இப்போ அப்போ என்று கண்ணாமூச்சி காட்டி விளையாடிய உத்தம வில்லன் இன்று 3மணி ஆட்டத்திற்கு வெளிச்சத்துக்கு வந்தார். கமல் படம் என்றாலே ஹைப் அதிகம் தான். அதிலும் அவர் குருநாதர் கேபியுடன் என்னும் போது கூடுதல் எதிர்ப்பார்ப்பு!
நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார் கமலஹாசன். அதுவும் இப்படத்தில் அவர் பாத்திரம் very close to his real life. இப்பட நாயகன் மனோரஞ்சனுக்கும் கமலஹாசனுக்கும் நிறைய parallel உள்ளது. அதனால் இப்படத்தைப் பார்க்கும்போது அவரைப் பற்றிய ஒரு பயோபிக் ( biopic) மாதிரியும் உணர்வதை தடுக்க முடியவில்லை.
நான் தான் சகலகலா வல்லவன் என்று அவர் அன்று பாடியது இன்று இப்படத்துக்குத் தான் மிகவும் பொருந்தும். அனாயாசமாக உணர்ச்சிகளைக் கொட்டுகிறார், பாடுகிறார், பல நடன வகைகளை நளினமாக ஆடுகிறார். கதை, திரைக் கதை வசனமும் அவரே! இயக்கம் ரமேஷ் அரவிந்த் என்று வந்தாலும் படம் முழுக்கக் கமலஹாசனே வியாபித்து இருப்பதால் இயக்கத்தை ரமேஷ் அரவிந்த் செய்திருப்பாரா அல்லது அவர் இயக்க ஏதாவது இருந்திருக்குமா என்பதும் சந்தேகமாக உள்ளது.
கேபியை மிகவும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார் கமல். முன்பு பொய் என்று ஒரு படம் அவர் நடிப்பில் வந்தது. மிகப் பெரிய disappointment அது. அதனால் இந்தப் படத்தில் பாலச்சந்தர் எப்படி செய்திருப்பாரோ என்று கொஞ்சம் அச்சமாகவே எனக்கு இருந்தது. ஆனால் அற்புதமாக நடித்திருகிறார். எப்படி இந்தப் படத்தில் கமல் almost தன் வாழ்க்கையைத் திரையில் வாழ்ந்திருக்கிறாரோ அதே போலத் தான் கேபியும் அவர் வாழ்க்கையை மார்க்கதரிசியாக வாழ்ந்திருக்கிறார்.
ஊர்வசி, K.விஸ்வநாத், இருவருக்கும் சின்ன சின்னப் பாத்திரங்கள் தான். ஆனால் பொருத்தமானப் பாத்திரத் தேர்வுகள். K. விஸ்வநாத் விக்ரமுடன் ராஜபாட்டை என்றொரு படத்தில் சிறிதும் பொருந்தா ஒரு ரோலில் நடித்திருப்பார். இதில் கம்பீரமாக வருகிறார்.
ஸ்பெஷல் மென்ஷன் to M.S.பாஸ்கர். எப்படி தேவர் மகனில் வடிவேலுவுக்கு மனத்தில் நிற்கும்படியான ஒரு பாத்திரம் அமைந்ததோ அது மாதிரி மிகவும் லேட்டானாலும் லேடஸ்டாக எம்.எஸ்.பாஸ்கருக்கு நினைவில் நிற்கும் சொக்கு செட்டியார் பாத்திரம் அமைந்துள்ளது. நடிகனின் மேனேஜராக வாழ்ந்திருக்கிறார் மனுஷன்.
கமல் படங்களின் செட் ப்ராபெர்டிகளான ஆண்ட்ரியாவும், பூஜா குமாரும் ஒகே. அதில் பூஜா பெட்டர், நடிப்பில் செயற்கை தன்மை இருப்பினும், நடனத்தில் ஸ்கோர் செய்கிறார். இன்னொரு கமல் பட ஆஸ்தான நடிகரான ஜெயராமன் மென்மையான நடிப்பில் மிளிர்கிறார்.
படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் இசை. ஜிப்ரான் பூந்து விளையாடி இருக்கார். பின்னணி இசை and பாடல்கள் இரண்டும் நன்று. ஒரு சின்ன ரோலில் வந்து போகிறார், அதே போல கு. ஞானசம்பந்தமும். இருவருக்கும் பதில் வேறு எவரேனும் வந்திருக்கலாம்.
இனி படத்தின் தொய்வுக்கானக் காரணத்தைப் பார்ப்போம். கதைக்குள் கதையாக வரும் கதை தான் இழுவை. படத்தில் பாலச்சந்தரே எந்தப் படத்துக்கும் கதை தான் முக்கியம் என்று ஒரு டயலாக் சொல்கிறார். பிறகு அத்தனை பெரிய நடிகரை ஒரு குழந்தைகள் கதை பட ரேஞ்சில் அவரே இயக்குவது விந்தையாக உள்ளது. சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டு எதுக்கு? எடிட்டிங் டேபிளில் அதன் தொடர்ச்சி கட் ஆகிவிட்டதோ? முழுதாகவே கட் பண்ணியிருக்கலாமே. நாசர் என்றொரு நல்ல நடிகரை இப்படி வீணடித்திருக்க வேண்டாம் கமல்! கதைக்குள் கதையில் அவர் வருவதால் வரும் சோகம் இது. அதில் எந்தப் பாத்திரத்தில் யார் வந்தாலும் சோபிக்காமல் போய் விடுகின்றனர்.
