒவ்வொரு படத்திலும் பிச்சி பிச்சிப் போட்டு விளையாண்டு கொண்டிருக்கிறார்கள், at our expense.
படப்பிடிப்பு தேர்தல் முடிந்த கையோடு நடந்திருக்கு என்று தெரிகிறது. சிகா, பிரபு இருவர் விரல் நகங்களிலும் வோட்டுப் போட்ட மை அழியாமல் உள்ளது.
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மான்னு சிவா கார்த்திகேயன் படத்தில் ஒரு இடத்தில் சொல்கிறார். நமக்காக அவரே சொல்லிவிட்டார் என்று வைத்துக் கொள்ள வேண்டியது தான்.
Feb 27, 2015 @ 13:39:04
//பணமும் நேரமும் செலவழித்து ஒருவர் எதுக்குத் திரை அரங்கத்துக்குப் போய் படத்தைப் பார்க்கவேண்டும்?// சி.கா படத்துக்கு கூட முதல் நாளா ? விமர்சனம் கரைக்டு !
Feb 27, 2015 @ 17:00:48
😉
Feb 27, 2015 @ 13:47:45
படத்த அவசரப்பட்டு தியேட்டர்ல பாக்க வேண்டியதில்லைன்னு உங்க விமர்சனத்தப் பாத்தாலே தெரியுது. 🙂
Feb 27, 2015 @ 17:01:04
😉
Feb 27, 2015 @ 13:54:35
ஒரு நல்ல ரசிகை, தான் நேசிக்கும் திரைஉலகத்தில், ஒரு படத்தை பார்த்தவுடன் பாரபட்சமில்லாமல் விமர்சிப்பது மட்டுமல்ல, மிகவும் அக்கறையுடன் சுட்டிக்காட்டியது மிகவும் மெச்சத்தக்கது. உங்க பாணி தொடரட்டும்.
“இல்லாவிட்டால் கார்த்தி மாதிரி நீங்கள் மாறி விட வாய்ப்புள்ளது.”
“எனக்கு பதைபதைப்பாக உள்ளது.”
“இருந்த கெமிஸ்டிரியை விட இப்படத்தில் கொஞ்சம் குறைவே.”
“பாடல்கள் படு மோசம். இரைச்சல் தான்…… . வெளிநாட்டுக்கெல்லாம் போய் டூயட்டை படம் பிடித்திருக்கிறார்கள்”
“அதுவும் அரைத்த மாவையே அரைத்து! இப்படி விமர்சிப்பது கூட புளித்துப் போய் விட்டது.”
“ஆனால் ஏன் இந்த மாதிரி ஒரு படம் எடுத்தீர்கள் என்று ரசிகர்களாகிய நாம் தனுஷுடன் சண்டைக்குப் போகலாம் என்று எனக்குத் தோன்றுகிறது..”
“அதை ஒவ்வொரு படத்திலும் பிச்சி பிச்சிப் போட்டு விளையாண்டு கொண்டிருக்கிறார்கள், at our expense.”
“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மான்னு சிவா கார்த்திகேயன் படத்தில் ஒரு இடத்தில் சொல்கிறார். நமக்காக அவரே சொல்லிவிட்டார் என்று வைத்துக் கொள்ள வேண்டியது தான்.”
… இப்படி ஒவ்வொரு பாராவிலும் என்னை கவர்ந்த வரிகள். பிறர் மனம் புண்படாதபடி சட்டையர் 🙂
நன்றி வாழ்த்துகள்
Feb 27, 2015 @ 17:00:21
நன்றி சின்னைப்பையன் 🙂 என் விமர்சனத்துக்கு இவ்வளவு நல்ல விமர்சனம், நன்றி
Feb 27, 2015 @ 14:35:17
என்னது? நீங்க ஒரு படத்தை நல்லா இல்லைன்னு சொல்றீங்களா? மழை வரப் போகுது..
Feb 27, 2015 @ 16:59:25
🙂 🙂
Mar 21, 2015 @ 11:18:23
அடுத்தவர் மனம் புண்படாமல், கனகச்சிதமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவுரை கூறியுள்ள பாங்கு பாராட்டத்தக்கது. வளர்ந்து வரும் கலைஞர் இதனைப் படித்தால் கண்டிப்பாகத் தடம்புரள மாட்டர் என நம்புவோம்.
Mar 21, 2015 @ 15:29:09
nandri Umesh 🙂