இதை இட்லி என்றால் சட்னி கூட நம்பாது என்று ட்விட்டரில் ஒரு சொலவடை உண்டு. அது போல இதை பேய்ப் படம் என்றால் குழந்தை கூட நம்பாது.
சூரியா இரட்டை வேடம். பேய்களுக்கு வயதாகாது என்று ஒரு நம்பிக்கை போல. அதனால் ஒருவர் இறந்த போது என்ன வயதோ அதே வயதில் பேய்கள் இருப்பதால் ரெண்டு சூரியாவும் இளைஞர்களே! அதை யோசித்த assistant டைரெக்டருக்கு ஒரு ஷொட்டு. அட்லீஸ்ட் வாரணமாயிரம் அப்பா சூரியாவைப் போல ஓல்ட் கெட்டப்பில் பார்ப்பதை தவிர்க்கிறோம்!
நிறைவேறாத ஆசையில் இறந்தவர்கள் ஆவியாக உலாத்துவார்கள் என்ற அடிப்படையில் கதையை எழுத ஆரம்பித்தக் கதாசிரியர், எப்படி ஆரம்பிப்பது, எப்படி முடிப்பது என்பது மட்டும் அல்ல எப்படி கதையை இரண்டரை மணி நேரத்துக்கு இழுத்துச் செல்வது என்பது கூடத் தெரியாமல் திரு திரு என்று விழித்து நம்மையும் தலை சுத்தி உட்கார வைத்து விடுகிறார்.
பிரேம்ஜிக்கு யாராவது இசை அமைக்கவோ இசை arranger பணியோ கொடுத்தால் புண்ணியமா போகும். நடிப்பதை நிறுத்தி விடுவார். எவ்வளவோ செஞ்சிருக்கீங்க பிரேம்ஜி! நடிப்பதில் இருந்து VRS வாங்கி அந்த நல்லதையும் செஞ்சிடுங்க!
வெங்கட் பிரபு பற்றி ஒன்றும் சொல்லாமல் இருப்பதே நான் அவருக்கு செய்யும் பெரும் உபகாரம்.
நகைச்சுவை மருந்துக்கும் கிடையாது. பேய்கள் பண்ணும் சேஷ்டைகள் காமெடி கணக்கில் வரும் என்று வெங்கட் பிரபு நினைத்திருப்பார் போல. சூரியாவுக்குப் படத்துக்குப் படம் அதே மேனரிசம். ஷர்ட்டை பின் பக்கம் தள்ளி விட்டுக் கொள்வது, “நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லியே ஆகணும்” மாதிரி அதே டயலாக் டெலிவரி, பார்த்து அலுத்து விடுகிறது. அப்போ நாங்களும் சொல்லுவோம் இல்ல, “என்ன கொடுமை சரவணன் இது” என்று! (சூரியாவின் இயற்பெயர் சரவணன் என்பது இங்கே நச்சுன்னு பொருந்துது).
க்ளைமேக்ஸில் ஒரே குண்டில் அழகா வில்லனைக் க்ளோஸ் பண்ணியிருக்க முடியும். ஆனால் performance பண்ண முடியாமல் அது என்ன க்ளைமேக்ஸ் என்று யார் சொன்னார்களோ தெரியவில்லை, சூரியா சும்மா கயற்றில் தொங்கி பறந்து பறந்து அடிக்கிறார்!
யுவன் ஷங்கர் ராஜா இசை. சித்தப்பா பிள்ளை என்று தனி அக்கறை ஏதும் காட்டி இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே இரைச்சல். ஐயா கொஞ்சம் practice செய்து formக்கு வாருங்கள். உங்கள் ரசிகர்கள் waiting for you.
நயன்தாராவுக்கு இந்தப் படத்தில் வயது தெரிகிறது. மேக்கப்பில் கவனம் தேவை. ஆனால் ஒன்று சொல்லியே ஆக வேண்டும் 🙂 சூரியா மிகவும் இளமையாக அழகாக இருக்கிறார். ஆனால் பொதுவாக படங்களில் நடனத்தில் ஸ்கோர் செய்கிறவர் இந்தப் படத்தில் பேய்களோடு டேன்ஸ் etcவில் புதிதாக ஏதும் சிரமப்பட்டு நடன அசைவுகள் செய்யவில்லை. அவருடைய அயன், ஆதவன் அஞ்சான் ஸ்டெப்ஸ்களே திரும்பத் திரும்ப ஆடுவது போல ஒரு தோற்றம்.
