முன்பே வந்த பல படங்களின் கலவை தான் இப்படம்! அதிலும் என்னை அறிந்தால், வேலாயுதம் சாயல் மிக அதிகம். ஆனால் விஜயின் பங்களிப்பால் பக்கா கமர்ஷியல் படமாக விஜய் ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி வந்துள்ளது.
நடனம், நடிப்பு, ஸ்டன்ட் காட்சிகள் அனைத்திலும் ரொம்ப ஈடுபாட்டுடன் உழைத்து செய்திருக்கிறார் விஜய். அதற்கு அட்லீயை பாராட்ட வேண்டும். விஜயின் 3 கெட் அப் சேஞ் பட ரிலீசுக்கு முன் பேசப்பட்ட அளவு படத்தில் மிகப் பெரிய மாற்றத்தைத் தந்ததாக எனக்குத் தோன்றவில்லை. 75%சதவிகிதம் அவருக்கு மிகப் பொருத்தமான போலிஸ் உடையிலும், பாடல்களில் அதற்கேற்றார் போன்ற உடைகளிலும் வருகிறார். படம் முழுவதும் மிகவும் ஸ்மார்ட்டாகவும் ஸ்டைலிஷ் ஆகவும் வருகிறார்.
சமந்தா முந்தைய படங்களை விட நன்றாக நடித்து, இன்னும் அழகாகவும் மாறி உள்ளார். எமி ஜேக்சனுக்கு மிகச் சிறிய பாத்திரம். நைநிகா பேசுவது அழகாக இருந்தாலும் வயதுக்கு மீறிய பேச்சாக பல இடங்களில் உள்ளது, தவிர்த்திருக்கலாம். ஆனால் கொஞ்சம் கூட பயமில்லாமல் மிக மிக இயல்பாக நடித்திருக்கிறாள்.
இந்தப் படத்தின் ஷோ ஸ்டீலர் வில்லனாக வரும் இயக்குநர் மகேந்திரன். செம வில்லனாக உள்ளார். உடல் மொழியே அவரை அரசியல்வாதி என்று சொல்கிறது. கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சிறப்பாக செய்துள்ளார். இதுவரை இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர்களில் இவர் டாப்பில் வருகிறார். இவர் நடிப்பால் அவரை எதிர்க்கும் பாத்திரத்தில் வரும் விஜயின் நடிப்பிலும் மெருகு கூடியுள்ளது.
ஆனால் ஒரே மாதிரி கதை சலிப்பைத் தருகிறது. மேலும் படத்தின் நீளமும் வெகு அதிகம். இரண்டு டூயட்களை கட் பண்ணியிருக்கலாம். அவை படத்தில் தொய்வை உண்டு பண்ணுகிறது. ப்ளாஷ் பேக்கில் கதை விரியும் போது நமக்கு எந்த சஸ்பென்சும் இல்லை, பட ஆரம்பத்திலேயே தந்தையும் மகளும் தனியாக இருப்பது அவர் குடும்பத்துக்கு என்ன ஆகியிருக்கும் என்று ஊகிக்க வைத்து விடுகிறது.
ஜி.வி.பிரகாஷின் சில பாடல்கள் நன்றாக உள்ளன. பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. மிகப் பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவு. கண்ணுக்கு விருந்து. அனால் அதே சமயம் கலை காலை வாரி விட்டிருக்கிறது. பல இடங்களில் செட்கள் கண்ணை உறுத்துகின்றன.
நிர்பயா கேஸ் போன்ற ஒரு ரேப், அதன் பின் அந்தப் பெண்ணின் மரணம் என்று ஒரு சம்பவம் வருகிறது. அந்த விசாரணையில் பேசப்படும் விஷயங்கள் கண்டிப்பாக குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அல்ல. U சான்றிதழ் கொடுக்கப்பட்டாலும் பெற்றோர்கள் கவனத்திற்கு இதை சொல்கிறேன்.
விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக மகிழும் அளவு படம் வெளி வந்திருக்கிறது.
Apr 14, 2016 @ 14:54:24
படத்தோட விஷுவல்ஸ் போஸ்டர்ல பாக்குறப்போ பளிச்சுன்னு இருக்கு. விமர்சனத்துலயும் அதான் சொல்லிருக்கீங்க.