படத்தின் கரு சாகாவரம். அதற்கு இரண்டாம் கதை இல்லாமலே இன்னும் அழகான ஒரு திரைக்கதையை இயற்றி இருக்கலாம். படத்தில் பிராமணர்களைக் காட்டும் ஒரு காட்சி வருகிறது. மிக மிக அனாவசியமானக் காட்சி. கமலுக்கு அப்படிக் காட்டுவதில் எதோ கிக் வருகிறது என்று நினைக்கிறேன்.
படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லாதது ஒரு மகிழ்ச்சி.
Overdose of கமல் இப்படத்தின் ப்ளஸ் மற்றும் மைனஸ். அதன் குறைகளுடனே எனக்கு இந்தப் படம் பிடித்திருந்தது. பல இடங்களில் நெகிழ்ச்சி, கண்களைத் துடைத்துக் கொள்ளும் அளவுக்கு 🙂
May 02, 2015 @ 15:37:25
கமல், படத்தில் பெற்றுள்ள வெற்றி, நீங்கள் விமர்சனத்தில் பெற்றுள்ளதாக வைத்துக் கொள்ளலாம்.
மனிதன் உழைக்கிறார்;மதிக்கவேண்டும்.
May 02, 2015 @ 16:23:38
உண்மை தான் லக்ஷ்மணன், கமல் உழைப்புக்குக் குறை வைப்பதே இல்லை 🙂
May 02, 2015 @ 15:42:06
சிறப்பான விமர்சனம் அம்மா, கமல் படங்களில் நடிகர் தேர்வு கச்சிதமாக இருக்கும்.
May 02, 2015 @ 16:23:55
நன்றி பிரபா 🙂
May 02, 2015 @ 18:29:00
உங்கள் விமர்சனம் படிக்கும் முன்னமே படம் பார்க்க இயலாத துர்பாக்கியசாலி நான். இருந்தாலும் சீர்தூக்கி விமர்சனம் செய்யும் உங்கள் பாங்கு எனக்கு பிடிக்கும்.
“கமல் படங்களின் செட் ப்ராபெர்டிகளான : – கலகல
அதோடு நாசரையும் ஆஸ்தான நடிகர் என்று சொல்லியிருக்கலாம் 🙂
அருமை நன்றி வாழ்த்துகள்
May 03, 2015 @ 02:50:47
ஆமாம், தனித் தனியாக எழுதியதால் முடியவில்லை 🙂 🙂 மிக்க நன்றி 🙂
May 02, 2015 @ 20:14:50
Almost agreeing with all the lines. Kamal is the big plus and minus of the film. The UTTAMA VILLAIN inside the movie is a big let down for me. Instead he could have chosen to film his own life as a movie.
May 03, 2015 @ 02:49:58
agree with you fully. இன்னும் சுவாரசியமாகவும் உண்மையாகவே அவரின் சாகாவரத்துக்கு இது ஒரு படமாகவும் அமைந்திருக்கும்.
May 03, 2015 @ 08:28:39
அன்பே சிவம் இயக்கினது சுந்தர் C. அத்த நம்புறீங்க இத்த ரமேஷ் அரவிந்த் இயக்குனர்னா ஏன் நம்பமாட்டேன்ங்குறீங்க??
May 03, 2015 @ 11:16:18
கமல் நடிக்கும் எந்தப் படத்திலும் எல்லாத்துறையிலும் அவர் பங்களிப்பு அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே 🙂
May 03, 2015 @ 14:48:36
வணக்கம்
தங்களின் பார்வையில் விமர்சனம் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
May 04, 2015 @ 03:26:26
மிக்கக நன்றி ரூபன் 🙂
May 04, 2015 @ 05:46:51
Pramadhamana vimarsanam. Nee rasithu ennaiyum rasikkavaithai.
May 04, 2015 @ 08:50:06
thanks சுகன் 🙂
May 04, 2015 @ 08:01:40
நல்ல விமர்சனம். உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன். நானும் இதையொட்டித்தான் விமர்சனம் எழுதியிருக்கிறேன்.
ம்ருத்துஞ்சய பகபகபகபக.. உத்தம வில்லன் விமர்சனம்.. http://wp.me/pcpkB-bn
May 04, 2015 @ 08:49:46
read yours ஜிரா :-)) ROFL super 🙂
May 04, 2015 @ 17:16:41
Kamal,Balachander combination padam. I like your way of looking at every aspect of the picture.
May 05, 2015 @ 02:35:14
thank you Kamala 🙂
May 22, 2015 @ 16:03:52
அருமையான எழுத்து நடை. சமீபத்தில் தான் படம் பார்த்தேன் (படம் பார்க்கும் வரை எந்த விமர்சனத்தையும் படிப்பதில்லை என்ற உறுதியுடன்). கடைசி பத்தி just cut and paste.
May 25, 2015 @ 16:00:36
மிக்க நன்றி 🙂