ஒரு சூரியா சிலோன் தமிழராக வருகிறார். கேனடா, இங்கிலாந்து வாழ் தமிழர்களை கவர் செய்வதற்காக இருக்கலாம். கதைக்கு எந்த விதத்திலும் அது வலு சேர்க்கவில்லை.
சூரியா உங்களுக்கு நிறைய திறமை, வாய்ப்பு, அழகு, அறிவு, வயது, சினிமா பின்புலம் எல்லாம் அமைந்துள்ளது. நடிப்புலகில் சிலருக்கே இந்த மாதிரி அமையும். அடுத்தப் படத்தில் நல்ல கதையையும் இயக்குநரையும் தேர்ந்தெடுத்து சிறந்த ஒரு படத்தை எங்களுக்குத் தர வேண்டுகிறேன். இப்படியே தொடர்ந்தால் உங்கள் fan baseம் வியாபார அந்தஸ்தும் குறைந்துவிடும்.
May 30, 2015 @ 13:06:11
அருமை
“எப்படி கதையை இரண்டரை மணி நேரத்துக்கு இழுத்துச் செல்வது என்பது கூடத் தெரியாமல் திரு திரு என்று விழித்து நம்மையும் தலை சுத்தி உட்கார வைத்து விடுகிறார்.”
படத்தில் ஹாஸ்யம் இல்லாவிட்டால் என்ன, இதோ விமர்சனத்தில் இருக்கிறதே :))
ஸ்டீரோயோ டைப் ஆக்டிங் நிச்சயம் அலுப்பு தட்டத்தான் செய்யும்.
“எகொசஇ” நெஜமாவே நச்சுன்னு பொருந்துது :))
யுவன், நயன்தாராவை பற்றிய வரிகள் கரக்ட்.
கடைசி பாராவில் , ஒரு நிஜமான விமர்சகரின் அக்கறை, ஆதங்கம் வெளிபடுகிறது
நன்றி வாழ்த்துகள் :))
May 30, 2015 @ 16:07:32
இங்க கத்தார்ல 35 ரியால் குடுத்துப் பார்த்தோம் அம்மணி. (1 ரியால் = 17 ரூவா) காதுலயும், கண்ணிலயும் ரத்தம் வராத குறை. புது டைரக்டர்கள் எல்லாம் என்னமாப் படம் பண்ணுறாங்க, வெங்கட் பிரபு மங்காத்தா மாயைலருந்து வெளியே வர மாட்டாரா? அப்படியே வந்தாலும் தம்பியக் கழட்டி வுடுவாரா?
May 31, 2015 @ 03:14:47
நான் இத சொல்லியே ஆகணும் வர வர உங்க விமர்சனம் ஒவ்வொன்றும் புது மொழி நடையில் கிண்டலு எகத்தாளம்னு பின்னிங் 🙂
Jun 01, 2015 @ 02:26:44
நன்றி சின்னப் பையன், உமேஷ், பிரபா 🙂
Jun 01, 2015 @ 09:16:52
நல்ல விமர்சனம். சூர்யா கிட்ட சொன்னது ஒன்னு எடுத்தது ஒன்னுன்னு வெங்கட்பிரபு சொன்னப்பவே யோசிச்சிருக்கனும். பேய்கள் காட்சியையே முழுப்படமா எடுத்திருந்தா பட்டாசா இருந்திருக்கும். வன்முறையைக் கொஞ்சம் குறைச்சிருந்தா நல்லாயிருந்திருக்கும்.
Jun 04, 2015 @ 15:58:59
ஹா ஹா அட்டகாசம்..முதல்லயே படிக்காம போயிட்டேனே..நிஜமாகவே சூர்யா பார்த்து பரிதாபப் பட்டேன்..நல்ல நடிகர் இப்படி போய் மாட்டிக் கொண்டாரே என்று.. வெங்கட் பிரபு தம்பிக்கு வாய்ப்பு கொடுக்க நினைப்பதில் தவறில்லை..ஆனா அது பிரேம்ஜிக்கு வலு சேர்ப்பதை விட படத்துக்குப் படம் நம்மள எரிச்சலடைய வைக்குது ..வரிக்கு வரி உடன்படுகிறேன்..இதுக்கு காஞ்சனா 2 கூட திரும்பப் பார்த்துடலாம்..வித்தியாசமா பண்றதா சொல்லி கழுத்தறுத்துட்டாங்க நம்மையும் சூர்யாவையும்