மகேந்திரன் நல்லா நடிக்கலைன்னாதான் ஆச்சரியப்படனும்.
விமர்சனத்துல நீங்க சொல்ல வந்தது தெளிவாப் புரிஞ்சது.
Apr 15, 2016 @ 17:33:31
நன்றி ஜிரா, முதல் பின்னூட்டம் :-}
Apr 14, 2016 @ 15:27:30
Padam partha niraivu 🙂
Apr 15, 2016 @ 17:33:04
நன்றி சுகன் :-}
Apr 14, 2016 @ 16:17:10
>>அனால் அதே சமயம் கலை காலை வாரி விட்டிருக்கிறது
குட் 1
@ ஜிரா
விமர்சனத்துல நீங்க சொல்ல வந்தது தெளிவாப் புரிஞ்சது..ஹிஹி என்ன புரிஞ்சுது?
Apr 15, 2016 @ 17:32:44
தலைவா நன்றி :-}
Apr 14, 2016 @ 16:37:18
நன்றி மேம். இவங்க பண்ணின ஆர்ப்பாட்டத்துக்கு அப்படி ஒன்னும் வொர்த்தில்லை போல. சுமாரான படம் என்று தெரிகிறது :))
“முன்பே வந்த பல படங்களின் கலவை தான் இப்படம்! அதிலும் என்னை அறிந்தால், வேலாயுதம் சாயல் மிக அதிகம்”
.
“ஆனால் ஒரே மாதிரி கதை சலிப்பைத் தருகிறது. மேலும் படத்தின் நீளமும் வெகு அதிகம். இரண்டு டூயட்களை கட் பண்ணியிருக்கலாம். அவை படத்தில் தொய்வை உண்டு பண்ணுகிறது”
சூது கவ்வும், சதுரங்கவேட்டை, ஜிகிர்தண்டா, கக்காமுட்டை, இறுதிசுற்று போன்ற சமீபத்திய லோ பட்ஜெட் படங்களை பார்த்த கண்களுக்கு வேறு எதையும் பார்க்க பிடிக்கல 😦
ஏன்தான் இவ்வளவு செலவு செய்து பிரமாண்டமா எடுத்து சொதப்புறாங்களோ. டிக்கட் விலை 500 வரை விற்கபடுகிறது 😦
எப்படித்தான் நேரம் ஒதுக்கி படம் பார்த்து உடனே விமர்சனம் செய்ய உங்களால் முடிகிறதோ. வியக்கேன் :))
நன்றி வாழ்த்துகள்.
Apr 14, 2016 @ 16:39:21
மேலே சொன்ன கருத்து ஏனோடது என்னோடது என்னோடது
@chinnapiyan
Apr 14, 2016 @ 16:41:50
மேலே சொன்ன கருத்து என்னோடது என்னோடது என்னோடது !
என் பெயர் இல்லாமல் வந்துவிட்டது 😦
@chinnapiyan
Apr 15, 2016 @ 17:32:20
நன்றி சின்னப்பையன். உங்கள் பெயர் வராவிடினும் உங்கள் எழுத்தின் ஸ்டைல் உங்களை காட்டிக் கொடுத்துவிடும் :-}
Apr 14, 2016 @ 18:33:54
இயக்குனர் தான் பார்த்து, தனக்கு பிடித்த படங்களின் காட்சிகளை எல்லாம் ஒன்று சேர்த்து படமாக்கிவிட்டார். ஆனால், என்ன பழைய க்ளாஸ் காட்சிகளை மிக கமர்ஷியலாக்கி கொடுத்திருக்கிறார். எந்த காட்சிகளையும் நீட்டி ஆராய்ச்சி செய்யவில்லை அதனால் படத்தின் மேல் வெறுப்பும் வரவில்லை அதே சமயம் ஈடுபாடும் வரவில்லை. ஒளிப்பதிவு சுகம். நிறைய சத்ரியன், ஒரு சில மெளனராகம், ஒரு கஜினி படக்காட்சிகள் என் நினைவிலாடியது.
Apr 15, 2016 @ 17:31:11
ஆம் தேவா :-}
Apr 15, 2016 @ 10:58:03
hmm…pinpula palam irunthaal..entha certificate-m vaanki pudalaam..
Apr 15, 2016 @ 17:31:28
ம்ம்…